Published:Updated:

இப்படியும் கூட கூறலாமோ காதலை?!

கடலோரக் கவிதைகள் ரேகா ( Picasa )

இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ வழிகளில் காதலை வெளிப்படுத்த வழிமுறைகள் உருவாகி விட்டன. வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய காட்சியைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

இப்படியும் கூட கூறலாமோ காதலை?!

இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ வழிகளில் காதலை வெளிப்படுத்த வழிமுறைகள் உருவாகி விட்டன. வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய காட்சியைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

Published:Updated:
கடலோரக் கவிதைகள் ரேகா ( Picasa )

தமிழ் சினிமாவில் எத்தனையோ விதமான காதலை காட்டி விட்டார்கள். ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள் அத்தனை விதமான காதலையும். கடித காதல், இணையவழி காதல், பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல், சொல்லாமலே காதல் என வகைவகையான காதல்களை காட்டி விட்டார்கள். இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ வழிகளில் காதலை வெளிப்படுத்த வழிமுறைகள் உருவாகி விட்டன. வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய காட்சியைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

Representational Image
Representational Image

பொதுவாகவே விஞ்ஞானிகள் என்றால் 'குடும்பத்தைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள் ' என்கிற பிம்பத்தை உடைத்தவர் பரிணாம கொள்கையை கூறிய டார்வின் அவர்கள். ' நீ என்னைக் கவனித்துக் கொள்வாய் ' என்றால், அதற்காகவே நான் நோய் வாய்ப்பட்டு கிடைக்கத் தயார் ' என்று மரணப் படுக்கையிலும் தன் மனைவியிடம் காதல் மொழி பேசியவர்.

டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை இங்கிலாந்திலுள்ள தேவாலயங்கள் கண்டித்தன. ஆனால், 150 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேவாலயங்கள், தான் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்டது. "டார்வினிசம்" என்ற புதிய சிந்தனை உருவாகக் காரணமான டார்வின், பகுத்தறிவு பிரசாரம் செய்தவரல்ல; ஆனால் உலகம் முழுக்க பகுத்தறிவுப் பிரசாரம் செய்வதற்காக டார்வினே ஆயுதம்!

இப்படியாக சாமானிய மனிதர் துவங்கி விஞ்ஞானி வரை காதல் என்பது அற்புதமான உணர்வு.

வில்லனாக அறிமுகமாகி எண்ணற்ற படங்களில் நடித்த நடிகர் சத்யராஜ் வெகு நாட்களுக்கு பிறகு கதாநாயகனாக நடித்த படம் "கடலோரக் கவிதைகள்". தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம். சத்யராஜ், ரேகா, ராஜா, ஜனகராஜ், கமலா காமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இத்திரைப்படம், சிரஞ்சீவி, சுஹாசினி நடிப்பில் "ஆராதனா" என தெலுங்கில் ரீ மேக் செய்யப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடலோரக் கிராமத்தில் எழுதப் படிக்க தெரியாத ரவுடியாக இருக்கும் தாஸ் என்ற சத்தியராஜ் , அந்த ஊருக்கு ஜெனிபர் எனும் டீச்சராக வரும் ரேகாவிடம் படிக்க போகும் காட்சியென விரியும் திரைப்படத்தில், படம் ஆரம்பித்து ஏறத்தாழ ஐம்பது நிமிடங்களை கடந்து விட்ட பிறகு சின்னப்பதாஸாக வரும் சத்யராஜ், டீச்சராக உள்ள ஜெனிபர் வீட்டிற்கு வருவார், அங்கே சில ஆடுகளுடன் உள்ள யேசு கிறிஸ்துவின் படத்தினை பார்த்து, ரேகாவிடம் "டீச்சர்... யேசு நாதருக்கும் என்னய மாதிரி படிக்காமல் ஆடுதான் மேய்த்தாரா, கையில வேறு ஒரு குட்டி ஆடு?" என கேட்பார்.

கடலோரக் கவிதைகள்
கடலோரக் கவிதைகள்

அதற்கு ஜெனிபர் டீச்சர்,

"தாஸ் அவை வழி தவறிய ஆடுகள் அவைகளை யேசு நன்றாக பார்த்துக் கொண்டதால் 'குட் ஷெப்பர்ட்' என்ற பெயர் உண்டென’’ கூற, சத்யராஜ், ``அப்படீனா’’ என எதிர்க் கேள்வி கேட்க, அவர் ஒரு நல்ல மேய்ப்பர் என கூறிட, சத்யராஜ் சிரித்தபடி

அப்படீனா அவரும் என்னய மாதிரிதான் என்று கூறிட, ரேகா 'ஏன், தாஸ் அந்த ஆடு ஒரு வேள உன்னிடம் வந்தால் நீ என்ன செய்வாய்?' என கேட்க, அடுத்த நொடியே சத்யராஜ், 'என்னிடம் வந்தால் பட்டை, கிராம்பு எல்லாம் போட்டு பிரியாணிதான் ' என்று சிரித்த படி கூறிட, வேறு பக்கமாக திரும்பி நின்றபடி ரேகா 'ஏன்....தாஸ் அதுவே இந்த ஜெனிபராக இருந்தால், நானாக இருந்தால்?! என எதிர்க் கேள்வி கேட்க அடுத்த நொடியே அதிர்ச்சியாக நிற்கும் சத்யராஜ்.... என வெகு அழகாக, வெகு வித்தியாசமாக காதலை ஜெனிபர் டீச்சர் சின்னப்பதாஸிடம் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

காட்சியமைப்பு, வசனம் என அனைத்துமே மிக வித்தியாசமாக காதலை வெளிப்படுத்தும் காட்சியாக உருவாகியிருக்கும். இப்படிக் கூட காதலை அழகாக வெளிப்படுத்த இயலுமா என சிந்திக்க வைக்கும் அழகிய காட்சியது .

-வீ.வைகை சுரேஷ்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.