Published:Updated:

`தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் - காரணம் என்ன?

பினராயி விஜயன்

`கேரள தேர்தல் அரசியலில் ஆதாயம் அடையவே சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது'- பினராயி விஜயன்

Published:Updated:

`தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் - காரணம் என்ன?

`கேரள தேர்தல் அரசியலில் ஆதாயம் அடையவே சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது'- பினராயி விஜயன்

பினராயி விஜயன்
சுதிப்தோ சென் இயக்கத்தில், அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோரின் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள திரைப்படம் `தி கேரளா ஸ்டோரி'.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.  அதில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை  ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் சென்று இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தன. இவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்த நிலையில் கேரள அரசு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. 

தி கேரளா ஸ்டோரி
தி கேரளா ஸ்டோரி

மே 5 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும், கேரளாவின் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

 இந்நிலையில் கேரள முதல்வர் பினராஜ் பினராயி விஜயனும்  ‘தி கேரளா ஸ்டோரி' படத்தை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கேரள தேர்தல் அரசியலில் ஆதாயம் அடையவே சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

அந்தவகையில் அவர்களின் கொள்கைகளை பரப்ப இதுபோன்ற படத்தை எடுத்துள்ளனர் என்பது படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. வகுப்புவாதத்தை  குறிக்கோளாகக் கொண்டு  கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை பரப்பும் நோக்கத்துடன் இவ்வாறு செயல்பட்டுள்ளனர்" என்று தெரிவித்திருக்கிறார்.