’ஐ’ படம் எப்படி? | ஐ, ஷங்கர், விக்ரம், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான்

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (14/01/2015)

கடைசி தொடர்பு:18:17 (14/01/2015)

’ஐ’ படம் எப்படி?

ங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், சுரேஷ் கோபி, மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஐ’. பொங்கல் சிறப்பாக வெளியாகியுள்ள படம். இரண்டு முன்று வருடங்களுக்கு காத்திருப்பில் வைத்து இப்போது வெளியாகி உள்ளது. 

மாடலிங் துறையில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பல சிக்கல்கள் உள்ளன. அதில் ஒரு விதத்தை கையில் எடுத்துக் கொண்டு அழகிய காதலை மெசேஜாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் ஷங்கர். 

விக்ரம், ஒரு மனிதன் இத்தனை உடலமைப்பு மாற்றங்களை ஒரே படத்தில் காட்ட முடியுமா?. முதல் பாதியில் கட்டுமஸ்தான விக்ரம் , பின்பாதியில் ஒடிந்து கூனிக் குறுகி ஒவ்வொரு உணர்வுகளிலும் நம் செண்டிமெண்ட் பாயிண்டுக்கு குறி வைக்கும் இன்னொரு விக்ரம் என்றால் மாடலாக ஸ்டைலிஷ் விக்ரம், பீஸ்ட் விக்ரம் என அந்தந்த கேரக்டருக்கு ஏற்ற தேகத்துடன் உண்மையில் மெர்சலடையச் செய்துள்ளார். எமி நல்ல தேர்வு, அனேகமாக ஷங்கரின் முதல் சாய்ஸ் ஹீரொயினான ஐஸ்வர்யா ராய் இடத்தை நிரப்ப சரியான தேர்வு என்றும் சொல்லலாம். கொடுக்கும் ஆடைகளை போட்டு கொள்கிறார். கிளாமர் சற்றே தூக்கல் என்றாலும் எமி என்ற ரீதியில் முகம் சுளிக்கச் செய்யாமல் ஷங்கர் பட அழகான ராட்சஸியாக இருக்கிறார்.  

ஷங்கரின் பிரம்மாண்டம், படம் முழுக்க வியாபிக்கிறது என்றால் அவருக்கு போட்டியாக விரிகிறது பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் ஃப்ரேம் ஃப்ரேமாக செதுக்கியுள்ளார். படத்திற்கு அடுத்த ப்ளஸ் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னனியில் பிரம்மாண்ட காட்சிக்கு ஏற்ற இசை. ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ பாடல் கண்களுக்கு விருந்தாக பி.சி.ஸ்ரீராமின் ஸ்பெஷல் என்றால்,மெர்சலாயிட்டேன், மற்றும் லேடியோ பாடல்கள் ஷங்கர் ஸ்பெஷலாக வித்யாச காட்சியமைப்பில் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்பெஷல் உன்னோடு நானிருந்தால், ஆனால் வைத்த இடம் தான் சற்றே நெருடலாக ஒட்டாமல் நிற்கிறது. சண்டை காட்சிகள் அனல் பறக்கிறது என்றாலும் அனைத்து சண்டை காட்சிகளிலும் கூட்டம் கூட்டமாக அடியாட்கள் வருகிறார்கள் அதை சற்றே குறைத்திருக்கலாம். டி.சுரேஷ், ஏ.என். பாலகிருஷ்ணன் கூட்டணியில் சந்தானம் வரும் காட்சிகளில் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகிறது. ஆனாலும் சுஜாதா இல்லாத வசனங்கள் பற்றாகுறை பளிச்சென தெரிகிறது. 

சுடுகாட்டிற்கு எப்படி பெண்கள் வருவார்கள் , அவ்வளவு பெரிய ஆள் மரணம் என்றால் எவ்வளவு பெரிய நியூஸ் அது. அந்த இடத்தில் சற்றே லாஜிக் தடுமாற்றம். சந்தானம் படத்தில் காமெடியனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பலே. எதுக்கு பவர் ஸ்டார் என்ற கேள்வி சில இடங்களில் தோன்றினாலும் ’எந்திரன் பார்ட் 2’ ஹீரோ நான் தான் என சொல்லி தலையில் இரண்டு சில்வர் மார்க் போட்டு நடக்கும் இடம் பவரு பவருதான் மொமெண்ட்.

அட சுரேஷ் கோபி என்னப்பா அப்பட்டமா அப்படியே சொல்லி கொடுத்ததை செய்கிறார் என சீரியசான இடங்களில் தோன்றுகிறது. இன்னும் மாடலிங் துறை அரசியலை ஆழமாக பேசியிருக்கலாமோ என ஷங்கர் படம் என்பதால் கொஞ்சம் ஓவர் டோஸ் கேட்கிறது மைண்ட் வாய்ஸ்.

மொத்ததில் ‘ஐ’ மேக்கிங்கில் மெர்சல் அடைய செய்து,  புதுவிதமான காதலை சொல்லி வெறும் காதல் படமல்ல அதுக்கும் மேல என முடிகிறது.

 

- சினிமா விகடன் குழு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close