Published:Updated:

குங்குமப்பூ போண்டா.. ச்சே ச்சே.... “குங்ஃபூ பாண்டா-3” விமர்சனம் #Kungfupanda3 #Kungfupanda

விகடன் விமர்சனக்குழு
குங்குமப்பூ போண்டா.. ச்சே ச்சே.... “குங்ஃபூ பாண்டா-3” விமர்சனம் #Kungfupanda3 #Kungfupanda
குங்குமப்பூ போண்டா.. ச்சே ச்சே.... “குங்ஃபூ பாண்டா-3” விமர்சனம் #Kungfupanda3 #Kungfupanda

று பாகங்கள் எடுக்க திட்டமிட்டிருக்கும் குங்ஃபூ பாண்டா சீரிஸில் வெளிவந்திருக்கும் குங்ஃபூ பாண்டா 3 படமும் முந்தைய படங்களைப் போலவே குழந்தைகள் கொண்டாடும் ஜாலி ரகத்தில் தான் இருக்கிறது. ஆஞ்சலினா ஜூலி (புலி), ஜாக்கி சான்(குரங்கு) என பல முன்னணி நடிகர்கள் குரலுதவி செய்து இருப்பதால், படத்திற்கு எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகம்.  கண்டிப்பாக உங்க வீட்டு சுட்டீஸ் இந்தப் படத்துக்குக் கூட்டீட்டுப் போகச் சொல்லுவாங்க.  

முதல் பாகம் :

நூடுல்ஸ் விற்கும் தன் வளர்ப்பு தந்தை மிஸ்டர் பிங்கோடு வாழ்ந்து வருகிறார் பாண்டா ‘போ’. அடுத்த ட்ராகன் வாரியர் என்பதற்காக நடக்கும் போட்டியில், தற்செயலாய் நுழையும் பாண்டாவை அடுத்த டிராகன் வாரியர் என அறிவிக்கிறார் ஊக்வே. பாண்டாவிற்கு குங்ஃபு கற்றுக்கொடுக்க மாஸ்டர் ஷிஃபுவும், ஐவர் அணியும் விழி பிதுங்கினாலும், இறுதியில் வில்லன் தாய் லங்கை பாண்டா வெல்வார்

இரண்டாம் பாகம் :

ஒரு பாண்டாவின் மூலம் தான் ஷென்(மயில் ) கொல்லப்படுவான் என ஜோசியத்தில் சொல்லப்பட, ஊரில் இருக்கும் எல்லா பாண்டாவையும் கொல்கிறது ஷென். ‘போ’வை மட்டும் தப்பிக்க வைத்துவிட்டு இறந்து போகிறது ‘போ’வின் தாய். டிராகன் வாரியரான ‘போ’ ஷென்னையும், அதன் படையையும் அழிக்கும்

குங்குமப்பூ போண்டா.. ச்சே ச்சே.... “குங்ஃபூ பாண்டா-3” விமர்சனம் #Kungfupanda3 #Kungfupanda

மூன்றாம் பாகத்தின் விமர்சனத்திற்குள் போவதற்கு முன், சில கேரக்டர்களை அறிந்து கொள்ளுங்கள். படம் பார்க்கும்போது, உங்களுக்கு உதவலாம்.

குங்குமப்பூ போண்டா.. ச்சே ச்சே.... “குங்ஃபூ பாண்டா-3” விமர்சனம் #Kungfupanda3 #Kungfupanda

போ - குங்ஃபூ பாண்டா (இவர்தாங்க ஹீரோ)  /  லி ஷான் - குங்ஃபூ பாண்டாவின் நிஜ அப்பா

மிஸ்டர் பிங் - குங்ஃபூ பாண்டாவின் வளர்ப்பு அப்பா (வாத்து) / கை - காட்டெருமை (வில்லன்)

ஊக்வே - மெய்ன் குங்ஃபூ மாஸ்டர் (ஆமை)  / மாஸ்டர் ஷிஃபு -  செகண்ட் மாஸ்டர் 

கை என்ற காட்டெருமையை அழிப்பதும், தன் நிஜ தந்தையுடன் குங்ஃபூ பாண்டா ’போ’ இணைவதும் தான் மூன்றாவது பாகம்.

ஆவி உலகத்தில் இருக்கும் காட்டெருமை ‘கை’ என்ற அரக்கன், அங்கு இருக்கும் மாஸ்டர் ஊக்வே (ஆமை), பிற மாஸ்டர்கள் எல்லோரையும் அழித்து தன் அடிமைகளாக மாற்றி விடுகிறான். மாஸ்டர் ஊக்வே வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், உன்னை அழிக்க ‘போ’ வருவாண்டா’ என பன்ச் பேச, காட்டெருமை ’கை’யோ, ’போ’வாவது ஒண்ணாவது  பாத்துடலாம்!’ என உலகிற்கு வருகிறான்.

