Published:Updated:

அட... நம்ம வானத்தைப் போல லாலா... லால்லா..! - ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்யம் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

துபாயில் இரும்புத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் திருவனந்தபுரத்து NRI ரஞ்சி பணிக்கர். மனைவி லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், மற்றும் மூன்று மகன்கள், ஒரு மகள் என்று மொத்தக் குடும்பமும் துபாயில் செட்டில் ஆகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில், 13 கோடி ஏமாற்றப்பட்டு பண நெருக்கடி ஆளாகி, குடும்பத்தை துபாயில் விட்டுவிட்டு பணம் புரட்டும் பொருட்டு, வேறொரு நாட்டுக்குப் போய்விட, மூத்த மகனான நிவின் பாலி, தன் அம்மா லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் துணையுடன் கடன்காரர்களை சமாளித்து,  போராடி மீண்டும் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்து, மீண்டும் கேரளாவில் செட்டில் ஆகிற கதை.

இயக்கம் வினித் சீனிவாசன். அவர் இயக்கிய மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப், தட்டத்தின் மறையத்து, கதையெழுதிய ஒரு வடக்கன் செல்ஃபி என்று நிவின் பாலி + வினித் சீனிவாசன் கூட்டணிக்கு எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம்.

அட... நம்ம வானத்தைப் போல லாலா... லால்லா..! - ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்யம் விமர்சனம்

நிவின் பாலியின் தம்பிகள், தங்கை எல்லோருமே நிறைவான நடிப்பைத் தந்திருந்தாலும் படத்தில், ரஞ்சி பணிக்கர், நான்தான் ஹீரோ எனும் அளவு சிறப்பாக நடித்திருக்கிறார். லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை இனி அடிக்கடி மலையாளப் படங்களில் பார்க்கலாம். கடன் திரும்பக் கேட்க வருபவனை மிரட்டுவதாகட்டும், ‘உங்கம்மா வயசு இருக்கற என் முன்னால சிகரெட் பிடிக்கற? உன் பிஸினஸே வேண்டாம்’ என்று எதிர்க்கிற இடமாகட்டும் கைதட்டலை அள்ளுகிறார்.

வீடு, கார், அலுவலகம் எல்லாம் விற்று சாதாரண காரையே அலுவலகமாக்கி அதிலேயே பிஸினஸ் பேச அலைவதும், அவமானப்பட்டு நிக்கும்போதெல்லாம் ஹீரோயிச ஆக்‌ஷன்கள் ஏதுமில்லாமல் பரிதவிப்பதும் என்று நிவின்பாலி.. கலக்கல் சாரே. தன் தம்பிகளுக்கு பாராட்டு கிடைக்கும்போது அவர் காட்டும் சந்தோஷ ரியாக்‌ஷனுக்கு கண்கள் லைட்டாக வேர்க்கிறது.

ஒரு கட்டத்தில், நிவின்பாலி தன் விலையுயர்ந்த காரை விற்றுவிட, விடைபெறும்போது டிரைவரான டி.ஜி.ரவி டக் இன் செய்த சட்டையை எடுத்துவிட்டு நடப்பார். மீண்டும் அதே காரை வாங்கும் நிவின்பாலி, ரவியையே அழைத்து சாவியைக் கொடுக்க, ஏறும்போது மீண்டும் டக் இன் செய்வது இயக்குநர் தொடுகை!
 
கடைசி ஒன்றிரண்டு காட்சிகள் தவிர, முழுவதும் துபாயில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தை உறுத்தாத வண்ணம் படம் பிடித்திருக்கிறார் கேமராமேன் ஜோமோன் ஜான். துபாயின் பாலைவன அழகுகளையும், சாலைகளையும் கண்குளிரக் காட்டியிருக்கிறார். ஷான் ரெஹ்மானின் இசையில் பாடல்கள்.. ம்ம்.. ஓகே!

அட... நம்ம வானத்தைப் போல லாலா... லால்லா..! - ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்யம் விமர்சனம்

நம்பிக்கை அள்ளித் தெளிக்கிற விதமான படம்தான். மலையாளி எங்க போனாலும் பொழச்சுக்குவான், மலையாளி பெரிய உழைப்பாளி என்றெல்லாம் படத்தில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மலையாளப் படங்களில் வருவது போலவே இதிலும், நிவின்பாலி குடும்பத்தை மிரட்டிக் கொண்டே இருக்கும் முரளிமோகனை ‘சென்னை வாசி மலையாளி’யாக தமிழ் பேச வைத்திருப்பது நெருடலாகவே இருக்கிறது.

தன் நண்பன் க்ரேக் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்று சொல்கிற வினித், கடைசியில் அந்த நண்பனின் குடும்பத்தை ஃபோட்டோ ஆதாரங்களுடன் ஸ்லைடில் போடுகிறார்கள். அந்த நிஜக் கதையிலும் முரளிமோகன் கதாபாத்திரம் சென்னைவாசியா என்று தெரியவில்லை. எது எப்படியானாலும், நிச்சயம் அந்தக் குடும்பத்தின் வீட்டு வாசல்களில் நாளைக்கு மீடியா குவிகிற அறிகுறிகள் தெரிகிறது.

தமிழ்ப் படங்களில் ஒரு பாட்டில் நடக்கிற ‘சக்ஸஸ்’ சமாச்சார ஊத்தாப்பத்திற்கு,  எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாங்க தெரியுமா என்று  எக்ஸ்ட்ராவாக கேரட், மல்லியெல்லாம் தூவிய படம்தான். ஆனால் கேரளாவில் இந்தப் படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். காரணம்  வினீத்தின், நீரோடை போன்ற  திரைக்கதையும், ஒட்டுமொத்த நடிகர்களின் அலட்டாத நடிப்பும்தான்!

.