Published:Updated:

நடிகர் சிவாஜி கணேசனோடு மோதிய ஜெகனை நினைவிருக்கிறதா ?

நடிகர் சிவாஜி கணேசனோடு மோதிய ஜெகனை நினைவிருக்கிறதா ?
நடிகர் சிவாஜி கணேசனோடு மோதிய ஜெகனை நினைவிருக்கிறதா ?

டிகர் ஶ்ரீகாந்த்தைத் தெரிகிறதா அல்லது நினைவில் வைத்திருக்கிறதா என்று கூகுளாண்டவனிடம் கேட்டால், அவர் 'ரோஜாக்கூட்டம்' ஶ்ரீகாந்த்தைக் காட்டுகிறார். அவரோ,  போட்டோ ஷூட்டில் பூமிகாவுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார். நாம் தேடியது, எஸ்.பி. சௌத்ரி (நடிகர் திலகத்தி) யின்  மகனாக, வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக 1974-ல் 'தங்கப்பதக்கம்' படத்தில் கர்ஜித்த அந்த ஜெகனை...

இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலில் ஹீரோவாக நடித்து, 1978-ல் வெளிவந்த 'பைரவி' யில். அவரோடு மோதிய அந்தப் பண்ணையார் ராஜலிங்கத்தைதான்... 'வெண்ணிற ஆடை' என்ற படத்தின்மூலம் 1965-ல் இயக்குநர் ஶ்ரீதர் மூன்று பேரை அறிமுகம் செய்தார். அதில் நிர்மலாவுக்கும் மூர்த்திக்கும் படத்தின் பெயரான 'வெண்ணிற ஆடை' அடையாளமாக ஒட்டிக்கொண்டது. அப்படி படத்தின் பெயர் ஒட்டாமல் வெளிவந்த அந்த ஶ்ரீகாந்த்தைத்தான் நாம் தேடியது.

அவர், நேற்றுதான் தன்னுடைய சதாபிஷேக விழாவை மிக எளிமையாக வீட்டில் கொண்டாடியிருக்கிறார். அந்த நாள் கர்ஜனை சிங்கத்துக்கு, நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ வாழ்த்தியும் ஆசிபெற்றும் மகிழ்ந்துள்ளனர். இருந்தாலும் அங்கே ஶ்ரீகாந்த்தின் நெருங்கிய தோழன், அமரன் ஜே.கே. இல்லாதது ஒன்றுதான் ஜெகனின் பெரும் குறையாக இருந்திருக்கக்கூடும். வாழ்த்துகள் ஜெகன் சார்!