Published:Updated:

பழிக்குப் பழி தீர்வல்ல... நச் என உணர்த்திய 5 படங்கள்! - வாசகர் பார்வை #MyVikatan

Revenge - Representational Image ( Pixabay )

இப்படி, சமூகத்தால் விமர்சிக்கப்படும் இளைஞர்கள், சமூகத்தைப் பார்க்கும் விதமும் வித்தியாசமாக இருக்கும்.

பழிக்குப் பழி தீர்வல்ல... நச் என உணர்த்திய 5 படங்கள்! - வாசகர் பார்வை #MyVikatan

இப்படி, சமூகத்தால் விமர்சிக்கப்படும் இளைஞர்கள், சமூகத்தைப் பார்க்கும் விதமும் வித்தியாசமாக இருக்கும்.

Published:Updated:
Revenge - Representational Image ( Pixabay )

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

'ரயில்வே ஸ்டேஷனில் பட்டா கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள்' என்ற செய்தியை அனைத்து நீயூஸ் சேனல்களிலும் சில வருடங்களுக்கு முன்பு பார்க்க நேர்ந்தது. அவர்களை புள்ளீங்கோ என்றும், இந்த இளைஞர்களை யாராலும் கையில் பிடிக்க முடியாது என்றும் இந்த சமூகம் அவர்களை விமர்சித்தது. அதுங்க அப்படித்தான் என்று அவர்களை காமெடி பீஸ்ஸாக்கி ஹாஹா ரியாக்ஷன்களை அள்ளித் தெளித்தது சமூக வலைதளம். அவர்களை தம் வீட்டுப் பிள்ளையாக யாரும் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அவர்களை இப்படி கலாய்த்து இருக்கமாட்டார்கள். இப்படி, சமூகத்தால் விமர்சிக்கப்படும் இளைஞர்கள், சமூகத்தைப் பார்க்கும் விதமும் வித்தியாசமாக இருக்கும். ரியல் சமூகம் இப்படி இருக்க, இளைஞர்களை நல்வழிப்படுத்த எடுக்கப்பட்ட ஐந்து நல்ல திரைப்படங்களை பார்க்கலாம்.

பரியேறும் பெருமாள்
பரியேறும் பெருமாள்

1. பரியேறும் பெருமாள்

தன் அப்பாவை நடுரோட்டில் அவமானப்படுத்தி ஓட வைத்து மருத்துவமனைப் படுக்கையில் வீழ்த்திய சாதிவெறி பிடித்த மாணவர்களை குத்திக் கிழிக்க பரியன் கத்தியை கையில் எடுப்பான். அப்போது, பரியனின் அம்மா "ஐயா... இது நமக்கு ஆகாதுய்யா... இத கீழ போடு... நீ படிச்சு மேல வா... என் ராசா..." என்று சொல்வார். அதே படத்தில் இன்னொரு வசனம் கூட வரும். "அன்னைக்கு என்னைய அடக்கணும்னு நினைச்சவனுங்க இன்னைக்கு எனக்கு சலாம் போடுறானுங்க... அதுக்கு காரணம் நான் பேய் மாதிரி படிச்சேன்…" என்று சொல்லும் பேராசிரியரின் வசனமும் நினைவுகூரத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2. சாம்பியன்

வட சென்னை இளைஞர்கள் என்றாலே அவர்கள் தவறானவர்களாகத்தான் இருப்பார்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இந்தச் சமூகத்தில் அந்தப் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் தங்களை சாம்பியனாக அடையாளப்படுத்த எவ்வளவு சிரமப்படுத்துகிறார்கள் என்று அழுத்தமாகச் சொன்ன படம். தன்னுடைய மாணவன் உயிர் பறிபோகும் நிலையிலும் கொலைகாரனாக ஆக கூடாது என்று "கத்திய கீழ போடு..." என்று நான்கைந்து முறை அதட்டிவிட்டு முடியாத சூழலில் அவனிடம் இருக்கும் கத்தியை பிடுங்கி மாணவனுக்காக கொலைகள் செய்து சிறைக்குச் செல்கிறார் குருநாதர். வட சென்னை இளைஞர்களின் முதுகில் குத்தியிருக்கும் வன்முறை என்ற அடையாளத்தை கலைக்க முயன்ற படத்தைத் தந்ததற்காக இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி.

