ஆஸ்கர் பட்டியலில், இடம் பிடிப்பார்களா டாம் ஹான்க்ஸும், கிளின்ட் ஈஸ்ட்வுட்டும்? SULLY படம் எப்படி?

 

இந்த ஆண்டு வெளியாகும் இரண்டாவது டாம் ஹான்க்ஸ் படம், SULLY. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான A Hologram for the King திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும், டாம் ஹாங்க்ஸ் தன் நடிப்பால் எப்பேர்ப்பட்ட ஒரு சுமாரான படத்தையும் நல்ல படமாக மாற்ற முடியும் என  நிரூபித்து இருந்தார். இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட், டாம் ஹாங்க்ஸ் போன்ற நபர்கள் எல்லாம், விருதுகள் பட்டியலில் அடிக்கடி தென்படும் பெயர்கள்.  இந்த வாரம் வெளியான SULLY, விருதுகளின் வாயிலுக்கு, இவர்களை அழைத்துச் செல்லுமா?


ஜனவரி 15,2009-ம் ஆண்டு நியூ யார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் 150 பயணிகளுடன் புறப்பட்டது 1549 விமானம். மூன்று நிமிடம் மட்டுமே பறந்த நிலையில், விமானத்தை பறவைகள் தாக்கிவிட, அதன் எஞ்சின் செயல் இழந்துவிடுகிறது.எஞ்சினும் இல்லாத சூழலில், ஒன்று மீண்டும் லாகார்டியா விமான நிலையத்திற்கு திரும்ப வேண்டும்,அல்லது அருகில் இருக்கும் டெடெர்போரோ விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டும். ஆனால், அதன் பைலட் சல்லன்பெர்கெர், ஹட்சன் நதியின் மேல், விமானத்தை தரையிறக்கிவிட்டார். பயணிகள் , பணிப்பெண்கள், சல்லென்பெர்கெர், துணை விமானி ஸ்கைல்ஸ் என மொத்த 155 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அமெரிக்கா முழுவதும், சல்லென்பெர்கெர் ஹீரோ என கொண்டாடப்பட்டார்.அதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் SULLY.


ஓர் இரவில் ஹீரோவான சல்லென்பெர்கெருக்கு, பிரச்னை பின்பு தான் ஆரம்பமாகிறது.பாதுகாப்பு நிறுவனம், இவர் ஹட்சன் நதியில் இறக்கியது தவறு என்றும், விமான நிலையத்திலேயே இறக்கி இருக்கலாம் என நிரூபிக்க முயல்கிறார்கள். அதை சல்லென்பெர்கெர் எப்படி சமாளித்தார் என நீள்கிறது கதை.பைலட்டாகவும் சரி, அதற்குப் பின், அவரைச் சுற்றி நடக்கும் பிரச்னைகளின் போதும் நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார் டாம் ஹாங்க்ஸ். முழுப்படத்திலும், அவர் மட்டுமே பிரதான கதாப்பாத்திரம். டாம் ஹாங்க்ஸின் மனைவியாக வரும் லௌரா லின்னிக்கு எல்லாம், ஒரு மொபைல் மட்டும் தான் துணையாக நடித்து இருக்கிறது. 

86 வயதான கிளையன்ட் ஈஸ்ட்வுட், படம் நெடுகிலும், தனது முத்திரையைப் பதித்து இயக்கி இருக்கிறார். படத்தின் இறுதியில் டாம் ஹாங்க்ஸ் அந்த கமிட்டி அறையில் பேசும் வசனங்களும், காட்சிகளும் டாப் கிளாஸ். ஆஸ்கர் விருதுப் பட்டியலில், SULLY இடம் பெறுமா என்பது சந்தேகமே. ஆனால், கண்டிப்பாக பரிந்துரைப் பட்டியலில் கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் பெயரும், டாம் ஹாங்க்ஸ் பெயரும் இருக்கும் .

படத்தின் ட்ரெய்லரைக் காண

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!