வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (05/01/2016)

கடைசி தொடர்பு:12:20 (05/01/2016)

காதலாகி கசிந்துருகி கைகூடியதா? - 'நேனு ஷலஜா' படம் எப்படி?

ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ஹரியின் (ராம்) கனவு. ஆனால், ராம் காதலைக் கூறும் ஒவ்வொரு பெண்ணும்... நீ என்னுடைய நண்பன் தான், நான் உன்ன அண்ணனா தான் நினைச்சுப் பழகினேன், சிரிச்சுப் பழகினா லவ்வா? என நெகட்டிவ் முடிவுகளாக தெரிவிக்க கடுப்பாகும் ராம் இனி தன் வாழ்வில் காதலே வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிறார்.

அந்த சூழலில் ஹைலஜாவின் (கீர்த்தி சுரேஷ்) அறிமுகம் கிடைக்கிறது. அவள் தன் சிறுவயது தோழி என்றும் தெரிந்து கொள்ளும் ராம் காதல் வேண்டாம் என்ற முடிவை மாற்றிக் கொண்டு கீர்த்தியை காதலிக்கத் தொடங்குகிறார். கடைசியில் ராம் காதலைச் சொல்லும் போது கீர்த்தியும் ராமின் காதலை மறுக்கிறார். கீர்த்திக்கி திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்து கொள்ளும் ராம், அவரைத் தேடிக் கிளம்புகிறார். ராம்-கீர்த்தி இணைந்தார்களா என்பது இந்தியத் திரைவரலாற்றில் புத்தம் புதிய மீதிக் கதை.

கதை அரதப்பழசாக இருந்தாலும். சின்னச் சின்ன காமெடிகள், சென்டிமெண்ட்கள் என இயக்குநர் கிஷோர் திருமலயின் ட்ரீட்மெண்ட் படத்தை சுவாரஸ்யமாக மாற்றுகிறது.

பண்டக சேஸ்கோ, ஷிவம் என இரண்டு தோல்விகளுக்குப் பிறகு பார்க்கும் கொழுது ராமிற்கு கண்டிப்பாக இது ஒரு கௌரவமான ஹிட் தான். படத்திலும் ராம் கதாப்பாத்திர வடிமைப்பு, அவரின் பெர்ஃபாமென்ஸ் சூப்பர். இனி காதலே வேண்டாம் என முடிவு செய்வதும், கீர்த்தி காதல் வேண்டம் என்று குழப்பமான ஒரு காரணம் சொல்லும் போது கொடுக்கும் ரியாக்‌ஷனும் என அசத்தல்.

கீர்த்தி சுரேஷ் நடிக்க நிறை ஸ்பேஸ் உள்ள படம். நிறைவாகவும் செய்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே குடும்பத்திலிருந்து கொஞ்சம் விலகியிருப்பது, அதனால் எப்போதும் இறுக்கமான முகத்துடனேயே இருப்பதும், ராமுடன் பழகும் போது இருக்கும் சந்தோஷத்தை காட்டுவதும் என நன்றாக நடித்திருக்கிறார்.

சத்யராஜ், ரோகினி, குறிப்பாக காமெடி கதாப்பாத்திரத்தில் பிரதீப் ராவட் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கீர்த்தி குடும்பத்திலிருக்கு பிரச்சனைகளை சரி செய்யும் ஹீரோ, திருமண ஏற்பாடுகளை நிறுத்த போடும் திட்டம் என்று வழக்கமான விஷயங்கள் இருந்தாலும் ஜாலியான ஒரு எண்டர்டெயினர் இந்த 'நேனு ஷலஜா'
பா.ஜான்ஸன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்