உதயநிதிக்கு ஆக்‌ஷன் கெத்து ஓ.கேவா? - கெத்து விமர்சனம்.

சந்தானம் இல்லாமல் உதயநிதி சிங்கிளாக களத்தில் இறங்கியிருக்கும் படம்.

உதயநிதி ஒரு லைப்ரரியன், அப்பா சத்யராஜ் பி.டி மாஸ்டர், அம்மா, தங்கை என நிம்மதியான மிடில்கிளாஸ் வாழ்க்கை.. நாயகி எமி ஜாக்சன் புக் திருடியாக உதயநிதியிடம் அறிமுகமாக இருவருக்கும் காதல் மலர்கிறது என படம் நகர்ந்துசெல்ல, வில்லன் என்ட்ரி. சத்யராஜ் வேலை செய்யும் பள்ளிக்கு எதிரில் வில்லன் ''மைம்'' கோபி பார் தொடங்க அதனால் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னை காரணமாக சத்யராஜ் போலீஸில் புகார் கொடுக்கிறார்.

இதனால் சத்யராஜ் குடும்பத்திற்கு பிரச்னை கொடுக்கிறார் கோபி. கோபிக்கும் சத்யராஜ், உதயநிதிக்கும் இடையில் நடக்கும் சண்டையில் அப்பா, மகன் இருவரும் கோபியை பலபேர் முன்னால் பாரிலேயே போட்டு அடித்துத் துவைக்க, மறுநாள் மர்மமான முறையில் கோபி, கையில் சத்யராஜின் மோதிரத்தோடு இறந்துகிடக்க சிறைக்குச் செல்கிறார் சத்யராஜ். உதயநிதியின் போலீஸ் நண்பனாக கருணாகரன் .இவரின் துணையோடு உதயநிதி, தனது தந்தையை விடுவிக்க கொலை செய்தது யார் எனக் கண்டுபிடிப்பதே மீதிக் கதை.. இப்படி ஒரு கதை சென்று கொண்டிருக்கும்போதே விக்ராந்துடன் ஒரு கதையும் நகர்கிறது. இன்டர்நேஷனல் கொலைகாரனான விக்ராந்திடம் இந்திய விஞ்ஞானியான அப்துல் கமாலைக் கொலைசெய்ய ப்ராஜெக்ட் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் விக்ராந்தின் கதையுடன் உதயநிதியின் கதையும் கனெக்ட்டாக பரபர கிளைமாக்ஸுடன் முடிகிறது படம்.

காமெடி ட்ராக்கில் ஸ்கோர் செய்த உதயநிதிக்கு ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம். குட்பாயாக யோகா, வெஜிடேரியன், லைப்ரரியன் என மிடில்கிளாஸ் பையனாக ஸ்கோர் செய்வதாகட்டும், தந்தையை அடிக்கும் வில்லனை கோபத்தில் அடித்து நொறுக்குவதாகட்டும், பக்கத்துவீட்டுப் பையனாக மனதில் பதிகிறார். ஆனால் தியேட்டரில் விசில் என்னவோ '' கட்டப்பா'' விற்குதான்.

செல்ல மகளை தடகள வீராங்கனையாக்க பயிற்சி கொடுப்பது, வீட்டில் மாமிசம் சமைப்பது, பொது இடங்களில் நடக்கும் தப்பை தட்டிக்கேட்பது என பக்கா பி.டி மாஸ்டர். அவரது மனைவி பிரகதி அனைவரும் படத்தில் ஒன்றிவிட, எமி ஜாக்சன் மட்டும் ஒட்டாமல் மாடலாகவே நமக்குத் தெரிகிறார். அதுவும் மிடில்கிளாஸாகக் காட்டுகிறேன் என்று பழைய லூனாவை ஓட்டவைத்தது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

படத்திற்கு பிளஸ் சுகுமாரின் கேமரா. மைனாவிலும் கும்கியிலும் ஸ்கோர் செய்ததுபோலவே இந்தப் படத்திலும் குமுளியைக் கொள்ளை அழகாகக் காட்டியிருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை படத்திற்கு பலம்தான். என்னதான் பாடல்கள் ஹிட் என்றாலும் சம்பந்தமே இல்லாமல் எமி ஜாக்சன் காதலில் விழுந்துவிட்ட பிறகு, உதயநிதி லவ் ப்ரபோசல் பாடல் பாடுகிறார். இப்படி அனைத்துப் பாடல்களும் சம்பந்தமில்லாமல் வருகின்றன. படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு திரைக்கதைக்கும் சற்று மெனக்கெட்டிருக்கலாம்.

முதல் சீனே விக்ராந்தைத் தான் காட்டுகிறார்கள். ஆனால் பின் பாதிவரைக்கும் விக்ராந்த் யாரென்றே தெரியக்கூடாது என கண்களை மட்டுமே காட்டுவது ஏன்? இவ்வளவு பில்டப் கொடுத்து வில்லனை காட்டியதற்கான வலுவான திரைக்கதை படத்தில் இல்லாதது மிகப்பெரிய மைனஸ்.

ஏற்கனவே கொலைமிரட்டல் இருக்கும், உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானி தனது குருநாதர் இறந்ததற்கு வருகைதருகிறார், என்றால் பாதுகாப்பு எந்த அளவில் இருக்க வேண்டும்? ஆனால், போலீஸ் கமிஷனரோ, ''இது மிகவும் சீக்ரெட்டான விஷயம்'' என உதயநிதியை வைத்துக் கொண்டு நடுரோட்டில் மீட்டிங் போடுவது, என பல ஒட்டாத சீன்கள் படம் முழுக்க..

படத்தில் மர்மமாக நடக்கும் கொலைகள் அதனால் ஏற்படும் ட்விஸ்டென்று காட்டும் அத்தனை சீனும் நாம் யூகித்துவிடுவதால், வெத்தாய் முடிகிறது கெத்து.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!