Published:Updated:

சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம்: நம் குணாதிசயத்தை சுய பரிசோதனை செய்துகொள்ள உதவும் கதை!

சில நேரங்களில் சில மனிதர்கள்

வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் தந்தைகளை கண் முன் கொண்டு வருகிறார் நாசர். ஏற்ற இறக்கங்களுடன் பேசுவதாகட்டும், மகன்தானே என விட்டுக்கொடுத்துச் செல்வதாகட்டும்; தனக்கான காட்சிகள் படத்தில் முடிந்தபின்னும் படம் நெடுக நிறைந்திருக்கிறார்.

சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம்: நம் குணாதிசயத்தை சுய பரிசோதனை செய்துகொள்ள உதவும் கதை!

வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் தந்தைகளை கண் முன் கொண்டு வருகிறார் நாசர். ஏற்ற இறக்கங்களுடன் பேசுவதாகட்டும், மகன்தானே என விட்டுக்கொடுத்துச் செல்வதாகட்டும்; தனக்கான காட்சிகள் படத்தில் முடிந்தபின்னும் படம் நெடுக நிறைந்திருக்கிறார்.

Published:Updated:
சில நேரங்களில் சில மனிதர்கள்
வெவ்வேறு குடும்பங்களையும், அவர்களுக்கான பிரச்னைகளையும் ஒரு விபத்து இணைக்கிறது. மனிதர்கள் தங்களின் குணாதிசயங்களை சுய பரிசோதனை செய்யும்கொள்ளும் விதமாக வெளிவந்திருக்கிறது 'சில நேரங்களில் சில மனிதர்கள்'.
சில நேரங்களில் சில மனிதர்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள்

திருமணத்தின் வாயிலில் காத்திருக்கும் அசோக் செல்வன், தான் வேலை செய்யும் இடத்திற்குச் செல்ல முடிவெடுக்கிறார். அது அந்த அலுவலகத்தில் அவருக்கான கடைசி நாள். அசோக் செல்வனின் தந்தை நாசருக்கோ, அன்றே கல்யாண பத்திரிகைகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஆன் சைட் செல்ல இருக்கும் பிரவீன், ரித்விகா தம்பதிகளுக்குள் பகட்டான வாழ்க்கை குறித்த விவாதம் முற்றுகிறது. தன் முதல் படத்தில் நடிக்கும் அபி ஹாசனுக்கும், அவரின் தந்தையும் பிரபல இயக்குநருமான கே.எஸ்.ரவிகுமாருக்கும் படம் வெளியாவது தொடர்பாக ஒரு பிரச்னை. லாட்ஜ் ஒன்றில் ரூம் சர்வீஸ் மேனேஜராக இருக்கும் மணிகண்டனுக்கு கனவுகள் பெரிது. ஆனால், அதற்கான உழைப்பிருக்கிறதா என்பது கேள்விக்குறி. இப்படியான நான்கு கதைகள். இந்த நான்கு கதைகளும் ஒரு விபத்தின்வழி இணைய அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தின் கதைக்கரு.

வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் தந்தைகளை கண் முன் கொண்டு வருகிறார் நாசர். ஏற்ற இறக்கங்களுடன் பேசுவதாகட்டும், மகன்தானே என விட்டுக்கொடுத்துச் செல்வதாகட்டும் அவ்வளவு அருமை. தனக்கான காட்சிகள் படத்தில் முடிந்தபின்னும் படம் நெடுக நிறைந்திருக்கிறார்.

படத்தின் மிகப்பெரும் பலம், அதில் வரும் நடிகர்கள். தன் கோபம்தான் எல்லாவற்றும் காரணம் என அசோக் செல்வன் உடைந்து அழும் தருணத்தில் ஈர்க்கிறார். அசோக் செல்வனின் நண்பராக வரும் ரிஷிகாந்துக்கு நல்லதொரு வேடம். அதைச் சிறப்பாக செய்திருக்கிறார். குற்றவுணர்ச்சியால் சிக்கித் தவிக்கும் நபராக மணிகண்டன் அசத்தல். தன் நண்பரிடம் நடந்தவற்றை சொல்லும் இடத்திலும், அசோக் செல்வனிடம் உடையும் தருணத்திலும் அத்தனை யதார்த்தம். அபிஹாசனின் தந்தையாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், நாசரின் நண்பராக வரும் இளவரசு, பிரவீன் ராஜா மற்றும் அவரின் வக்கீல் நண்பராக வரும் தமிழரசன், அசோக் செல்வனின் காதலியாக வரும் ரியா என படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்கள்கூட அவ்வளவு நேர்த்தியுடன் நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் சில மனிதர்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள்

நம் வாழ்வில் நாம் செய்யும் சில விஷயங்களை நம்மால் மாற்றிக்கொள்ள இயலாது என்று நினைத்திருப்போம். ஆனால் அவற்றை மாற்றிக்கொள்ள முயற்சிகள் எடுக்கலாம். நாம் செய்வதில் எது சரி, எது தவறென ஆராய்ந்து பகுக்கலாம். அப்படியான விஷயங்களை நான்கு குடும்பங்களின் கதைகள் மூலம் நமக்குச் சொல்லி அப்ளாஸ் அள்ளுகிறார் அறிமுக இயக்குநரான விஷால் வெங்கட். படத்திற்குத் தேவையான வசனங்களை பெர்பெக்ட்டாக எழுதியிருக்கிறார் மணிகண்டன். நான்கு கதைகளைக் குழப்பமின்றி சொல்கிறது பிரசன்னாவின் படத்தொகுப்பு. ரதனின் இசையில் ஆரம்ப விசில் சத்தமும், தனுஷ் பாடிய பாடலும் ஈர்க்கின்றன.

இத்தனை நன்றாக இருந்தும், படத்தின் இரண்டாம் பாதியில் வரும் அபிஹாசன், அபிஷேக் காட்சிகள் சற்று இழுபறியாக அமைந்துவிடுகின்றன. அதேபோல், என்னதான் கோபத்துடன் இருந்தாலும், அசோக் செல்வன் ஏன் அவ்வளவு கோபப்படுகிறார் என்பதற்கான ஆதார காட்சிகள் இல்லாததால், அதில் சற்று செயற்கைத்தனம் வந்துவிடுகிறது.

சில நேரங்களில் சில மனிதர்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
எந்தவொரு வில்லன் கதாபாத்திரமும் இல்லாமல், நம் செயல்களே நமக்கான வில்லன் என்பதை அழுத்தமாக நிரூபிக்கிறது இந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்'.