வஜ்ரம் - படம் எப்படி? | வஜ்ரம், தம்பி ராமையா, vajram, thambi ramaiya, கிஷோர்,

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (28/02/2015)

கடைசி தொடர்பு:17:38 (25/03/2015)

வஜ்ரம் - படம் எப்படி?

குடும்பம் ஒற்றுமை, அடையாளத்துக்காகப் போராடின நாலு பசங்க, இப்போ கல்விக்காகப் போராடியிருக்காங்க.

மலைக் கிராமம், அதுல கல்விக்காக தன்னையே அர்ப்பணிச்சு வாழ்ந்துட்டு இருக்கற தம்பி ராமையா, அவருகிட்ட வளர்ற நாலு பசங்க மற்றும் ஒரு பொண்ணு. அவரோட ஆசையான ஸ்கூலுக்கு பெரிய ஆபத்து வருது. யாரால, எப்படிங்கிறதும், அதை இந்த குட்டி ஆக்‌ஷன் ஹீரோக்கள் தடுத்தாங்களா என்பதும்தான் மீதி கதை.

நாலு பேரும் ஆக்ஷன்ல புது அவதாரம் எடுத்துருக்காங்க. இருந்தாலும் படம் வன்முறை, பழிவாங்கல்னு சின்ன பசங்கள வேற டிராக்குக்கு கொண்டுபோற மாதிரியே இருக்கு. அவ்ளோ உயிர் சேதம், கொலை, பழிக்குப் பழின்னு படம் நெடுக குரோதம்தான். ஆனாலும், அடிச்சுப் பிடுங்கினாத்தான் கல்வி கிடைக்கும்ங்கற இன்னொரு உண்மையை ஏத்துக்கிட்டுதான் ஆகணும்.

’அரசாங்கம் எடுத்து நடத்த வேண்டிய கல்வி தனியார்கிட்ட, தனியார் நடத்த வேண்டிய மதுவிற்பனை அரசாங்கத்து கையில’ - இப்படி தம்பி ராமையா அடி வயித்துலருந்து வசனம் பேசும்போது, இதெல்லாம் கேட்க இந்த நாட்ல ஆள் இல்ல சாமிங்கற வேதனைதான் வருது.

நாலு பசங்களும் அடிச்சு விளையாண்ட்ருக்காங்க. தம்பி ராமையா போர்ஷன் சென்டிமென்ட் ரகம். அவரோட வேலையை சரியா செஞ்சுருக்காரு. வில்லன், வில்லியா ஜெயபிரகாஷ் - சனா செம கெமிஸ்ட்ரி. ரெண்டு பேரும் பீட் பண்ணி உருட்டி மிரட்டியிருக்காங்க.

நல்ல கதைதான், ஆனாலும் கல்வியைத் தாண்டி டபுள் டோஸ் வன்முறையால படத்தோட மெசேஜ் காலியாயிடுது. திரும்பத் திரும்ப நீளமான சீன்கள், கெஸ் பண்ண வைக்கிற சீன்கள் - இப்படி படத்தில பல மைனஸ்கள். இயக்குநர் ரமேஷ் செல்வன் பசங்கள நம்பி மட்டுமே இறங்கியிருக்கறது அப்பட்டமா தெரியுது. ஜெயில் போர்ஷன் காமிச்ச விதம் அருமை.

சீரியல் பாணி பின்னனி இசை இன்னும் படத்தோட போக்கை தொங்க வெச்சுருது. ஆக்ஷன் காட்சிகளுக்கு அப்ளாஸ் குடுக்கலாம். கல்விய வேற மாதிரி கேட்டாதான் கிடைக்கும்னு, ரொம்பவே வேற மாதிரி மெசேஜ் வெச்சுருக்காங்க.

சரி... படம் பார்க்கலாமா? 'இந்தப் பசங்களுக்குள்ள என்னமோ இருக்கு' - இப்படி சொல்லிகிட்டே ஆக்‌ஷன் சரவெடியைப் பாக்கணும்னா பாக்கலாம்!

 

- சினிமா விகடன் குழு -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்