Published:Updated:

கமலும் சஞ்சய் லீலா பன்சாலியும் இணைந்தால் எப்படி இருக்கும்? #MyVikatan

Vikram - கமல், லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தை பார்த்ததும் "எப்படி இருந்த மனுசன இப்படி ஆக்கிட்டிங்களேடா" என்று தான் சொல்ல தோன்றுகிறது. "உடைந்த வீரனே" என்ற வரி இன்றைய கமலுக்கு பொருத்தமாக இருந்தது!

கமலும் சஞ்சய் லீலா பன்சாலியும் இணைந்தால் எப்படி இருக்கும்? #MyVikatan

விக்ரம் படத்தை பார்த்ததும் "எப்படி இருந்த மனுசன இப்படி ஆக்கிட்டிங்களேடா" என்று தான் சொல்ல தோன்றுகிறது. "உடைந்த வீரனே" என்ற வரி இன்றைய கமலுக்கு பொருத்தமாக இருந்தது!

Published:Updated:
Vikram - கமல், லோகேஷ் கனகராஜ்

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தபோது. "உனக்கு என்ன வேணும்?" என்று நான் ஆசைப்பட்டதை கேட்டார் அப்பா.

நான் டிவிடி பிளேயர் வேண்டுமென்று சொல்ல அதை ரூ. 2600 கொடுத்து வாங்கி வந்தார். அத்துடன் கமல் நடித்த "வறுமையின் நிறம் சிவப்பு" பட கேசட்டையும் வாங்கி வந்திருந்தார். அப்பாவும் நானும் முதன்முறையாக ஒன்றாக சேர்ந்து பார்த்த படம் "வறுமையின் நிறம் சிவப்பு". அப்போது முதலே கமலின் தீவிர ரசிகன் நான்.

விக்ரம் - நடிகர் கமல்
விக்ரம் - நடிகர் கமல்
FAHADYUNUS

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஸ்வரூபம் பாகம் 2 வெளியான அதே தியேட்டரில் தான் விக்ரம் படம் பார்த்தேன். விஸ்வரூபம் பாகம் - 2 முதல் நாள் முதல் காட்சிக்கு வெறும் பத்து பேர் தான் வந்திருந்தார்கள். ஆனால் அதே தியேட்டரில் விக்ரம் படம் ரிலீசான ஏழாவது நாள் மாலைக்காட்சிக்கு கிட்டத்தட்ட இருநூறு பேர் வந்திருந்ததை பார்க்கும்போது மனதின் ஓரம் மகிழ்ச்சியுணர்வு எட்டிப்பார்த்தது! படத்தில் ஐந்து நிமிடங்களே வரும் சூர்யாவுக்கு மிகப்பெரிய கட்அவுட் வைத்திருந்தார்கள் "அன்பான fans". அப்படிபட்ட சூர்யா ரசிகர்களின் ஆதரவை பார்த்தபோது பரவாலயே என்று நினைத்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஹேராம், விருமாண்டி போன்ற அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு "விக்ரம்" படத்திற்கு கிடைத்த மாதிரியான வரவேற்பு கிடைத்திருந்தால் தமிழ் சினிமாவின் தரம் பலபடி உயர்ந்திருக்கும்.
யுவராஜ் மாரிமுத்து

விக்ரம் படத்தை பார்த்ததும் "எப்படி இருந்த மனுசன இப்படி ஆக்கிட்டிங்களேடா" என்று தான் சொல்ல தோன்றுகிறது. "உடைந்த வீரனே" என்ற வரி இன்றைய கமலுக்கு பொருத்தமாக இருந்தது!

sanjay leela bhansali
sanjay leela bhansali

சமீபத்தில் வெளியான RRR, KGF-2 படங்களை ஆஹா ஓஹோவென கொண்டாடி ஆயிரம் கோடி வசூலிக்க வைத்த ரசிகர்களை பார்த்தபோது வருத்தமாக இருந்தது. அந்த இரண்டு படங்களை விட என்னை அதிகம் பிரமிக்க வைத்தது சஞ்சய் லீலா பன்சாலியின் "பத்மாவத்" படம் தான். மேக்கிங், பின்னணி இசை, பாடல்கள் (மிஸிரியா பாடலை தியேட்டரில் கேட்கும்போது சிலிர்த்துவிட்டது. கணித்தது போலவே அந்தப் பாடல் தேசிய விருது வாங்கியது), நடிகர்களின் ஆத்மார்த்தமான நடிப்பு என்று அனைத்திலும் மிரட்டியிருப்பார்கள் படக்குழு.

அப்போது முதலே கமலும் சஞ்சய் லீலா பன்சாலியும் இணைந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை. பன்சாலி, கமல் இருவரின் படைப்புகளும் சர்ச்சைகளை சந்திக்காமல் ரிலீஸ் ஆனதில்லை. அப்படி சர்ச்சையை சந்தித்த படைப்புகள் காலம் கடந்த பேசப்படக் கூடிய படைப்புகளாக இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். பன்சாலியின் படைப்புகள் ஒவ்வொன்றும் தேசிய அளவில் பேசப்படுபவை என்பதால் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு வரலாற்று புனைவு படம் எடுத்து உண்மையான பிரம்மாண்டம் எது என்று இன்றைய ரசிகர்களுக்கு காட்ட வேண்டும்! (தென்னிந்திய இயக்குனர்களைவிட வட இந்திய இயக்குனருக்கு தான் திறமை அதிகம் என்று சொல்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்). "ஆண்டவர்" புண்ணியத்தில் அது நடந்தால் மகிழ்வேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism