Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெரி ஸாரி விஜய் ஆண்டனி..! - அண்ணாதுரை விமர்சனம்

காதலி இறந்துப்போனதால் குடிப்பழகத்திற்கு அடிமையாகி போன ஒருவனின் வாழ்க்கையும், அவனைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் எப்படியெல்லாம் தடைமாறுகிறது என்பதுதான் `அண்ணாதுரை' படத்தின் ஒரு வரிக்கதை. இப்படி ஒரு கதையை மட்டும் எடுத்து, `இதுதான் படத்தின் ஒருவரிக்கதை' என சொல்ல எங்களுக்கும் ஆசைதான். என்ன செய்ய, இதேபோல் படத்துக்குள் பத்து-பதினைந்து கதைகள் இருக்கின்றன. ப்ச்ச்...

அண்ணாதுரை விமர்சனம்

அண்ணன் அண்ணாதுரை மற்றும் தம்பி தம்பிதுரை என இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி. `தாடி வைத்திருந்தால் அண்ணன், ஷேவ் பண்ணியிருந்தால் தம்பி' எனும் அதே பழைய ஃபார்மட்டில் வந்துபோகிறார். இரண்டு கதாபாத்திரங்களும் இடையே முகத்தில் உள்ள முடியைத் தவிர, வேறு எந்த வித்தியாசத்தையும் விஜய் அண்ணன் காட்டவில்லை. வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்றவற்றிலும் முந்தைய படங்களில் என்ன செய்தாரோ, அதையே செய்திருக்கிறார். எந்த வித்தியாசமும் காட்டவில்லை. படத்தின் நாயகிகளாக வரும் மூவரில் டயானாவும், ஜுவல் மேரியும் விஜய் ஆண்டனியின் மூத்த அக்காவை போலவும், மகிமா கடைசி தங்கையைப் போலவும் இருக்கின்றனர். நாயகிகளின் பாத்திரத்தைவிட, திரையிலேயே தோன்றாத `எஸ்தர்' கதாபாத்திரம் மனதில் நிற்கின்றது. டபுள் ஹீரோக்களுக்கு ட்ர்பிள் வில்லன்கள். ராதாராவிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அவர் பெயரைவிட சிறியது. விஜய் ஆண்டனியின் அப்பாவாக நளினிகாந்த் நடித்திருக்கிறார். பயப்படவேண்டாம், அவர் பெயர் அப்பாதுரை இல்லை. விஜய் ஆண்டனியின் நண்பனாக காளிவெங்கட், தனக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

படத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கும் பத்து-பதினைந்து கதைகளையும் பிடித்து எசகுபிசகாக லின்க் அடித்ததில் எக்குதப்பாய் வந்திருக்கிறது திரைக்கதை. எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கேயோ செல்கிறது படம். திரைக்கதையில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் எந்தவித அழுத்தமான காரணங்களும் சொல்லப்படவில்லை. ஒரு காட்சியில் அண்ணன் விஜய் ஆண்டனி, தம்பியைப் பற்றி ’அவன் சின்னப் பையண்டா. இன்னும் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலை’ என பல வயது மூத்தவரைப் போல் பேசிக்கொண்டிருப்பார். இருவரும் இரட்டையர்கள் என்று படத்தில் குறிப்பிடுவார்கள். ’இந்த ஊர் பழி சொல்லுமே தவிர வழி சொல்லாது’, ’நீ செத்துப்போனு சொன்னாலே செத்துப் போயிருவேன், போனு தானே சொல்ற... போறேன்’ என வசனங்களுக்காக மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால், படத்திற்கும் கதைக்கும் கதாபாத்திரக்கும் வசனங்கள் ஒட்டவேயில்லை. வட்டிக்காரரிடம் கையொப்பம் போட்டுக்கொடுத்த வெற்றுப் பத்திரத்தை எப்படி மறப்பார்கள், அண்ணாதுரை எதற்காக சம்பந்தேமேயில்லாமல் தம்பிதுரையை போல் மாறுகிறார், ஜூவல் மேரி என்ன ஆனார் என ஏகப்பட்ட கேள்விகள் தொக்கி நிற்கின்றன. 

அண்ணாதுரை விமர்சனம்

வீண் அலப்பறைகள் ஏதும் இல்லாத ஒளிப்பதிவால், படத்திற்கு ப்ளஸ் மார்க் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தில்ராஜ். `ஈ.எம்.ஐ' பாடலில் வரும் விஷுவல் எஃபெக்ட்ஸும் கான்செப்டும் செம. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் ஓ.கேதான். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்த படத்தின் நடிகர் மட்டுமல்ல, படத்தொகுப்பாளரும் கூட. பிசிறில்லாமல் தொகுத்திருக்கிறார். அதேபோல், படத்தை இரண்டு மணி நேரங்களாக சுருக்கியதற்கும் படத்தொகுப்பாளர் விஜய் ஆண்டனிக்கு கோடானக் கோடி நன்றிகள். குழப்பமான கதையும், அழுத்தமே இல்லாத திரைக்கதையும், ஸின்க் ஆகாத வசனங்களும் அண்ணாதுரையை மட்டுமல்ல, நம்மையும் படாதபாடு படுத்திவிடுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்