வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (02/02/2015)

கடைசி தொடர்பு:12:56 (02/02/2015)

இசை - படம் எப்படி?

இருக்கு....ஆனா வேற மாதிரி இருக்கு! எஸ்.ஜே.சூர்யா பத்து வருஷம் கேப்புக்கு அப்புறமா இயக்கி நடிச்சு ஸ்பெஷலா அவரே மியூசிக்கும் பண்ணி இருக்குற படம்கிறதால பயங்கர எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யுது.

நல்லவேளை மனுஷன் சொதப்பலை. அவரோட வழக்கமான ஜில்ஜில் கில்பில் டைப் ரொமான்ஸ் சீன்களால யூத்துங்களை கொஞ்சம் கிறங்க வெச்சிருக்காரு. மனுஷன் என்னாம்மா ஃபீல் பண்றாருய்யா! 
சரி படத்தோட கதை என்ன? ... கண்முன்னே தன்னோட சிஷ்யன் எஸ்.ஜே.சூர்யா பெரிய ஆளா வளர்ந்துட்டதை பார்த்து மனசுக்குள்ள புழுங்கித் தவிக்கிறாரு சீனியர் இசையமைப்பாளரான சத்யராஜ். ரெண்டே வருஷத்துல குருவை மிஞ்சின சிஷ்யன் 'இசைக்கடலா' வளர்றதனால வாய்ப்பே இல்லாம வீட்டுக்குள்ள முடங்கிக்கிடக்குறாரு சத்யராஜ். தன்னோட சிஷ்யனோட இசைத்திறமையைக் குலைச்சு அவரை ஃபீல்ட விட்டே அனுப்பி, தான் மறுபடியும் நம்பர் ஒன்னா மாறுறதுக்கு திட்டம் போடுறார். என்ன மாதிரிலாம் யோசிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா என்னவெல்லாம் ஆகுறார்ங்கிறது படத்தோட கதை.

எஸ்.ஜே.சூர்யா தனக்கு வழக்கமான குறும்புத்தனமான மேனரிஸங்களால ஒரு இளம் இசையமைப்பாளரா நடிச்சிருக்கார். படத்தோட நாயகி சாவித்ரிகிட்ட முத்தம் கொடுக்க அவர் போடுற ப்ளானும் அதுக்காக அவர் பேசுற 'எனக்கு இதயம் குதிச்சிச்சு...உனக்கு குதிச்சசதா?"னு கேட்குறப்போ தியேட்டர்ல குதிச்சு குதிச்சு சிரிக்கிறாங்கப்பா! ஃபாதர் கெட்அப்ல சர்ச் கன்ஃபஷன் கொடுக்குற இடத்துல உட்கார்ந்துக்கிட்டு சாவித்ரிக்கு கில்மா கிஸ்ஸிங் ஐடியா சொல்லிக்கொடுக்குறதெல்லாம் எஸ்.ஜே.சூர்யா டச்!

சாவித்ரியோட வயித்துல இருக்குற குழந்தை அபார்ஷன் ஆகுறதுக்கு முன்னாடி ஒரு சென்டிமெண்ட் டயலாக் பேசுவாரு பாருங்க. சூர்யா சார் சூப்பர்! 

சத்யராஜ் சும்மா கலக்கி எடுத்திருக்காரு. ரொம்ப நாள் கழிச்சு வில்லத்தனம் காட்டி மெரசலாக்குறாரு. 'கருப்பு! முன்னாடி நீ எப்படி நடந்து வருவே நடந்து காட்டு!' என கஞ்சா கருப்பை பரேடு எடுக்குற சீன்ல சும்மா புகுந்து வெளாண்டிருக்காரு. ஒரு சீன்ல ஃப்ளோல கெட்டவார்த்தைலாம் பேசுறாரு....சென்ஸார் போர்டு மக்களே என்னாச்சு?   

சத்யராஜும் இதே ரூட்டை இனி வர்ற படங்கள்ல ஃபாலோ பண்ணலாம். தியேட்டர்ல செம அப்ளாஸ் அள்ளுது!கிட்டத்தட்ட காணாமலே நாட் ரீச்சபிள் ஏரியாவுக்கே போயிட்ட  கஞ்சா கருப்பு, மீண்டும் இந்த படம் மூலமா காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறாரு.

படத்தோட டயலாக் எஸ்.ஜே.சூர்யாவே தான். அவரோட ஸ்டைல்ல யூத்ஃபுல்லா இருக்கு. 'இசை வீசி' பாடல்ல இசையமைப்பாளரா எட்டிப்பார்க்குறாரு. ஆனா, பேக்ரவுண்ட் ஸ்கோர்ல கொஞ்சம் சொதப்பியிருக்காரு. 

இது தமிழ் சினிமாவுல இப்போ இருக்குற இரண்டு பெரிய இசையமைப்பளர்களைப் பத்தின படம்கிறது அழகா தெரியுது. படத்தோட ப்ளஸ்ஸும் அதுதான் மைனஸும் அதுதான்! ஆனாலும், எஸ்.ஜே.சூர்யா தன்னோட செகண்ட் இன்னிங்ஸை அழகா ஸ்டார்ட் பண்ணி இருக்கார். லாஜிக் பார்க்காம படத்தைப் பார்த்தா மேஜிக்தான்!

கொஞ்சம் "அப்டி இப்டி" இருந்தாலும் "எப்டி இப்டி?"னு சொல்ல வெச்சிருக்கு இந்த இசை!
 
எஸ்.ஜே.சூர்யாவின் சிறப்பு பேட்டிக்கு : http://cinema.vikatan.com/articles/news/9/8494
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்