Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒம்பது சின்ன வேலைல ஒரு சின்ன வேலைதான் ஜில் ஜங் ஜக் படமா? - விமர்சனம்

ஜில் ஜங் ஜக்.

சுண்டி இழுக்கற தலைப்பு. பேச வெச்ச பாட்டு.

படம் வர்றதுக்கு முந்தி, கலக்கலா ஒரு வீடியோ விட்டாங்க. ‘10 Elements of a Commercial Film’ன்னு. அதுல அந்த ‘தம்ம்மாத்தூண்டுப் பையன்’ சொன்னது எதுமே இல்லைன்னு சித்தார்த் சொல்லீருப்பார். சரி, அந்த 10 எலிமெண்ட்ஸ் என்ன, அதுக்கு பதிலா படத்துல என்ன பண்ணீருக்காங்களான்னு மட்டும் பார்ப்போம்.

விகடன் தியேட்டர் வாசகர் கலந்துரையாடலைப் பார்க்க...

 

01. சந்தானம், சூரி யாராச்சும் இருக்காங்களா?


காமெடியன்னு தனியா யாரும் இல்ல. சித்தார்த், வில்லன்கள் தவிர, ஸ்க்ரீன்ல இருக்கற மத்தவங்களும், பார்த்துட்டிருந்த நம்மளும்தான் காமெடியன்ஸ்.

2. ஹீரோவும் காமெடியனும் சேர்ந்து கம்பெனிலாம் திறக்க மாட்டாங்களா? மாலை போட்டுட்டே வணக்கம் சொல்ற மாதிரி, கலர் கலர் போஸ்டர்லாம் இல்ல?

கம்பெனி திறக்கறதெல்லாம் இல்ல. காரைக் கடத்தறதுதான். அது எதுக்கு, கார்ல என்ன இருக்கு-ங்கறது நல்ல ஐடியா! போஸ்டர்லாம் நல்லா டிஃபரண்டா இருந்துச்சு. வழக்கமா இல்லாம ஒரு கௌ-பாய் கெட்டப் சித்தார்த். மத்தவங்களும் அதே மாதிரியான பழுப்பு காஸ்ட்யூம்னு அட போட வெச்சுது போஸ்டர் டிசைன்ஸ்லாம்.

3. தம்பி ராமையா மைண்ட் வாய்ஸ்?

வாய்ஸ்னா, படத்துல வில்லன் தெய்வாவோட அடியாளா வர்ற ‘பை’ கேரக்டரோட வாய்ஸ்தான். ஹரஹர மஹாதேவகி வாய்ஸ்! அது நல்லாவே இளைஞர்கள் மத்தில வொர்க் அவுட் ஆகிருக்கு. பொண்ணுக ரசிக்கறாங்களான்னா, அவங்களுக்கு ‘இதுக்கேன் சிரிக்கறாங்க’ன்னு புரியவேல்ல.


4. சமுத்திரக்கனி அட்வைஸ்?

அதுக்கு பதிலா, சித்தார்த்தோட தாத்தாவோட அட்வைஸ் ஒண்ணு இருக்கும். அது என்னான்னும், அதை எப்ப யூஸ் பண்றாங்கன்னும் படத்துலயே பாருங்க!

5. தல தளபதின்னு மென்ஷன் பண்ணீருக்கீங்களா?

ம்ஹும். டீசர்ல ஒரு பாட்ல வரும்ங்கறாங்க. அதும் ஒண்ணும் வந்த மாதிரி தெர்ல. பாட்டெல்லாமே நல்லா இருந்துச்சு, ஆனா படத்துல எங்க எப்டி வைக்கணுமோ, அங்க அப்டி வைக்கல.

6.  ஃபிகர் பேய் இருக்கா?

அதுக்கு பதிலா ஆண்ட்ரியா பாடிருக்காங்கன்னு சித்தார்த் டீசர்ல சொல்லுவார். கரெக்ட்தான். பாட்டு நல்லா இருந்துச்சு. டைட்டில்ல வர்றதால ஜேம்ஸ்பாண்ட்  பட ஃபீல் குடுத்துச்சு.
 
7. மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் இருக்காங்களா?

அவங்களுக்கும் மேல, நாசர், ராதாரவி, அமரேந்திரன், புள்ளி, காற்புள்ளி, ஆச்சர்யக்குறி (கிண்டல் இல்லைங்க.. நெஜம்மாதான்) இப்படி நிறைய கேரக்டர்ஸ் இருக்கு படத்துல.

8. பஞ்ச் டயலாக்?

ஒண்ணே ஒண்ணு இருக்கு. இருக்கற ஒரு பஞ்ச் டயலாக்கையும் அவரே டீசர்ல போட்டு ஒடைச்சுட்டார்.


9. இளையராஜா சாங் சிச்சுவேஷன்?

பாட்டுக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு. படம் கொஞ்சம் ஸ்லோவான நேரத்துல பாட்டை புகுத்தி, உட்காரவெச்சிருக்கலாம். ஷூட் த குருவி கூட லைட்டா, பேக்ரவுண்ட்ல போட்டது அப்பீல் ஆகாமப் போய்டுச்சு. அப்பறம் BGMஆ கர்னாடிக் இசையப் போட்டது. ஒரு இடத்துல ஓகேவாவும், இன்னொரு இடத்துல நாட் ஓகே-வாவும் இருந்தது.

10. நயன்தாரா?

இல்லையே.. இல்லையே.. ஹிரோயின் இல்லாதது ப்ளஸ்ஸா இருக்கும்னு நம்பிப் போனா, அது மைனஸ்தான்னு சொல்லீச்சு. படத்துக்குள்ள வர்ற படத்துல வர்ற ஹீரோயினா ஒருத்தங்க சில நிமிஷம் வர்றாங்க. அவ்ளதான்.

அப்ப, படத்துல பளஸ்ஸே இல்லையா?

இருக்கு. ப்ரமோஷன்ஸ். ஒரு படத்துக்கு எப்டி ப்ரமோஷன்ஸ் இருக்கணும்னு சித்தார்த்துக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. ஆரம்பத்தில இருந்து, பாட்டு ரிலீஸ், ட்ரெய்லர்ஸ், தம்மாத்துண்டு பையன் டீசர்னு கலக்கல் ப்ரமோஷன்ஸ்.

 

அப்பறம், கலரிங். டோன், படம் ஃபுல்லா நல்லாவே இருந்துச்சு. அதும் போக அந்த ரெண்டு காருக்கும் குடுத்திருந்த கலர்.

கதாபாத்திரங்களோட பேர். நாஞ்‘ஜில்’ சம்பத் - ச்சே.., நாஞ்’ஜில்’ சிவாஜி, ’ஜங்’லிங்கம், ‘ஜாக்வார் ஜெகன், ரோலக்ஸ் ராவுத்தர், தெய்வா, அட்டாக் ஆல்பர்ட், மருந்து, சோனு சாவந்த் - இப்படி படத்தோட கேரக்டர்ஸ்க்கு வெச்ச பேர்ல இயக்குனரோட ரசனை பளிச். அதே மாதிரி சில காட்சிகளை, காமிக்ஸ் படமா காமிச்சிருந்த விதம், சித்தார்த் தன் ப்ளானை புள்ளி, கமான்னு விளக்கறதுன்னு பல க்ரியேடிவான விஷயங்கள். ஆனா அதத் தொகுத்த விதத்துல ஏதோ மிஸ்ஸிங்.

படத்துல சித்தார்த் சொல்ற பஞ்ச்:  “ஒரு பெரிய வேலைய முழுசா முடிக்கணும்னா ஒம்பது சின்ன வேலைகளை முடிக்கறதுக்கு யோசிக்கக் கூடாது”.

அதன்படி, ஏதோ ஒரு பெரிய படம் பண்ணப்போற சித்தார்த் செஞ்ச, சின்ன வேலையா இந்தப் படம் இருக்கலாம். 

அந்தப் பெரிய படத்துக்காக, வி ஆர் வெய்ட்டிங் பாஸ்!


-பரிசல் கிருஷ்ணா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்