Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த வார படங்களின் ’க்விக்’ விமர்சனங்கள் #படம் எப்படி


லாங் வீக் எண்ட், போனஸ் மாதம் என பல காரணங்களால் இந்த வாரம் எல்லா மொழிகளிலும்  ஏகப்பட்ட படங்கள். இந்த வார ரிலீஸ் படங்களின் ஒரு க்விக் ர்வியூ தொகுப்பு உங்களுக்காக...


1) ரெமோ 
   பழைய கதை, ரொம்ப பழைய திரைக்கதை... சிவகார்த்திகேயன் மட்டும் புதுசு. லாஜிக்குகளை மறந்து சிவாவின் மேஜிக்கை ரசிக்க தயார் என்றால் ரெமோ ஓடும் தியேட்டருக்கு ஒரு விசிட் அடிக்கலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.


2) றெக்க:
   பி, சி ஏரியாக்களுக்கு செல்ல விஜய் சேதுபதி எடுத்திருக்கும் விசாதான் றெக்க. ரன்னையும், கில்லியையும் குழைத்து இன்ன பிற தமிழ் மசாலா படங்களை பொடியாக்கு மேலாப்புல தூவினால் கிடைப்பதுதான் றெக்க. காதுக்குள் நுழைந்து டொக்கு டொக்கு என தட்டும் அதிரடி தீம் ம்யூசிக்கையும், ஸ்லோ மோஷன் வாக்கையும் ரசிப்பீர்கள் என்றால், றெக்க கட்டி பறக்கலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.


3) தேவி:
   நின்று, நிதானமாக கதை சொல்பவர் ஏ.எல்.விஜய். கோடம்பாக்க பேய் செண்டிமெண்ட் இவரையும் விட்டு வைக்கவில்லை. நடிகை ஆக ஆசைப்படும் பேய் ஒன்று தமன்னா மீது ஏறிவிடுகிறது. அந்த பேய்க்கும், கணவன் பிரபிதேவாவுக்கும் நடிக்கும் அக்ரீமெண்ட் கூத்துதான் தேவி. “ஓவர் பில்டப் எனக்கு அலர்ஜி” என்பவர்கள் தேவி ஓடும் தியேட்டருக்கு வண்டியை விடலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.


4) பிரேமம் (தெலுங்கு)
   மலையாளத்தில் வந்து இந்தியாவையே அதிரடித்த கிளாஸீக் காதல் கதை(கள்). மலர் டீச்சராக ஸ்ருதிஹாசன் என்பதுதான் பாசிட்டிவ் & நெகட்டிவ் இரண்டுமே. “இந்த சீசன்ல காமெடி படம் வரலையா ப்ரோ” எனக் கேட்கும் சார்லி சாப்ளின் ரசிகர்கள் போக வேண்டியது பிரேமம் தான். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.


5) புலிமுருகன் (மலையாளம்)
  மோகன்லாலில் ஆக்‌ஷன் அவதாரம். புலியை அடக்கும் வீரன் மோகன்லால். மனித புலிகள் சிலரிடம் மோத வேண்டி வருகிறது. அவர்களை எப்படி சமாளித்தார் என்னும் ஆக்‌ஷன் த்ரில்லர் தான் புலிமுருகன். ஹார்ட்கோர் மோகன்லால் ரசிகர்கள் மட்டுமே காண  வேண்டிய படம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்