நண்பேன்டா - படம் எப்படி? | Nanbenda - cinema vikatan Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 23:42 (04/04/2015)

கடைசி தொடர்பு:23:45 (04/04/2015)

நண்பேன்டா - படம் எப்படி?

தயநிதி ஹீரோவாக நடிப்பதற்காக எடுத்த அடுத்த ஸ்டெப் தான் ‘நண்பேன்டா.

யாருமே வராதா லாட்ஜில்  உதயநிதியும், சந்தானமும் வேலை செய்கிறார்கள்,  இருவரும் மேன்ஷனில் தங்கி இருக்கிறார்கள்.  எதிரிலுள்ள பெண்கள் ஹாஸ்டலில் நயன்தாரா தங்கி இருக்கிறார்.  பிறகென்ன கதையை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.


ஹீரோக்கள் என்றாலே ஜிம்முக்கு போய் உடம்பை ஏற்றுவார்கள் ஆனால் உதயநிதி புதுவிதமாக உடலை குறைத்து  ஸ்லிம்பாயாக வருகிறார். வழக்கமான ஏஞ்சலாக நயன்தாரா பளிச் சிருப்பும், கோப பார்வையுமாக இளசுகளை இன்னமும் ஏக்கத்தில் விரட்டுகிறார். அப்பாவுக்கே  டாஸ்மாக்கில் சரக்கு வாங்கித்தரும் சாதனை மகளீராக நயன் இருப்பது கொஞ்சம் ஓவர் டோஸ்தான்.

ரயில் பயணிகள் மாதிரி உதயநிதியின் அம்மா, அப்பாவாக வரும் ஶ்ரீரஞ்சனி, சாயாஜி ஷிண்டே இருவரும்  ஒரு சில காட்சிளில் மட்டும் உலாவந்து ரெடிமெட் சிரிப்பை உதிர்க்கிறார்கள். இனிமேல் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சபதம் எடுத்திருக்கும் சந்தானம் இந்த படத்தில் அதற்கான ரூட்டை ஜல்லிபோட்டு தார் ஊற்றி பலப்படுத்தி இருக்கிறார். 


          
எப்போதும் சந்தானம் மீதே சவாரி செய்யும் உதயநிதி இந்த படத்திலும் அந்த பணியை செவ்வனே செய்து இருக்கிறார்.  சும்மா சொல்லக்கூடாது  ஒரு கண்ணில் விஜய்யையும், இன்னொரு கண்ணில் சிவகார்த்திகேயனையும் சுமந்து கொண்டு வெறித்தனமாக  விதவிதமாக டான்ஸ் மூவ்மென்ட்டில் மெனக்கெட்டு மிரட்டி இருக்கிறார், உதய்.

 'ஒகே ஒகே", ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தைவிட நடிப்பில் முன்னேற்றம்.  சின்னச்சின்ன விஷயங்களில் எல்லாம் நயன்தாராவை  இம்ப்ரஸ்  செய்ய துடிக்கும் உதய் ஜெயிலுக்கு போய்வந்த விஷயத்தை சீரியஸாக சொல்லும் போது கெக்கெ பிக்கேவென சிரிப்பது அட போப்பா ரகம். 

  
         
நாய்க்காக ஜெயிலுக்கு போன  நாயகி, அவளுக்காக  கொலைப்பழி சுமந்து ஜெயிலுகு போகும் நாயகன் ப்ளஸ்  காமெடியன் என்று  ஒன்லைன் கதையை வைத்துக் கொண்டு முழுப் படமாக அதுவும் சிரிப்பு படம் எடுக்க வேண்டும் என்று சீரியஸாக யோசித்து இருக்கிறார், ஜெகதீஷ் .

பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் கேட்ட மெட்டுதான் ஆனாலும் கார்ல போகும் போது இந்த பாட்டு போதுமே. என்கிற ரீதியில் ஓகே தான். ‘நீ சன்னோ’, ‘ஊரெல்லாம் உன்னைக் கண்டு’ பாடல்கள் ஐபாட் லிஸ்ட். பின்னனியும் காதல் ராகம் கலகலவென போகிறது.


           
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராகவும் இருப்பதால் என்னவோ படத்திற்கு வரும் சிக்கல்கள் கருதி முன்பே படத்தின் நீளம் 2மணிநேரம் 30 நிமிடம் என கச்சிதமாக முடிவெடுத்துவிட்டார் போலும். பாராட்டுகள்.

இருப்பினும் தமிழ்சினிமாவின் அற்புதமான 'மதராச பட்டினம்", 'மைனா" படங்களை தனது  தாத்தாவின் நுண்ணறிவு கொண்டு தேர்வு செய்யும் ஆற்றல் பெற்ற உதயநிதி தானே கோடிகளை கொட்டி தயாரித்து நடிக்கும் 'நண்பேன்டா" கதையை எப்படித் தேர்வு செய்தார்? என்பது மாம்பழத்து வண்டாய் குடையும்மகா கேள்வி

சரி பார்க்கலாமா? நயன்தாராவின் அழகு, குடும்பத்தோடு விரசம் இல்லாமல் ஒரு படம் இப்படி லிஸ்ட் போட்டு பார்க்க நினைத்தால் பார்க்கலாம்.

- சினிமா விகடன் குழு -

sசி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close