தொடரியில் ஒரு மிருதன்... - டிரெயின் டு பூசன் படம் எப்படி? | Train to busan movie review

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (25/10/2016)

கடைசி தொடர்பு:11:50 (25/10/2016)

தொடரியில் ஒரு மிருதன்... - டிரெயின் டு பூசன் படம் எப்படி?

உலகம் முழுக்க பலமுறை இனப்பெருக்கம் செய்யப்பட்ட கதைகளுள் ஜோம்பி சினிமாவும் ஒன்று. அதை தமிழுக்கு கொண்டு வந்தது மிருதன். கடந்த ஜூலை மாதம் வெளியான கொரிய படமான Train to busan ஸோம்பி சினிமா தான். வேற லெவலில் எடுக்கப்பட்டு உலக ஹிட் அடித்து இருக்கிறது படம்.

விவாகரத்து பெற்ற சியொக்-வூ, தன் மகளின் பிறந்தநாளுக்காக மகளை அழைத்துக் கொண்டு மனைவியை பார்க்க சியோலில் இருந்து அதிவேக ரயிலில் பூசனுக்கு கிளம்புகிறார். அதே ரயிலில் ஒரு பேஸ்பால் குழு, ஒரு பணக்காரர், வயதான இரு பெண்மணிகள், கர்ப்பிணி பெண், அவளது கணவர், ஒரு ஆதரவற்றவர் என பலர் பயணிக்கிறார்கள். ரயில் கிளம்பும் தருவாயில் ஸோம்பியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ரயிலில் ஏறுகிறார். அடுத்த 104 நிமிடங்கள் ரயிலுக்குள் நடக்கும் த்ரில்லர் தான் கதை. படத்தின் பெரும்பகுதி ரயிலுக்குள் தான் நடக்கிறது. தொடரி மாதிரியா என்பவர்களுக்கு, இல்லவே இல்ல பாஸ்... நல்ல த்ரில்லர் படம் தான் Train to busan.

செல்லும் வழியெல்லாம் ஸோம்பிக்களின் ஆதிக்கம். டேஜோனில் இறங்கி தப்பிக்கலாம் என நினைக்கும் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. பூசாரி மொதக்கொண்டு ஸோம்பியாக மாறி இருக்கிறார்கள்.

மற்றவர்களைக் காப்பாற்ற அவகாசம் கிடைக்கும் என்பதற்காக தன் உயிரையும் விடும் முதியவர்; தங்கள் உயிர் முக்கியம் என நினைத்து பலரை ஸோம்பிகளுக்கு இரையாக்க நினைக்கும் மனிதர்களுக்கு மூதாட்டி தரும் தண்டனை; காதலி ஸோம்பியானதும் அந்த பேஸ்பால் ஹீரோ வெடித்து அழுவது; ஒவ்வொரு முறையும் இவர்கள் சண்டைபோடும் போது மனிதத்தின் உருவாக இருக்கும் அந்த சிறுமி அழுவது; எல்லாவற்றிற்கும் தான் காரணம் என இறுதியில் ஹீரோ எடுக்கும் முடிவு என காட்சிக்கு காட்சிக்கு சுவார்ஸ்யங்களை புதைத்து வைத்திருக்கிறார் இயக்குனர் யியோன் சாங்-ஹோ. எல்லாரையும் கடந்து தனித்து நிற்கிறார் அந்த குண்டு நடிகர் சங்-வா

சில பல க்ளீஷே காட்சிகளும், லாஜிக் மீறல்களும் (ஸோம்பில என்னடா லாஜிக்னு ஸோம்பியா மாறாதீங்க) இருந்தாலும் ஒரு அட்டகாசமான த்ரில்லர் திரைப்படம். எப்படியும் தமிழ் டப்பிங்கில் அது நம்மள நோக்கித்தான் வருது போன்ற வசனங்கள் வரும் என நம்பப்படுவதால், நல்ல த்ரில்லர் அனுபவத்துக்கு ஆங்கிலத்தில் பார்ப்பது சுபம்.

இறுதியாக தப்பித்தவர்கள் பூசனை அடைகிறார்கள். பூசன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மக்களின் வருகையையொட்டி சுட்டுத்தள்ள தயார் ஆகிறார்கள். அந்த முடிவு... திரையில் காண்க.

ஆரம்பத்தில் ரயில் போலவே ஸ்லோவாக ஆரம்பித்து,பின் அதிவேகத்தில் பயணிக்கும் இந்த கொரிய சினிமா, தவற விடக்கூடாத படம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்