ரஜினியை இயக்கும் கே.வி. ஆனந்த்! | கே.வி.ஆனந்த், ரஜினி

வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (25/03/2013)

கடைசி தொடர்பு:13:47 (25/03/2013)

ரஜினியை இயக்கும் கே.வி. ஆனந்த்!

கே.வி.ஆனந்த் - ரஜினி இணையும் படத்தினைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில், 'நான் கதையினை தயார் செய்து வருகிறேன். கதை முடிவான பின்னரே யார் நடிக்க இருக்கிறார்கள் என்பதினை முடிவு செய்ய முடியும்' என்று கூறினார் கே.வி.ஆனந்த்.

ஆனால் கே.வி.ஆனந்த் - ரஜினி கூட்டணி உறுதியாகி விட்டது என்கிறது கோலிவுட் வட்டாரம். இருவரும் இணையும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராக இருக்கிறது.

AGS நிறுவனத்துடன் இணைந்து EROS நிறுவனமும் இப்படத்தினை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ரஜினியை சந்தித்து கதையினை மெருக்கேற்றி வருகிறாராம் கே.வி.ஆனந்த்.

 இந்த மெகா பட்ஜெட் படம் மட்டுமன்றி, 5 படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது AGS நிறுவனம். அப்படங்களின் விவரம் :

வடிவேலு நடிப்பில் 'கஜ புஜ கஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்' என்ற படத்தினை யுவராஜ் இயக்க இருக்கிறார். இமான் இசையமைக்க இருக்கிறார்.

ஜெய். விடிவி கணேஷ், மனோபாலா நடிக்க 'சரஸ்வதி சபதம்' என்ற படத்தினை சந்துரு இயக்கி வருகிறார்.

ஜெயம் ராஜா - ஜெயம் ரவி இணையும் படத்தினையும் தயாரிக்க இருக்கிறது.

அதர்வா நடிக்கும் ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படத்தினை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தினை யுவராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்க இருக்கிறார்.

மேலும் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் அடுத்த படத்தினை தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு யுவன் இசையமைக்க இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்