Published:Updated:

மஞ்சு வாரியரின் ஃபுட் ஸ்பிலிட் பயிற்சி - போட்டோவைப் பகிர்ந்து உற்சாகப்படுத்திய அமைச்சர் சிவன்குட்டி!

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ள அந்த போட்டோவில், "உங்களை நீங்களே சுயமாக ஊக்குவித்துக்கொள்ளுங்கள். அதை உங்களுக்காக வேறு யாரும் செய்யப்போவதில்லை" என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த மலையாளப் படம் ஒன்றை ஷைஜூ ஸ்ரீதரன் இயக்குகிறார். ஃபுட்டேஜ் (Footage) எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் ஃபவுண்ட் புட்டேஜ் (Found footage) என்ற படப்பிடிப்பு முறை பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் ஆக்‌ஷன் ரோலில் நடிக்கிறார்.

இது தொடர்பான அதிரடி சண்டைக் காட்சியின் ஷூட்டுக்கு இடையே நடிகை மஞ்சு வாரியர் ஒர்க் அவுட் செய்துள்ளார். அந்த உடற்பயிற்சி குறித்த போட்டோ ஒன்றை மஞ்சு வாரியர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோ இப்போது வைரலாகி வருகிறது. மஞ்சு தன் கால்களை அகலமாக்கி தரையில் அமர்ந்தபடி ஃபுட் ஸ்பிலிட் செய்யும் அந்த போட்டோ ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மஞ்சு வாரியர் ஒர்க் அவுட் போட்டோ
மஞ்சு வாரியர் ஒர்க் அவுட் போட்டோ

மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ள அந்த போட்டோவில், "உங்களை நீங்களே சுயமாக ஊக்குவித்துக்கொள்ளுங்கள். அதை உங்களுக்காக வேறு யாரும் செய்யப்போவதில்லை" என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவுக்குப் பின்னூட்டமிட்ட ரசிகர்கள், "வானம் எப்போதும் எல்லை அல்ல. 'ஆறான் தம்புரான்' படத்தை சுமார் 50 முறை பார்த்திருக்கிறேன். உங்கள் வைராக்கியத்தைப் பாராட்டுகிறேன்" எனவும், "உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் நீங்கள்தான்" எனவும் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் வி.சிவன்குட்டி
அமைச்சர் வி.சிவன்குட்டி

கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டியும் மஞ்சு வாரியரின் அந்த போட்டோவைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். "கடின உழைப்புதான் வெற்றிக்கான திறவுகோல். ஆரோக்கியம்தாம் நம்முடைய சொத்து. இந்த போட்டோ நிச்சயமாகப் பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும். வாழ்த்துகள்..." எனவும் அமைச்சர் வி.சிவன்குட்டி குறிப்பிட்டுள்ளார்.

தனது உடற்பயிற்சி போட்டோவுக்கு கிடைத்த ஆதரவைப் பார்த்து ஏக மகிழ்ச்சியில் இருக்கிறாராம் மஞ்சு வாரியர்.