Published:Updated:

”என்னைத் தொந்தரவு செய்த தமிழ் வில்லன் நடிகர், நான் பேசியதைப் பார்த்தால்...” - அஞ்சலி நாயர்

அஞ்சலி நாயர்

”தமிழ் வில்லன் நடிகர் என்னைக் காதலிப்பதாகக்கூறி தொடர்ந்து தொந்தரவு செய்தார். போலீஸ் கமிஷனராக இருந்த ஹீரோவின் அப்பாதான் பிரச்னையை சரிசெய்தார். தற்போது, அந்த வில்லன் நடிகர்...” - நடிகை அஞ்சலி நாயர் பேட்டி

Published:Updated:

”என்னைத் தொந்தரவு செய்த தமிழ் வில்லன் நடிகர், நான் பேசியதைப் பார்த்தால்...” - அஞ்சலி நாயர்

”தமிழ் வில்லன் நடிகர் என்னைக் காதலிப்பதாகக்கூறி தொடர்ந்து தொந்தரவு செய்தார். போலீஸ் கமிஷனராக இருந்த ஹீரோவின் அப்பாதான் பிரச்னையை சரிசெய்தார். தற்போது, அந்த வில்லன் நடிகர்...” - நடிகை அஞ்சலி நாயர் பேட்டி

அஞ்சலி நாயர்
”தமிழ் படத்தில் நடிக்கும்போது வில்லன் நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்கமுயன்றார்” என்று நடிகை அஞ்சலி நாயர் சமீபத்தில் பேசியது, யார் அந்த வில்லன் நடிகர் என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம்வரும் அஞ்சலி நாயர், ‘த்ரிஷயம் 2’ படத்தில் புலனாய்வு போலீஸாக நடித்து தமிழக மக்களிடமும் பாராட்டுகளைக் குவித்தார். தமிழில் ‘அண்ணாத்த’, ‘மாமனிதன்’ உள்ளிட்டப் படங்களிலும் கவனம் ஈர்த்தார். இவரது நடிப்பில் விரைவில் தமிழில் ‘சேதுபதி’ பட இயக்குனர் அருண் இயக்கிவரும் படமும் மலையாளத்தில் 6 படங்களும் வரிசைக்கட்டி நிற்கும் சூழலில், வில்லன் நடிகர் மீது குற்றச்சாட்டை வீசிய அஞ்சலி நாயரை தொடர்புகொண்டு பேசினேன்,

அஞ்சலி நாயர்
அஞ்சலி நாயர்

”எனக்கு அப்படியொரு விஷயம் நடந்தது உண்மைதான். ஆனால், அந்த வில்லன் நடிகர் என்னைக் காதலிப்பதாக கூறினார். நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்தார். நான், நடித்த முதல் படத்திலேயே இப்படியொரு தொந்தரவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்தின் ஹீரோவின் அப்பா காவல்துறை அதிகாரிதான். அவரிடம் முறையிட்டு, அப்போதே அந்தப் பிரச்சனையை சரிசெய்தேன். தற்போது, எனக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த நடிகருக்கும் திருமணமாகிவிட்டது.

மலையாளத்தில் ஒரு ஷோவுக்கு நான் கெஸ்ட்டாக போகும்போது, என்னுடைய சினிமா வாழ்க்கையின் நினைவுகள் குறித்தும் ‘தமிழில்தானே முதலில் அறிமுகமானீர்கள். ஏன் தமிழில் தொடரவில்லை?’ என்று கேட்டார்காள். அதனால்தான், எனக்கு இப்படியொரு விஷயம் நடந்திருக்கு. தொடர்ந்து நடிக்கவில்லை என்று கூறினேன். ஆனால், இந்த விஷயம் இவ்வளவு பெரிதாகப் பேசப்படும் என்று நான் நினைக்கவில்லை.

அஞ்சலி நாயர்
அஞ்சலி நாயர்

தமிழில் தற்போது நான் இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளேன். நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த நினைப்பதால், பழைய விஷயங்கள் குறித்துப் பேசவேண்டாம்.

நான், சொன்ன தகவல் வைரல் ஆனது ரொம்ப அதிர்ச்சியாக உள்ளது. அந்த வில்லன் நடிகரின் குடும்பத்தினர் பார்த்தால் தேவையில்லாமல் எனக்கு தொடர்பு கொள்வார்கள்;வருத்தப்படுவார்கள். அது எனக்குத் தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால், அவர் யாரென்று கேட்காதீர்கள்” என்றவரிடம்

அஞ்சலி நாயர்
அஞ்சலி நாயர்

“கேரள அரசின் மாநில விருதுபெற்ற நடிகை நீங்கள். ஆனால், தமிழ் சினிமா உங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “தமிழில் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம் என்று மலையாளத்தில் கவனம் செலுத்தினேன். இனிமேல் தமிழிலும் தொடர்ந்து நடிப்பேன்” என்கிறார் புதுவித எனர்ஜியுடன்.