Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமந்தாவின் காதல் என்னாச்சு? த்ரிவிக்ரமின் அதே பேமிலி பேக்கேஜ்! அ..ஆ.. விமர்சனம்!

என்னதான் அடிச்சிக்கிட்டாலும் சொந்தங்கள் தான் நம்முடைய வாழ்வில் மிகவும் முக்கியமானவர்கள் என்ற ஒன்லைனில் மீண்டும், ஒரு குடும்பம் சார்ந்த கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் த்ரிவிக்ரம். இந்தமுறை அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் “அ..ஆ..”. சமந்தா, நித்தின், நதியா, அனன்யா, அனுபமா மற்றும் அவரின் ஆஸ்தான கேரக்டர்கள் நடித்திருக்கும் இந்தப் படம் தெலுங்கு சினிமாவிற்கு இந்த வாரத்திற்கான பேமிலி பேக்கேஜ்.

சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ் ராஜ் கேரட்டரில் வரும் நதியாவின் மகள் தான் சமந்தா (அனுஷ்யா ராமலிங்கம்), இவரின் வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும், ஏன் கல்யாணம் வரையிலும் நதியா முடிவுசெய்கிறார். அதனால் மன அழுத்தம் அதிகமாகி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் சமந்தா. அப்படியும் நதியாவின் மனம் மாறவில்லை. இதனால் தந்தையான நரேஷின் திட்டத்தின்படி, அவரின் சொந்த ஊரான விஜயவாடா அருகில் இருக்கும் கிராமத்திற்குச் செல்கிறார் சமந்தா. சமந்தாவின் அத்தைபையனான நித்தின் (ஆனந்த்) மீது காதலிலும் விழுகிறார். நதியாவிற்கும், அவரின் அண்ணன் ஜெயபிரகாஷூக்கும் பிளாஸ்பேக்கில் இருக்கும் குடும்ப சண்டை என்ன ஆனது, சமந்தாவிற்கும் நித்தினுக்கும் திருமணமானதா என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதிலே "அ..ஆ.." படத்தின் திரைக்கதை.  

அந்த கிராமத்திலேயே லோக்கல் டானாக சுற்றிவரும் ரமேஷின் மகளாக அனுபமா, நித்தினை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆசை அவருக்கு. கிராமத்து வாழ்க்கை பிடித்துப்போக,  அதே நேரத்தில் நிதின் மீதும் காதலில் விழுகிறார் சமந்தா. நித்தின் வீட்டுக்கு வந்து எல்.இ.டி டிவி, ஏசி என சமந்தா பர்சேசிங் லிஸ்ட் போடும் காட்சிகள் அதிரிபுதி சிரிப்பு வெடி.

மகேஷ்பாபுவின் “அதடு”, “கலிஜா”, பவன்கல்யாணின் “அத்தாரின்டிகி தாரேதி” மற்றும் அல்லுஅர்ஜூனின் “சன் ஆஃப் சத்தியமூர்த்தி” உள்ளிட்ட ஹிட் பேமிலி படங்களை இயக்கிய த்ரிவிக்ரம், இந்தமுறையும் பேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்திருக்கிறார்.

படத்தின் அடுத்தடுத்தக் காட்சி இதுதான் என்று நம்மால் யூகிக்கமுடிந்தாலும், ஜாலியான கதை சொல்லல், திகட்டாத சென்டிமெண்ட் என திரைக்கதையில் சுவாரஸ்யமும், "நாம இன்னொருத்தவங்க ஜெயிக்கறதுக்காக நம்ம கூட இருக்கவங்கள தோற்க வைக்கைக் கூடாது", "மனுஷங்கனாலே அப்பிடித்தான் அவங்களுக்குத் தேவையானத மட்டும் ஞாபகம் வெச்சுப்பாங்க" என அதே அக்மார்க் த்ரிவிக்ரம் ஸ்டைல் வசனங்கள் என எந்த விதத்திலும் ஆடியன்ஸுக்கு போர் அடிக்காதப் படத்தை தந்து தப்பித்திருக்கிறார் இயக்குநர்.

நாடோடிகள் படத்தில் பார்த்த அதே அனன்யா, ஏழுவருடம் கழித்தும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பளிச்சிடுகிறார், 'பிரேமம்' படத்தில் கவர்ந்த சுருள் முடி அழகி அனுபமா பரமேஷ்வரன், அழுத்தி வாரி ஜடை பின்னி நித்தினை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் டிபிகல் கிராமத்துப் பெண்ணாக வந்திருக்கிறார். சமந்தா ஒரு காட்சியில் “பாவா ஒரு நிமிஷம்” என்று நித்தினை அழைக்கும் போது, பெண் பார்க்கவந்தவன் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சீட்டின் முன் வரவைகிறார் ஹாட் சமந்தா.

குறிப்பு: இந்தப் படம் பிரபல நாவலான “மீனா” என்ற புத்தகத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கிறார் இயக்குநர். தவிர, இந்த நாவலை மையப்படுத்தி 1973ல் மீனா என்ற பெயரிலேயே நடிகை விஜயநிர்மலா நடித்தப் படமும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

காமெடி சென்டிமெண்ட், காக்டெய்லாக நகரும் கதை, ரெண்டு நிமிடம் உட்கார்ந்து பேசியிருந்தால் தீர்ந்திருக்கும் பிரச்சனை தான், ஆனால், அதை படத்தின் பிரதானமாக வைத்துக் கொள்வது என ஸ்டீரியோ டைப்பாகவே இயக்கிக் கொண்டிருக்கும் த்ரிவிக்ரம் கொஞ்சம் புதிதாக யோசிக்க வேண்டிய நேரம் இது.

மொத்தத்தில் அ..ஆ.. கொஞ்சம் எமோஷன், நிறைய காமெடி, காதல், சண்டை என்று ஒவ்வொரு சீனிலும் ரசிக்கவைத்த விதத்தில், இவரின் கடந்த படங்களைப் போல இல்லாவிடினும் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது இந்த னுஷ்யாராமலிங்கம்.. னந்த் விகாரி...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்