மாஸ்டர் ஷிஃபு இனி தன்னால் மாஸ்டராக இருக்க முடியாது, ‘போ’வையே இனி எல்லோருக்கும் மாஸ்டராக இருக்க சொல்கிறார். ’போ’வை விட ஐவர் கூட்டணியான பெண் புலி, குரங்கு,நாரை,பூச்சி,பாம்பு பயிற்சிகளில் கற்றுத் தேர்ந்தவர்களாக இருக்க தோற்றுப் போகிறான் போ. மாஸ்டர் ஷிஃபுவிடம் தன் தோல்வியை சொல்ல, “நீ யார் “ என்பதை முதலில் உணர்ந்துகொள் என்கிறார் ஷிஃபு.


தன் தந்தை வாத்திடம் சென்று ‘போ’ தான் யார் எனக்கேட்கிறான் போ. ஊருக்கு புதிதாய் வந்திருக்கும் ‘லீ ஷான் ‘ என்ற பெரிய சைஸ் பாண்டா ’போ’ வின் டம்ப்லிங் சாப்பிடும் சாதனையை முறியடித்துவிடுகிறது. ட்ராகன் வாரியர் ‘போ’, ‘லி ஷானுக்கு ‘ ஜேட் மாளிகையை சுத்திக்காட்ட, ‘கை’ வரப்போகிறான் என பயம் காட்டுகிறார் ஷிஃபு. ‘கை’யைக்கொல்ல ‘ச்சி’ என்கிற கலையை ‘போ’ கற்க வேண்டும். ”‘ச்சி-யா! அந்தக் கலை எல்லா பாண்டாக்கும் தெரியும்!’ என பாண்டாக்கள் வாழும் ஊருக்கு ‘போ’வை அழித்துச் செல்கிறார் ‘லி ஷான்’. இந்த ஊருக்கு வரும் ‘கை’ புலியைத் தவிர மற்ற எல்லா மாஸ்டர்களையும் ‘ பொம்மைகளாக மாற்றி தன் வசப்படுத்துகிறான்.

குங்குமப்பூ போண்டா.. ச்சே ச்சே.... “குங்ஃபூ பாண்டா-3” விமர்சனம் #Kungfupanda3 #Kungfupanda


க்ளைமேக்ஸ் வரப்போகுது ‘ச்சி’ மந்திரம் சொல்லிக்கொடு என ‘போ’ கேட்க, எனக்கும் தெரியாது ‘ என உண்மையை சொல்லிவிடுகிறார் ‘லி ஷான்’. கடுப்பான ‘போ’ எல்லாப் பாண்டாக்களையும் பாதுகாப்பான இடத்திற்கு போக சொல்ல ; ஏன் ‘போ’ எல்லோருக்கும் குங்ஃபு சொல்லிக் கொடுக்ககூடாது என ஐடியா தருகிறார் லி. எல்லோரும் சேர்ந்து ‘கை’யை அழித்தார்களா, ‘போ’ ’தான் யார்’ என்பதை கற்றுக்கொண்டாரா என்பது தான் மிச்ச மீதி கதை .


 ஒரு பாண்டா செய்யும் லூட்டிகளே ஜாலிவாலா என்றால், இதில் ’மெய்-மெய்’ என்ற நடன பாண்டா , பொம்மைகளை வைத்துக்கொண்டு ’ஸ்ட்ரிப்பி பேபி’ எனக்கொஞ்சும் குட்டி பாண்டா, குங்ஃபு பாண்டாவின் நிஜ தந்தை, எதைக்கொடுத்தாலும் திங்கும் பாண்டாக்கள் என இந்தப்படம் பாண்டாக்களின் உலகம்.குங்ஃபு பாண்டா படங்களின் வெற்றியே அதில் வரும் நகைச்சுவை வசனங்களும், தத்துவங்களும் தான். சில சாம்பிள்கள்


போ : நீங்க யாரு ?
லி : நான் லீ ஷான். என் பையன் தேடுறேன்
போ : உங்க மகன தொலைச்சுட்டீங்களா?
லி : ஆமா, பல வருஷத்துக்கு முந்தி
போ : நான் , என் அப்பாவ தொலைச்சுட்டேன்
லி : வருத்தம்பா
போ: உங்க பையன கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்
லி : நீயும் , உன் அப்பாவ கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்


(சுற்றி இருக்கும் மிருகங்கள், தலையில் அடித்துக்கொள்ளும்)
*****
 

ஷிஃபு : இந்தக் கணத்தை தவிர, நேரம் என்பதே மாயை தான்

****

லி : பாண்டாக்கள் நடக்காது. உருளும்

****
குழந்தையின் மனநிலையில் பார்த்தால், நிச்சயம் உங்களை கவர்வான் குங்ஃபூ பாண்டா. முதல் இரண்டு பாகங்களை பார்க்கதவர்களுக்கும், படம் மிக எளிதாக புரியும் என்பதால், படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.


-கார்த்தி