வில்லனை தும்வம்சம் செய்யும் ஹீரோ தான் 'சர்தார் கப்பர் சிங்'

ஹைதராபாத்தில் அக்யுஸ்டுகளை புரட்டி எடுக்கும் டெரர் போலீஸ் கப்பர் சிங் (பவன் கல்யாண்). நண்பர் ஒருவரின் வேண்டுதலுக்கினங்க பவனை ரத்தன்பூருக்கு பதவி உயர்வோடு பார்சல் செய்கிறார் உயர்அதிகாரி தனிக்கெல்லா.

ரத்தன்பூரை ஆண்டுவரும் ராஜகுடும்பம் இரண்டு. ஒன்று இளவரசி அர்ஷி (காஜல் அகர்வால்) குடும்பம், இன்னொன்று பைரவ் சிங் (ஷரத் கெல்கர்) குடும்பம். ஷரத் கெல்கர் ஊர் மக்களை அடிமைப்படுத்தி, கிராமங்களை தன் வசப்படுத்த விரும்புகிறார். அதைத் தடுப்பதற்காக ஒரு டெரர் போலீஸ் வேண்டும் என தனிக்கெல்லாவிடம் முகேஷ் ரிஷி கேட்கிறார். அதற்காக ரத்தன்பூர் வந்து சேர்பவர் தான் பவன் கல்யாண். ஆரம்பத்தில் ஜாலி, கேலி, கூத்தாகத் திரியும் பவன் சட்டெனாக சீரியசாகி ஷரத்துக்கு எதிராக திரும்ப, அங்கு ஆரம்பிக்கிறது அதிரடி ஆக்‌ஷன் மேளா.

டெய்லர் மேட் கதையில் தன்னைப் பொருத்திக் கொள்ள தானே டெய்லராக மாறியிருக்கிறார் பவன். படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பது பவனே தான். சீனுக்கு சீன் பவனின் பெர்ஃபாமென்ஸ், டயலாக் டெலிவரி அத்தனையும் அப்ளாஸ் அள்ளுகிறது.

"எந்த ஊர்லயாவது சிங்கம் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கா? அப்பறம் எப்பிடிடா சர்தார் ஆசீர்வாதம் வாங்குவான்" என வில்லனிடம் கெத்துகாட்டுவது, காஜல் அரண்மையில் வேலை செய்யும் பெண் என நினைத்து காதலிப்பது, அவர் தான் இளவரசி எனத் தெரிந்தபின் விலகிச் செல்வது என ஆக்‌ஷன் + ரொமான்ஸில் பொளந்து கட்டுகிறார் பவன். எக்ஸ்ட்ரா கோட்டிங் மேக்கப்புடன் அழகு இளவரசியாக வசீகரிக்கிறார் காஜல்.

முதல் பாகத்தில் இருந்த கச்சிதம் மட்டும் படத்தில் மிஸ்ஸிங். மற்ற படி அதே ஹீரோ வில்லன் ஈகோ, வெடிக்கும் துப்பாக்கி, தெறிக்கும் தோட்டா என ஆக்‌ஷன் மசாலா ரசிகர்களுக்கு தௌசன் வாலா. தேவி ஸ்ரீபிரசாத் பின்னணி இசை படத்துக்கு எக்கச்செக்கமாய் மாஸ் கூட்டுகிறது குறிப்பாக அந்த இன்டர்வெல் ஃபைட் சீன் தெற்ற்றீஈஈஈஈ.

ஜாலியாக, ஆக்‌ஷன் சரவெடி படம் எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ற பட்டாசு இந்த 'சர்தார் கப்பர் சிங்'.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!