சிறுகதையை இயக்கும் சீனு ராமசாமி.! | சீனு ராமசாமி, விமல், விஜய் சேதுபதி

வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (25/03/2013)

கடைசி தொடர்பு:13:49 (25/03/2013)

சிறுகதையை இயக்கும் சீனு ராமசாமி.!

'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை' என வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் சீனுராமசாமி.

'நீர்ப்பறவை' படத்தினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அப்படத்தினை 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'நான் கடவுள்'  படங்களைத் தயாரித்த வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.

இப்படத்தில் விமல், விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதையை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கிறார் சீனு ராமசாமி.

வத்தலக்குண்டு ஊரில் வாழும் இளைஞனாக விமலும்,.  சென்னையில் இருக்கும் இளைஞனாக விஜய் சேதுபதியும் நடிக்க இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பதை ஆக்ஷ்ன் கலந்து கூற இருக்கிறார்களாம்.

வைரமுத்து பாடல்களுக்கு, ரகுநந்தன் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் முதல் துவங்குகிறது. நாயகி தேர்வு படலம் தற்போது நடைபெற்று வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்