Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

Ki & Ka படத்தைப் பார்ப்பதற்கான 12 காரணங்கள்!

ல்யாணம் பண்ணிகிட்டு, மனைவிக்கு நல்லபடியா சமைச்சுப்போட்டு, கூட்டிப் பெருக்கி வீட்டைப் பார்த்துட்டு ஒரு நல்ல புருஷனா இருக்க ஆசைப்படற அர்ஜுன் கபூரும், இப்ப இருக்கற மார்க்கெட்டிங் மேனேஜர் நிலையிலிருந்து வைஸ் பிரசிடெண்ட் ஆகி, சி.இ.ஓ ஆகணும்ங்கற கனவுல இருக்கற கரீனா கபூரும் கண்ணாலம் கட்டிகிட்டு எப்டிக் குடும்பம் நடத்தினாங்கோன்னு சீரியஸ் மேட்டரை ஜாலி குல்கந்து கலந்து கொடுத்திருக்கற படம்தான் கி&கா. ஹவுஸ் ஹஸ்பெண்ட் vs வொர்க்கிங் வுமன் கான்செப்ட் இங்கே விசு, வி.சேகர் காலத்துல இருந்து பழக்கம்தான். ஆனா, அதை மில்லியனல் கல்ச்சருக்கு அப்டேட்டி கொடுத்திருக்கார் இயக்குநர் பால்கி. எது எப்படியோ, இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கலாம். ஏன்?

 

1. அட... 35 வயசாச்சாம் கரீனா கபூருக்கு.  அர்ஜூன் கபூர் அப்பா, ‘இவன் வேஸ்ட்மா’ன்னு சொல்றப்ப கம்பீரமா, ‘இப்பதான் இவனை எனக்குப் பிடிச்சிருக்கு’ன்னு  அர்ஜுனை கூட்டீட்டுப் போறப்ப ஒரு நடிப்பு.  சண்டை போட்ட உடனே கிறங்கடிக்கற முத்தம் குடுத்து இயல்புக்கு வர்றப்ப அழகான ரியாக்‌ஷன்.  ’ஃபாரினுக்கு நான் வர்ல’ன்னு அர்ஜூன் சொல்றப்ப,  ‘நான் இல்லாம நீ இருந்துடுவியா’ன்னு காதலும், கண்ணீருமா கேட்கறப்ப ஒரு நடிப்பு.  அர்ஜுனைத் திட்டீட்டு அதுக்காக வருந்தி அம்மாகிட்ட அழறப்ப.. வேற லெவல்னு வெரைட்டி காட்டி நடிச்சிருக்காங்க கரீனா.  

2. அர்ஜுன் கபூர். கொஞ்சமும் சளைக்காம கரீனாவுக்கு ஈடு கொடுத்து நடிச்சிருக்கார் போனிகபூர் பையன்! முதல் சந்திப்புல, ‘வெறும் ஹவுஸ்வைஃபா’ன்னு கரீனா சொல்ல, ‘அது அவ்ளோ ஈஸியில்ல’ல்ல கோவப்படற காட்சில ஆரம்பிச்சு, வீட்டை விட்டுப் போறப்ப, ஆசை ஆசையா எல்லாத்தையும் தடவித் தடவி பிரிஞ்சு போறது வரைக்கும் பையன் பின்னீட்டான்! 

3. ஹீரோவ விட ஹீரோயினுக்கு வயசு கூடுதல்னு ஆரம்பிச்சு (நிஜத்துல அல்ல.. படத்துல!) ஒவ்வொரு விஷயத்தையும் கணவன் - மனைவி ப்ளேட்டை திருப்பிப் போட்டிருக்காங்க.அதுல உச்சம் என்னான்னா, அர்ஜூன் வீட்டை விட்டு போறப்ப, கிரடிட் கார்ட்ல ஃப்ளைட் டிக்கெட் போடறாரு. அப்ப, கரீனா மொபைலுக்கு க்ரெடிட் கார்ட் உபயோகிச்சதுக்காக மெசேஜ் வருது! 

4. லடுக்(கி) - லடுக்(கா) தான் கி & கான்னு பார்த்தா, கியா - கபீர்தான் கி & கா. இப்படி பல இடத்துல ‘பால்கி’ டச்சஸ்! அதேமாதிரி அர்ஜூன் கேரக்டர் பண்றது பூரா, வழக்கமா மனைவிகள் பண்ற விஷயங்களாவே வெச்சிருக்கறது. துபாய்ல கரீனா, கொலீக் கூட பேசிட்டிருக்கறப்ப, கோவப்படறது, கரீனா, க்ளாஸை டீபாய்ல வைக்கறப்ப, ‘ப்ச்’ன்னு சலிச்சுகிட்டு டீ மேட்டை இழுத்து அது மேல க்ளாஸை வைக்கறதுன்னு கேரக்டர் டீட்டெய்லிங் அற்புதம்!

5. பிசி ஸ்ரீராம் கேமரா. அவ்ளோ க்ளோஸப்ல ரெண்டு பேரையும் காட்டற அழகு.. அப்பறம் அந்த ஹாஸ்பிடல்ல கரீனா கபூர், அர்ஜூனைப் பொரிஞ்சு தள்றப்போ அவங்க உடல்மொழில இருக்கற பதட்டத்தை கேமராவை கையாண்ட விதத்துல அட்டகாசமா காமிச்சிருப்பார் மனுஷன்!


6. சீன் ரிச்னஸ்: இந்த, இந்திக்காரங்க ரிச்னஸைக் காமிக்கறப்ப ‘அப்ப்ப்ப்ப்டி’ இருக்கும் பார்த்துக்கங்க! முதல் காட்சில வர்ற கல்யாண ஹால், கரீனா வீடு எல்லாமே அழகு. அதே மாதிரி ஒரு விண்டேஜ் ரயில் பேட்டையைக் காட்றாங்க. அதும் அழகு!

