Published:Updated:

`பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளோம்’ - நடிகை அபிராமி நெகிழ்ச்சி அறிவிப்பு

அபிராமி

``நானும் ராகுலும் இதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு பெண் குழந்தைக்கு நானும் அவரும் தாய், தந்தையாக மாறியுள்ளோம். கடந்த வருடம் இவளை நாங்கள் தத்தெடுத்துக்கொண்டோம். இவள் எல்லா விதத்திலும் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டாள்.’’

Published:Updated:

`பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளோம்’ - நடிகை அபிராமி நெகிழ்ச்சி அறிவிப்பு

``நானும் ராகுலும் இதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு பெண் குழந்தைக்கு நானும் அவரும் தாய், தந்தையாக மாறியுள்ளோம். கடந்த வருடம் இவளை நாங்கள் தத்தெடுத்துக்கொண்டோம். இவள் எல்லா விதத்திலும் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டாள்.’’

அபிராமி

தமிழில் ’மிடில் கிளாஸ் மாதவன்’, ’விருமாண்டி’, ’சமுத்திரம்’, ’நித்தம் ஒரு வானம்’ போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை அபிராமி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரபல எழுத்தாளரான பவணனின் பேரன் ராகுல் பவணனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு படங்களில் அதிகமாக நடிக்காமல் சினிமாத்துறையை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை அபிராமி, சமீபகாலமாக வெப் சீரிஸ்களில் தலைகாட்டி வருகிறார்.

அபிராமி
அபிராமி

இந்நிலையில் இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தானும் தன் கணவரும் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``நண்பர்களே நானும் ராகுலும் இதனை அறிவிப்பதில் சிலிர்ப்படைகிறோம். ஒரு பெண் குழந்தைக்கு நானும் அவரும் தாய், தந்தையாக மாறியுள்ளோம். கடந்த வருடம் இவளை நாங்கள் தத்தெடுத்துக்கொண்டோம். இவள் எல்லா விதத்திலும் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டாள்.

புதிய தாயாக இந்த அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். எங்கள் வாழ்க்கையின் இந்தப் புதிய அத்தியாத்துக்கு உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் வேண்டும்” எனப் பதிவிட்டதோடு அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகளைக் கூறி தங்கள் மகளுக்கு `கல்கி’ எனப் பெயர் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த அறிவிப்புக்கு சமூகவலைதளங்கள், சினிமாத் துறையினர், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகை அபிராமி தற்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கும் `கருடன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை மலையாள நடிகர் மனோஜ் ரவியின் உதவியாளர் அருண் வர்மா இயக்குகிறார். இதில் அபிராமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.