விக்ரம் - தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தின் ஸ்டில்ஸ்..!
விக்ரம் - தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தின் ஸ்டில்ஸ்..!

3. ஸ்கெட்ச்

படத்தின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், இந்தப் படத்தின் கிளைமேக்ஸூக்காக ஸ்கெட்ச் படத்தை லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு இளைஞர்கள் விக்ரமை கத்தியால் குத்தி "நாங்களும் உன்ன மாதிரி பெரிய ரவுடி ஆகணும்... நாங்க ரவுடி ஆகணும்னா நீ சாகணும்..." என்று சொல்லி கீழே சாய்ப்பார்கள். சரியாக அந்த நேரம் பார்த்து போலீஸ் வண்டி வர இளைஞர்கள் பதற இளைஞர்களின் கைரேகை பதிந்த கத்தியை எடுத்து அதில் உள்ள இளைஞர்களின் கைரேகையே தன் சட்டையில் துடைப்பார் விக்ரம். படிக்க வேண்டிய வயதில் கத்தியை தூக்க விக்ரம் மறுத்தது புரியவர ஒரு இளைஞர் குத்துப்பட்ட விக்ரமை பார்த்து தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று மனம் வருந்துவார்.

4. மகாமுனி

புத்தக வாசிப்பாளர்கள் அதிகம் விரும்பிய படம். இந்தப் படத்தில் டியூசன் வாத்தியாராக நடித்த ஆர்யாவுக்கு முன்பு சில இளைஞர்கள் பேஸ்புக்கில் உள்ள சாதிப்பெருமை வீடியோவை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்போது வீரன், கோழை, பாசாங்குகாரன் என்ற மூன்று வார்த்தைகளுக்கும் விளக்கம் அளிப்பார் ஆர்யா. படிப்பவன்தான் வீரன், பேஸ்புக்கில் சாதிப் பெருமை பேசுவது வீணா போனவன் செய்யும் வேலை என்பது இயக்குநரின் கருத்தாக இருக்கும். படமும் சமாதானத்தைப் பேசியிருக்கும்.

அசுரன் - தனுஷ்
அசுரன் - தனுஷ்

5. அசுரன்

"அழியாத செல்வம் கல்வி" என்ற திருக்குறள் வரியை வைத்து "நிலம் இருந்தா பிடுங்கிக்குவானுங்க... காசு இருந்தா எடுத்துக்குவானுங்க... ஆனா படிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது... இவனுங்களலாம் எதித்து நிக்கணும்னா... நல்லா படி... படிச்சு ஒரு அதிகாரத்துக்கு வா... அவிங்க உனக்கு பண்ணத நீ யாருக்கும் பண்ணாம இரு..." என்று சிதம்பரத்துக்கு சிவசாமி சொல்வது இன்றைய இளைஞர்களுக்காக வெற்றிமாறன் சொல்லுவது. மேற்கண்ட எல்லா படங்களையும் விட கத்தியை தொடாதே என்பதை அழுத்தமாகச் சொன்ன படம் அசுரன். அப்படி இருந்தும் சிலர் திருந்துவதாக இல்லை. சாதிக்கொரு நிறத்தில் டீசர்ட்டும், கலர் கயிறுகளும் கட்டிக்கொண்டு திரிகிறார்கள் சில இளைஞர்கள். அவர்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள் சில சாதி வெறியர்கள்.

"புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடா" என்று தேவர்மகன் கமல் சொன்னதை தான் மேற்கண்ட படங்களில் வெவ்வேறு முறையில் சொல்லி இருக்கிறார்கள். எவ்வளவு காலம் ஆனாலும் நெகிழியைப் போல சாதி உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. 'வீர வம்சம்டா' என்று சாதியை கெத்தாக நினைத்து இன்றைய இளைஞர்கள் கத்தியை தூக்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த இளைஞர்கள் அனைவரும் மேற்கண்ட இந்தப் படங்களைக் கண்டிப்பாக ஒருமுறையாவது பார்க்க வேண்டும். "பட்டா கத்தியை தூக்குவது ஹீரோயிசம் அல்ல... பச்சை இங்கில் கையெழுத்து போடுவதுதான் ஹீரோயிசம்..." என்பது சில பொறுப்பற்ற இளைஞர்களுக்கு எப்போதுதான் புரிய போகிறதோ?

- யுவராஜ் மாரிமுத்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/