Published:Updated:

"என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாகத் தாக்கினார்..."- முன்னாள் காதலன் மீது நடிகை புகார்

அனிகா விக்ரமன்

மலையாள திரைப்பட நடிகை அனிக்கா தனது முன்னாள் காதலன் தன்னைத் தாக்கியதாக் கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published:Updated:

"என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாகத் தாக்கினார்..."- முன்னாள் காதலன் மீது நடிகை புகார்

மலையாள திரைப்பட நடிகை அனிக்கா தனது முன்னாள் காதலன் தன்னைத் தாக்கியதாக் கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அனிகா விக்ரமன்
மலையாள திரைப்பட நடிகை அனிக்கா விக்ரமன். சமீபத்தில் இவர் தமிழில் வெளியான 'விஷமக்காரன்' எனும் படத்தில் நடித்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்த இவர், தன் முன்னாள் காதலன் தன்னைத் தாக்கியதாக் கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது இதுதான்:

நடிகை அனிக்காவின் காதலர் அனூப் பிள்ளை பல முறை அனிக்காவை மன மற்றும் உடல் ரீதியாக துன்புறூத்தியதாக அனிக்கா குற்றம் சாட்டுகிறார். குறிப்பாக, முதல் முறை கடுமையாகத் தாக்கியபோது அனிக்கா காவல் துறையில் புகார் அளிப்பேன் என்று கூறியுள்ளார். பின்னர் காதலர் கெஞ்சியதால் விட்டுவிட்டதாகக் கூறுகிறார். இரண்டாவது முறை தாக்கியபோது புகார் அளித்துவிட்டதாகக் கூறுகிறார். ஆனால், காவல் துறையினர் இருவருக்கும் சமதான பேச்சுவார்த்தை செய்து வைத்ததாகக் கூறுகிறார். பிறகு திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அனிக்காவின் முகத்தில் கடுமையாக அவர் தாக்கியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் அனிக்கா.

இதனால் அனிக்காவின் முகத்தில் கடுமையாகக் காயம் ஏற்பட அந்த நபர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னையும் தனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்து வருவதாக காவல் துறையில் புகார் அளித்திருப்பதாகக் கூறுகிறார். இருப்பினும் பண பலத்தைப் பயன்படுத்தி அந்த நபர் இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து வருவதாகவும், காவல் துறைக்குப் பயந்து அவர் தற்போது அமெரிக்காவில் மறைந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தற்போது இந்தப் பிரச்னையிலிருந்து தான் உடல் அளவில் சரியாகி வருவதாகவும், கூடிய விரைவில் திரைப்படங்களில் நடிப்பேன் எனவும் அனிக்கா தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.