Published:Updated:

`கதை சொன்ன பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கு!'; உன்னி முகுந்தன் மீதான குற்றச்சாட்டும் விசாரணையும்

நடிகர் உன்னி முகுந்தன்

இளம் பெண்ணிடம் சமரசம் பேசி தீர்வு கண்டுவிட்டதாக உன்னி முகுந்தனின் வழக்கறிஞர் சைபி ஜோஸ் ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நிறுத்த வேண்டும் என ஐகோர்ட்டில் நடிகர் உன்னி முகுந்தன் மனு அளித்திருந்தார்.

Published:Updated:

`கதை சொன்ன பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கு!'; உன்னி முகுந்தன் மீதான குற்றச்சாட்டும் விசாரணையும்

இளம் பெண்ணிடம் சமரசம் பேசி தீர்வு கண்டுவிட்டதாக உன்னி முகுந்தனின் வழக்கறிஞர் சைபி ஜோஸ் ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நிறுத்த வேண்டும் என ஐகோர்ட்டில் நடிகர் உன்னி முகுந்தன் மனு அளித்திருந்தார்.

நடிகர் உன்னி முகுந்தன்
பிரபல சினிமா நடிகர் உன்னி முகுந்தன் மீது 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி கோட்டயத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தன்னிடம் இருந்த சினிமா கதை ஒன்றை கேட்க விரும்புவதாக தனது வீட்டுக்கு அழைத்தார்.
கேரள உயர் நீதிமன்றம்
கேரள உயர் நீதிமன்றம்

`2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அவரது பிளாட்டுக்குச் சென்றேன். கதை சொல்லிக்கொண்டிருந்த போது திடீரென தவறாக நடக்க முயன்றார்' அந்த புகாரில் இளம் பெண் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து உன்னி முகுந்தன் அந்த இளம் பெண்ணுக்கு எதிராக ஒரு புகார் அளித்திருந்தார். அதில் வழக்கில் சிக்கவைக்காமல் இருக்க தன்னிடம் 25 லட்சம் ரூபாய் வேண்டுமென அந்த பெண் கேட்டதாக உன்னி முகுந்தன் புகாரில் கூறியிருந்தார். இளம் பெண் புகார் அளித்ததன் பேரில் பெண்மையை அவமானப்படுத்தியதாக வழக்கு எர்ணாகுளம் பஸ்ட் கிளாஸ் ஜூடிசியல் மஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் நடிகர் உன்னி முகுந்தன் ஜாமினில் வெளியே உள்ளார்.

இந்த நிலையில் இளம் பெண்ணிடம் சமரசம் பேசி தீர்வு கண்டுவிட்டதாக உன்னி முகுந்தனின் வழக்கறிஞர் சைபி ஜோஸ் கோர்ட்டில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நிறுத்த வேண்டும் என கேரள ஐகோர்ட்டில் நடிகர் உன்னி முகுந்தன் மனு அளித்திருந்தார். அதேசமயம் வழக்கில் சமரச தீர்வு ஏற்படவில்லை என பாதிக்கப்பட்ட இளம் பெண் ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தார்.

நடிகர் உன்னி முகுந்தன்
நடிகர் உன்னி முகுந்தன்

மேலும், அந்த சம்பவத்துக்கு பிறகு தன்னை அவமானப்படுத்த உன்னி முகுந்தன் முயன்றதாகவும் இளம் பெண் கோர்ட்டில் கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஐகோர்ட் சிங்கிள் பெஞ்ச், உன்னி முகுந்தன் அளித்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு எதிரான வழக்கில் விசாரணை தொடர்ந்து நடக்கும் எனவும் அறிவித்துள்ளது.