Published:Updated:

உப்புத் தண்ணீராக மாறிய நீர்நிலைகள்! நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் நேர்ந்த கொடுமை

உ.பாண்டி
சண்முகபாண்டியன்.தே
உப்புத் தண்ணீராக மாறிய நீர்நிலைகள்! நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் நேர்ந்த கொடுமை
உப்புத் தண்ணீராக மாறிய நீர்நிலைகள்! நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் நேர்ந்த கொடுமை

ராமநாதபுரம் மாவட்டம்,  பனைக்குளம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் கிராம நீர்நிலைகளை உப்புத் தன்மைக்கு உள்ளாக்கிய சௌத் கங்கா நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிராக, கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உப்புத் தண்ணீராக மாறிய நீர்நிலைகள்! நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் நேர்ந்த கொடுமை

பனைக்குளம் ஊராட்சியில் உள்ள நீர்நிலைகள் சுத்தமான குடிநீரைக் குறைவின்றி வழங்கிவந்தன. இங்கு, சௌத் கங்கா நீர் சுத்திகரிப்பு நிலையம் வந்த பிறகு, நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. கடல் நீரை சுத்திகரிப்பு செய்யும் இந்த நிறுவனம், உப்பு நீரை கிராமத்துக்குள் வெளியேற்றியதன் விளைவாக, நீர்நிலைகள் அனைத்தும் உப்புத்தன்மைக்கு உள்ளாகியுள்ளன. மேலும், பலருக்கு சிறுநீரக பாதிப்பு வந்துள்ளது. இரண்டு பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பனைக்குளம் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சௌத் கங்கா நீர் சுத்திகரிப்பு நிலையத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர், நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகங்களின் செயல்பாடுகுறித்து பொது விசாரணை நடத்தக் கோரியும், தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் பனைக்குளம் கிராம மக்களும் இணைந்து, இந்த போராட்டத்தை நடத்திவருகின்றனர்.