மலர் டீச்சரை முந்தினாரா சித்தாரா டீச்சர்? #பிரேமம் படம் எப்படி?

பிரேமம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது என்று சொன்னது தான் தாமதம்.  போஸ்டர், டீசர், டிரெய்லர் என தொடர்ந்து அதைப் பற்றிய பேச்சுக்களால் வைரலலிலேயே இருந்தது படம். ஒரு வழியாக படமும் வெளியாகிவிட்டது. மலையாளத்தில் நிகழ்ந்த மேஜிக் தெலுங்கில் நடந்திருக்கிறதா?

எச்சரிக்கை: ஒரிஜினலைப் பார்க்காதவர்கள் நேராக அடுத்த பாராவுக்குப் போகலாம். நீங்கள் மலையாளத்தில் பிரேமம் படத்தை பார்த்தது, சாய்பல்லவியை ரசித்ததது, மலரே பாடல் என எல்லா கோட்டையும் அழித்துவிட்டு படம் பார்க்க அமராவிட்டால் கம்பெனி பொறுப்பாகாது. 

படம் பார்க்காதவர்களுக்காக கதை சுருக்கம். தன் வாழ்வில் விக்ரம் (நாக சைத்தன்யா) சுமா (அனுபமா பரமேஷ்வரன்), சித்தாரா (ஸ்ருதிஹாசன்), சிந்து (மடோனா செபாஸ்டியன்) என மூன்று பெண்களிடம் கொண்ட காதல் கதைகள் பற்றி ஜாலி, கேலியாக பயணிக்கும் படமே பிரேமம். மலையாளத்தில் நீங்கள் பார்த்த பிரேமத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது இந்த தெலுங்கு பிரேமம் என்பது மட்டும் உறுதி. இயக்குநர் சந்தூ அதற்காக சில மாற்றங்களும் செய்திருக்கிறார். ஆனால், அது முழுமையாக வேலை செய்யவில்லை. 

தாடி வைத்து முரட்டுத்தன ரோலிலும், சோக சீனிலும் மட்டும் ஏதோ கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளும் படி இருக்கிறார் நாக சைத்தன்யா. ஆனால், க்யூட்டாக செய்ய வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் (குறிப்பாக பள்ளிப்பருவ காதல் பகுதியில்) ஹைப்பர் ஆக்டிவ் குழந்தை போல செய்யும் சேட்டைகளும், கொடுக்கும் முகபாவங்களும்... தாங்கல. ஹீரோயின்களில் அனுபமா பரமேஷ்வரன் மட்டும் சூப்பர். அதே அழகு, அதே ரியாக்‌ஷன்கள் என சேம் டூ சேம். பிரேமம்  என்ற ஒரே படத்தில் தென்னிந்தியாவில் வைரல் நாயகியானவர் சாய் பல்லவி.  மலர் கேரக்டருக்கு சாய் பல்லவி சேர்த்த நியாயம் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வைத்தது. மலர் கேரக்டரில்  ஸ்ருதி ஓரளவு நன்றாகத்தான் நடித்திருக்கிறார், ஆனால் ஏனோ படம் பார்க்கும் போது ஸ்ருதி மனதில் தங்கவே இல்லை. அது தான் மைனஸ். நாக சைதன்யா - ஸ்ருதி இடையேயான காதல் எந்த வித உணர்வுகளையும் பார்வையாளர்களுக்கு கடத்த வில்லை. ஸ்ருதி ஹாசன் நடிப்பு எடுபடவில்லை என்பதை விட ஆச்சர்யம் ஒரிஜினலில் நடித்த மடோனா இங்கே தேமேவென வந்து போனது ஆச்சர்யம் கூட்டியது. அந்த க்யூட் வெல்வெட் கேக் சீன்  மிஸ்ஸிங்! 

'இந்த சைக்கிள் செயின யூஸ் பண்ற உரிமை எங்க குடும்பத்துக்கு மட்டும் தான்டா இருக்கு', கெஸ்ட் ரோலில் வெங்கடேஷ், 'உன் பேர் என்ன?, அகில். உன்ன என்ன பண்றது நீ போ', நாகர்ஜுனாவின் வாய்ஸ் ஓவர் என முடிந்த வரை நாக சைத்தன்யாவின் ஃபேமிலி ரெஃபரன்ஸை பயன்படுத்தி கைதட்டல் அள்ளியிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு அழகான ப்ளாட்டை வைத்துக் கொண்டு ரெஃபரன்ஸை வைத்து தான் கைதட்டல் வாங்க முடிந்ததா? இதில் "என் ஜாதகப்படி எனக்கு 'எஸ்' எழுத்தில் ஆரம்பிக்கும் பொண்ணு தான் மனைவியா வரும்" என குறியீட்டு வசனம் வேறு.

கோபி சுந்தரின் பின்னணி இசையும், கார்த்திக்கின் ஒளிப்பதிவும் எந்த சப்போர்ட்டுமே இல்லாத படத்தைத் நன்றாகக் கொடுக்க உழைத்திருக்கிறது. மலரே பாடலின் தெலுங்கு வெர்ஷன் எவரே பாடல் மட்டும் இதம். 

 ஒரிஜினல் பிரமத்தின் பலமே, அதன் நடிகர்களும், பெர்ஃபாமென்ஸும், இயல்பை மீறாத அசத்தல் மேக்கிங்கும் தான். அது தெலுங்கில் கைகூடவில்லை. பிரேமத்தில் இருந்த அந்த குட் ஃபீல் இதில் மிஸ்ஸிங். பிரேமம் படத்தை மீண்டும் பார்க்க மாட்டேன் என உறுதியோடு இருப்பவர்கள் ரெமோ பக்கம் ஒதுங்கவும்

 

 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!