Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று நேற்று நாளை - படம் எப்படி?

இன்றைக்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து அதாவது 2065 இல், ஒரு விஞ்ஞானி காலஇயந்திரத்தைக் (டைம்மிஷின்) கண்டுபிடிக்கிறார். அந்த இயந்திரத்தைப் பரிசோதிக்க அதை 2015 ஆம் ஆண்டுக்கு அனுப்புகிறார். இங்கே அந்தஇயந்திரத்தைப் பற்றித் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவருடைய உதவியால் அது நாயகன் விஷ்ணுவிஷால் மற்றும் அவருடைய நண்பர் கருணாகரன் ஆகியோருக்குக் கிடைக்க அப்புறமென்ன, ஒரே அட்டகாசம்தான்.

குடித்துவிட்டுப்போட்ட மதுபாட்டில்களைக் கழுவி அதைப்புதிதுபோலாக்குவதற்காக இயந்திரம் நிறுவுவது உட்பட பல புதியயோசனைகளை வைத்துக்கொண்டு அவற்றைச் செயல்படுத்த வங்கிக்டன் கேட்டு அலைந்துகொண்டிருக்கிறார் நாயகன் விஷ்ணு. வேலையில்லாவிட்டால் என்ன? அழகான, பணக்காரவீட்டுப்பெண்ணான மியாஜார்ஜைக் காதலித்துக்கொண்டிருக்கிறார்.

சோதிடராக இருக்கும் கருணாகரனைத் தேடி ஆளே வராமல் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் காலஇயற்திரம் கிடைத்ததும் பல சுவராஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. கூடவே ஒரு சிக்கலும். அதை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதுதான் படம்.

காலஇயற்திரத்தை வைத்து ஒருபவுன் தங்கம் ஐம்பதுரூபாய்க்கு விற்கும் காலத்துக்குப் போய் நூறுபவுன் தங்கம் வாங்கி வந்து இப்போது விற்றுவிடலாம் என்று போடும் திட்டம் படுசொதப்பலாகிவிட, அதன்பின்னர், நேரமும் இடமும் மட்டும் சொன்னால்போதும் தொலைந்துபோன பொருட்களைக் கண்டுபிடித்துத் தருகிறோம் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஒருவர் வந்து என்னுடைய இந்தப்பொருளைக் காணவில்லை என்று சொன்னால் உடனே காலஇயந்திரத்தில் ஏறி அந்தநேரத்துக்குப் போய் அந்தப்பொருள் எப்படித் தொலைந்தது என்று கண்டுபிடித்து, தற்போது அது எங்கே இருக்கிறது என்பதைச் சொல்லி பணத்தைக் குவிக்கிறார்கள். அந்தக்காட்சிகள் எல்லாம் ரசித்துச்சிரிக்கிற மாதிரி இருக்கின்றன. தொடக்கத்திலேயே வருகிற தொலைக்காட்சித் தொகுப்பாளினி அவர்களிடம் மாட்டுகிற விதம் வெடிச்சிரிப்பு.

இப்படிச் சுவையாகப் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் இரண்டுமாதங்களுக்கு போய் ஒரு பொருளைத் தேடுகிற நேரத்தில் ஒரு மாற்றத்தைச் செய்துவிடுகிறார்கள். அதனால் இறந்துபோன ஒரு கொடுமையான ரவுடி பிழைத்துவிடுகிறான். அவனால் நாயகி மியாஜார்ஜின் குடும்பத்துக்கே ஆபத்து வந்துவிடுகிறது. அந்த நேரத்தில் காலஇயற்திரமும் பழுதாகிவிடுகிறது. அதனால் இரண்டாம்பாதி பரபரப்பாகிவிடுகிறது.

நுணுகிப்பார்த்தால் பல சந்தேகங்கள், கேள்விகள் வரலாம் என்கிற திரைக்கதையை வைத்துக்கொண்டு அந்தக்குறைகள் வெளிப்படையாகத் தெரியாதபடி பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஆர்.ரவிக்குமார். நாயகன் விஷ்ணுவும் கருணாகரனும் படம் முழுவதும் வந்தாலும் போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டே சமாளித்துவிடலாம் என்று நினைக்கிற விஷ்ணுவுக்குப் பொருத்தமாக இந்தப்படத்தின் பாத்திரம் அமைந்திருக்கிறது. அதனால் எளிதாக நடித்துவிடுகிறார். எல்லா நேரமும் விஷ்ணு கூடவே இருக்கும் கருணாகரன் பெரியபலம். அவரை வைத்துச் சோதிடத்தைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். நாயகி மியா, அழகாக இருக்கிறார், அழகாகச் சிரிக்கிறார், ஒரு கட்டத்தில் அவர் இறந்துபோய்விடுகிறார் என்பதைப் பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்பது அவருக்குக் கிடைத்த வெற்றி.

ரவுடியாக நடித்திருக்கும் ரவிசங்கர், சமகாலவிஞ்ஞானியாக இருக்கும் பார்த்தசாரதி, நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் பொறுப்புகளைச் சரியாகச் செய்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள். 2065  இன் விஞ்ஞானியாக வருகிற ஆர்யா, படத்தின் அடுத்த பாகத்தின் கதாநாயகன் ஆகும் வாய்ப்பிருக்கிறது.

ஹிப்ஹாப்தமிழாவின் இசையில் படத்தில் பாடல்கள் இருக்கிறதா என்கிற கேட்கிற அளவுக்குப் பாடல்கள் வந்துபோகின்றன. பின்னணிஇசை பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் வசந்தும், படத்தொகுப்பாளர் லியோஜான்பாலும் தங்கள் வேலைகைளப் பொறுப்போடு செய்திருக்கிறார்கள்.

கொஞ்சம் பிசகினாலும் முற்றிலும் புரி£யமல் போய்விடுகிற கத்திமேல் நடக்கிறமாதிரியான திரைக்கதையைக் கையிலெடுத்துக்கொண்டு கூடுமானவரை வுவையான படத்தைக் கொடுத்த முதல்படஇயக்குநர் ஆர்.ரவிக்குமார் பாராட்டுக்குரியவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement