4 மாத ஓய்வில் அஜித்!

அக்டோபர் மாதம் அஜித்திற்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. அம்மாதத்தில் இருந்து 4 மாதங்களுக்கு எந்த ஒரு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள மாட்டார் அஜித்.

விஷ்ணுவர்தன் - அஜித் இணைப்பில் உருவாகி வரும் படத்தின் சண்டை காட்சிக்காக ஒரு காரில் இருந்து இன்னொரு கார் மீது தாவுவது போன்ற காட்சியில் டூப் போடாமல் நடித்தார். அப்போது அவருடைய வலது காலில் பலத்த அடிபட்டது. ஆனால் தன்னால் படப்பிடிப்பு நிற்க கூடாது என தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்றார். தற்போது மும்பையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஷ்ணுவர்தன் படத்தினைத் தொடர்ந்து 'சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்துடன் தமன்னா, மஹத், விஷாகா என பலரும் நடிக்க இருப்பதால் அப்படத்தினையும் முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.

ஏப்ரல் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.தொடர்ச்சியாக செப்டம்பர் மாதம் வரை படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.அக்டோபர் மாதம் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

21 ம் தேதி வெளிநாட்டில் அஜித்திற்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 4 மாதங்கள் ஒய்வு எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். அதனாலேயே எந்த ஒரு படத்தினையும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார்.

 ஒரு ரகசியம் சொல்லவா... 'சிறுத்தை' சிவா - அஜித் இணையும் படத்திற்கு 'வெற்றி கொண்டான்' எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!