சகாப்தம் - படம் எப்படி? | sahaptham - padam eppadi?

வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (02/04/2015)

கடைசி தொடர்பு:18:12 (02/04/2015)

சகாப்தம் - படம் எப்படி?

இந்தியாவைக் காப்பத்த இப்போது கேப்டன் வாரிசு வந்துட்டாரு... இதுதான் சகாப்தம் படத்தின் ஒன் லைன்!

மலேசியாவுக்கு வேலை தேடி போகும் கிராமத்து இளைஞனா சண்முகபாண்டியன். எதிர்பாரா விதமா துப்பறியும் தனியார் ஏஜென்சியில் வேலைக்குச் சேர்கிறார். மலேசியாவில் இருந்து இந்தியா மார்கெட்ட்டைக் குறிவைத்து மிகப்பெரும் சட்ட விரோத வேலைகள் நடக்குது. அதற்கு இங்கிருந்து வேலைக்குச் செல்லும் இந்தியர்களையே வில்லன் கும்பலின் தலைவன் பயன்படுத்தி வருகிறான். அது என்ன சட்ட விரோத செயல், அதை தடுத்து இந்திய நாட்டுக்கு நன்மை செய்தாரா சண்முகபாண்டியன்... இதுதான் மீதி கதை.

ஃபைட், டான்ஸ் என சண்முகபாண்டியன் பாஸ் ஆனாலும், நடிப்பு, வசனங்கள்னு சற்றே தடுமாற்றம்தான். இதில் சும்மா பறந்து பறந்து, தாவி , குதித்து, அந்தரத்தில் எல்லாம் தொங்கி சண்டை காட்சிகளில் வேலை செய்திருக்கிறார். நேஹா ஹிங்கே, காயத்ரி சுப்ரா இப்படி இரண்டு ஹீரோயின்கள். சும்மாவே வராங்க, போராங்க. இருந்தாலும், நல்லா குத்தாட்டாம் போடுறாங்க. அவ்ளோதான் அவங்களுக்கு வேலை.


அட போங்கப்பா, பவர் ஸ்டார நாங்களே உங்களவிட நல்லா கலாய்ச்சுட்டோம்னு சொல்லத் தோணுது. மத்தவங்களா வராங்க, போராங்க, கொடுத்த வசனத்த பேசியிருக்காங்க. தேவயானி, சென்டிமென்ட் டைம்.படத்தோட சீன்கள் அங்கங்க டக்டக்குன்னு கட்டாகுது. இல்லை, அப்பிடியே கட்டாகாமலே தொடருது. எடிட்டிங் கொஞ்சம் சுமார். இயக்குநர் சுரேந்திரன் முதல் பாதியிலேயே கதையைத் துவங்கியிருக்கலாம்.

மலேசியாவை இன்னமும் அற்புதமாக காட்சிப்படுத்த மறந்துவிட்டனர். 'அடியே ரதியே' பாடல் செம பீட்.. பின்னணி இன்னமும் பழைய பஞ்சாங்கம்தான்.

சரி... படம் பார்க்கலாமா? கடைசியாக கேப்டன் அவரோட ஸ்பெஷல் லெஃப்ட் லெக் ஃபைட்டோட வராரு, கூடவே நாட்டுக்கு நல்ல கருத்துகள் வேற சொல்றாரு. இதுவே இன்னமும் ஒரு வருஷத்துக்கு போதுமே என நினைப்பவர்கள் கண்டிப்பாக படத்தைப் பார்க்கலாம்!

 

சினிமா விகடன் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close