வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (13/04/2015)

கடைசி தொடர்பு:14:47 (13/04/2015)

துணை முதல்வர் - படம் எப்படி?

ருக்கு நல்லது செய்ய அரசியலில் நுழையும் சாமனியனின் கதை தான் துணை முதல்வர்!

பாக்யராஜ், ஜெயராம் இருவரும் பங்காளிகள். அவர்கள் இருக்கும் மஞ்சமாக்கான் ஊரில் மருத்துவமனை, பள்ளிக்கூடம் என எங்கு செல்வதற்கும் ஆற்றை பரிசலில் கடந்து அக்கரைக்குச் சென்று தான் செல்லமுடியும். பாலம் வேண்டும் என்பதை பலரிடம் கூறியும் யாரும் கட்டித்தரவில்லை.

இதனால் ஊர்மக்கள் பாக்யராஜை எம்.எல்.ஏ ஆகி ஊருக்கு பாலம் ஏற்படுத்திதர சொல்லி வற்புறுத்த பாக்யராஜும் ஒத்துக் கொள்கிறார். பிறகு பாக்யராஜ் எம்.எல்.ஏ ஆனாரா? ஊருக்குப் பாலம் வந்ததா?  என்பதே மீதி கதை.

கதை திரைக்கதை வசனம் மூன்றும் பாக்யராஜ். மூன்றுமே பலவீனமாவும் விவேகானந்தனின் இயக்கம் மிக பலவீனமாகவும் உள்ளது. மிகப் பழைய கதை, அரதப் பழைய காட்சிகள் மிக மோசமான திரைக்கதை எனப் படமெங்கும் குறைகள் தான் நிறைந்திருக்கிறது.

பாக்யராஜ், ஜெயராம் அவ்வப்போது செய்யும் சின்னச் சின்ன கமெடிகள் ஓகே. படத்தில் வரும் ஒரு காட்சி ஏற்கனவே திருடப்பட்டு வேறு ஒரு படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை கீழே 'இது திருடப்பட்டது இல்லை இங்கிருந்து திருடப்பட்டது' எனக் கேப்ஷன் போட்டு காட்டுகிறார்கள்.அதைப் பார்த்ததும் இது படம் முழுக்கவே வரவேண்டிய கேப்ஷன் தானே என நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு காட்சியில், தேர்தலில் ஜெயிக்க வாக்காளர்களுக்கு ரிக்கார்டு டான்ஸ் போட்டு காட்டுகிறார்கள் ஒரு கட்சியினர். இதைப் பார்த்து பொங்கும் ஜெயராம் நேராக பாக்யராஜ் மனைவி ஸ்வேதா மேனனிடம் சொல்ல, அவர் என் கணவர் தேர்தலில் ஜெயிக்க வைக்க நானே கவர்ச்சி நடனம் ஆடுகிறேன் என வருவது போன்ற முற்போக்கு சிந்தனைகக் காட்சிகள் எல்லாம் கடுப்பு.

வேறு எந்தப் பெரிய படமும் போட்டிக்கு இல்லை. இந்த மாதிரியான நேரத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல படங்களுக்கு திரையரங்கு கிடைக்காமல் இது போன்ற 'துணை முதல்வர்'களுக்கு கிடைக்கிறதே என்ற குமுறலுடன் தான் திரையரங்கை விட்டு வெளியே வர வேண்டியிருக்கிறது. துணை முதல்வர் - பாக்யராஜ் ரசிகர்களைக் கூட திருப்திபடுத்தாத சினிமா!

சரி பார்க்கலாமா? புதிதாக வரும் இயக்குநர்கள் ஒரு படம் எடுக்கையில் என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என தெரிந்துகொள்ள நினைத்தால் கண்டிப்பாக இந்த படம் பார்க்கலாம். 

-சினிமா விகடன் குழு- 

நீங்க எப்படி பீல் பண்றீங்க