வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (08/08/2016)

கடைசி தொடர்பு:14:04 (09/08/2016)

ஸ்பீட் ஓகே.. செல்ஃப் எடுக்கலியே! Jason Bourne - படம் எப்படி?

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் ஒருவகை ஹாட் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் என்றால், Bourne சீரிஸ் படங்கள் இன்னும் அதிவேகமான அதிரடி ஆக்ஷன்  திரைப்படங்கள். 2002ல் வெளியான “Bourne Identity’ என்ற படமே Bourne படங்களின்  முதல் பாகம். இதைத் தொடர்ந்து மூன்று பாகங்கள் வெளியாகிவிட்டது. ஐந்தாவதாக இந்தவாரம் ரிலீஸாகியிருக்கிறது “ Jason Bourne”

நான்காவது பாகத்தைத் தவிர மற்ற எல்லா பாகத்திலும் மேட் டேம்ன்தான் கதாநாயனாக நடித்திருப்பார். இவர் நடிப்பில் வெளியான  The Bourne Ultimatum படத்தின் தொடர்ச்சியே ஐந்தாவது பாகமான Jason Bourne.

Bourne படங்களின் வழக்கமான கதையான, அம்னீசியாவில் பாதிக்கப்பட்ட, தான் யாரென்றே தெரியாத பழைய சிஐஏ சீக்ரெட் ஏஜென்ட்டாக வலம்வருகிறார் Bourne." என் அப்பாவ யார்டா கொன்னீங்க ?"  என கோலிவுட் அர்ஜுன் போல் தேடும் பார்னுக்கு , சில நிமிடம் கழித்து, அந்த உருவம் மங்கலாக நினைவிற்கு வருகிறது. கொலை செய்தவனை தேடிச்செல்கிறார். அந்த நேரத்தில் சிஐஏ பார்னை கண்காணித்துவருகிறது. சிஐஏவிற்குள் பார்னை கைது செய்ய ஒரு குழுவும், பார்னை போட்டுத்தள்ள மற்றொரு குழுவும் போட்டி போடுகிறது.  யார் அந்த வில்லன் என்பதை தேடிக்கண்டுப்பிடித்து, அடித்துத் துவைத்துக் காயப்போடுவதே ஜேசன் பார்ன் படத்தின் கதை.

படத்தின் ப்ளஸ் சண்டைக்காட்சிகள் மட்டும் தான். அதுமட்டுமின்றி அடுத்தடுத்த காட்சிகளில் ஒவ்வொரு நாடாக பயணப்படுகிறது கேமிரா. குறிப்பாக கிரீஸில் நடக்கும் கலவரத்தின் நடுவிலேயே பார்னைத் தேடும் வில்லன்களின் 20 நிமிட சேஸிங் காட்சி அதிரடிக்கிறது. நிற்காமல் பரபரத்துக்கொண்டே இருக்கும் கேமிராவும், கச்சிதமான எடிட்டிங்கும் காட்சியை வேறு லெவலிற்குக் கொண்டுச்செல்கிறது.  5 மணி நேரத்திற்கு எடுக்கப்பட்டு ஃபாஸ்ட் ஃபார்வார்டு செய்து இரண்டு மணிநேரமாகச் சுருக்கிய மாதிரி, விர்ர்ர்ர்ர்ரென்று பயணிக்கிறது திரைப்படம்.

ஜேசன் பார்ன் படங்களின் முக்கிய ஈர்ப்பே, வேகமாக நகரும் திரைக்கதையும், சீட் நுனியில் அமரவைக்கும் த்ரில்லர் காட்சிகளுமே. ஆனால் இந்தப் படத்தில் ஏனோ சம்திங் மிஸ்ஸிங். ஹீரோ மேட் டேம்னுக்கு குறைவான டைலாக்ஸ் மட்டுமே. ஆனால் அலிசியா விக்கேண்டர் படமுழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார், ஆனாலும் இன்னும் இவரை நடிப்பில் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. 3டியில் படம் உருவாகியிருப்பதால், சில காட்சிகளில் கண்ணை உறுத்துகிறது. 2டியே எங்களுக்கு போதும் பாஸ்.

சி.ஐ.ஏ. தலைமை அதிகாரியாகவரும் டாமி லீயும், ஜோன்ஸின் சீக்ரெட் கொலைகாரனாக வரும் வின்சென்ட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ஜேசன் பார்னை கொல்ல வருகிறார்கள். ஆனாலும் பார்னைத் தான் யாராலும் அழிக்கமுடியாதே என்ற எண்ணத்தை முந்தைய பாகங்கள் தந்துவிட்டதால், செல்ஃப் எடுக்காத மோட்டாராக நகர்கிறது திரைக்கதை. புயல் வேகத்தில் செல்லும் படத்தில், கண் சிமிட்டும் நேரத்தில் சில காட்சிகள் பறந்துவிடுகிறது. ஆனால், எழுந்து சென்று பாப்கார்ன் வாங்கி வந்து மீண்டும் அமர்ந்தாலும், படம் புரியும்படி இருப்பது தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

Bourne பிரியரா நீங்கள்? சண்டைக்காட்சிகள், த்ரில்லர், அதிரடி என்று திணறடிக்கும் திரைக்கதை வேண்டும் என்று நினைத்தால் Jason Bourne படத்தைப் பார்க்கலாம். ஆனால் முந்தைய பாகங்களில் இருந்த வேகம் இதில் கொஞ்சம் குறைவு தான். அல்லது காமெடி அதிரடி கலாட்டாவாக படம் பார்க்க நினைத்தால் வில் ஸ்மித்தின் சூசைட் ஸ்குவாட் பார்க்கலாம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்