7. ஆர்ட் டைரக்‌ஷன். அர்ஜூன் கபூர் ஒரு ரயில் பைத்தியம்கறதால படம் முழுக்க, பல காட்சிகள்ல ரயில் கிட்டத்தட்ட துணை நடிகராவே வந்திட்டு இருக்கு. அதும் கரீனா வீட்ல, சர்வ் பண்ற ட்ராலியா, எல்லா அறைகளுக்கும் சுத்தற ரயில்... அவ்ளோ அழகு!

8. வசனங்கள்: பல இடங்கள்ல தெறி. வேலை விஷயமா கரீனா வெளிநாடு போய்டறப்போ, அவங்க அம்மா நோய்வாய்ப்பட, கூட இல்லாத அர்ஜூனைத் திட்டித் தீர்க்கறப்போ பேசற சீரியஸ் வசனங்களாகட்டும், பல இடங்கள்ல சின்னச் சின்னதா சேதி சொல்ற வசனங்களாகட்டும், அப்பாகிட்ட, அர்ஜூன் பேசற வசனங்களாகட்டும் (You are making buildings and I am making home), நல்லாவே இருக்கு. உதாரணத்துக்கு ஒண்ணு: கல்யாண ஹால்ல எல்லாரும் டான்ஸ் ஆடிட்டிருக்கறப்ப, தனியா நின்னுட்டிருக்கற கரீனாகிட்ட ஒருத்தன் ‘கம் ஆன்’ன்னு கூப்டுவான்.

“நோ.. பீரியட்ஸ்”

“ஓ.. ஓகே. ஸ்டே ஃப்ரீ!”

9. இளையராஜாவின் பின்னணி இசை. தவிர, ”Foolishq" - வழக்கமான இந்திப் பாட்டு மெட்டுல இல்லாம இருக்கேன்னு பார்த்தா அதும் ராஜா கீபோர்ட் வண்ணம்.

10. படம் நெடுக இழையோடு அர்ஜூன் - கரீனா ரொமான்ஸ். துபாய்ல, வேலை விஷயமா நியூயார்க் மார்க்கெட்டிங் ஹெட் கூட பேசிட்டிருப்பாங்க கரீனா. தூரத்துல இருந்து பார்த்துட்டே இருக்கற அர்ஜூன் கொஞ்சம் கொஞ்சமா கடுப்பாகி, பக்கத்துல போயி, ‘சாப்டலாமா’ன்னு கேட்க, ‘நீ சாப்டு ரூமுக்குப் போ’ன்னுடுவாங்க கரீனா. ரூம்ல வந்து தூங்கிடுவாரு. அப்பறமா கரீனா வர, ‘உனக்கு அதுதானே முக்கியம். போய் அவங்கூடவே படு’ன்னு சொல்ல ஓங்கி அறைஞ்சுடுவார் கரீனா. அப்பறமா பச்சக்னு முத்ததுல சமாதானப்படலம் ஆரம்பிச்சு, எல்லாம் முடிஞ்சதும், ‘நியூயார்க் ஆள் பொசசிவ்நஸ் நல்லாவே வேலை செய்யுது. நாளைக்கு இட்டாலி ஆள் பொசசிவ்நஸ்க்கு டிரை பண்ணணும்’ன்னு காதலோட கரீனா சொல்ற இடம்... க்யூட் பேபி!

11. கரீனா அம்மாவைப் பார்த்ததும், ‘உங்களுக்கு ஓகேன்னா உங்களையே கட்டிக்கறேன்’ன்னு ஆரம்பிச்சு அர்ஜூன் கபூருக்கும், கரீனாவோட அம்மாவுக்கும் இடையில ஊடாடும் நட்பான உறவு க்ளாஸ். அவங்களை, வேற ஒருத்தர்கூட பார்த்ததும் ‘என்ன.. ரொமான்ஸா.. பொண்ணு வீட்டுக்கே கூட்டீட்டு வர்றதானு ஃபீல் பண்ணினீங்கன்னா, ஃப்ரெண்ட் வீடு காலியாதான் இருக்கு’ன்னு ஃப்ரெண்ட்லியா பேச, அவங்க சளைக்காம பதில் சொல்லன்னு.. அதை ஒரு விதமாவே கொண்டு போயிருக்காங்க. 

12. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. . கெஸ்ட் ரோல்ல வர்றார் ஒருத்தர்.. யெஸ். அமிதாப் & ஜெயா பச்சன்! அர்ஜூன் கபூர், தன்னோட வீட்டுக்கு வர்றப்ப, நின்னுகிட்டு ஒரு லுக் குடுக்கறார் பாருங்க.. 120 ரூவா அதுக்கே போச்சு! அர்ஜூன், ஜெயா பச்சன்கிட்ட பேசிட்டு வீட்டை விட்டுப் போற வரைக்கும் அதே முகபாவனையோட இருக்கறவர் கடைசில ஒரு கேள்வி கேட்கறார் மைண்ட் வாய்ஸ்ல.. செம!

எல்லாத்தையும் மீறி ஒரு விஷயம் சொல்லணும்னா, ஆண் - பெண் பேதமெல்லாம் இல்லைங்கறத இன்னும் அழுத்தமா பதிவு பண்ணாம மேலோட்டமா பதிவு செஞ்சுட்டாருங்கறதுதான் பால்கி பண்ண குறை.
ஆனாலும், இந்த மாதிரி சப்ஜெக்ட்ஸ் தமிழ்ல யாரும் தொடமாட்டாங்க. அதனால அதுக்குள்ள இந்தில படத்தைப் பார்த்திருங்க..! 
     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்