சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்! | விஷால், சுசீந்திரன்

வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (25/03/2013)

கடைசி தொடர்பு:13:51 (25/03/2013)

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்!

விஷால் - சுசீந்திரன் இணைந்து ஒரு படம் தரவிருக்கிறார்கள் என்பது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.

வெடி, சமர் என தொடர்ச்சியாக விஷால் நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த 'மதகஜராஜா' படமும் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும், எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில். பூபதி பாண்டியன் இயக்கத்தில் 'பட்டத்து யானை' படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஷால். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. அப்படத்தினைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால்.

இது குறித்து விஷால் " மே மாதம் முதல் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். மதுரையை சுற்றி நடக்கும் கதை. இப்படத்தில் நடிக்க இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. சுசீந்திரன் படத்தில் என்னுடன் யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் " என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்