Published:Updated:

மீன்குழம்பு... மண்பானை எது புதுசு? #மீன்குழம்பும் மண்பானையும் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
மீன்குழம்பு... மண்பானை எது புதுசு? #மீன்குழம்பும் மண்பானையும் விமர்சனம்
மீன்குழம்பு... மண்பானை எது புதுசு? #மீன்குழம்பும் மண்பானையும் விமர்சனம்

மகனைப் புரிந்து கொள்ள அப்பாவும், அப்பாவை புரிந்து கொள்ள மகனும் தங்கள் இடத்தை எக்ஸ்சேஞ் செய்து கொள்ளும் கதை தான் மீன்குழம்பும் மண்பானையும்.

1995-ல் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் பிரபு டூயல் ரோலில் நடித்து வெளிவந்த படம் 'சின்ன வாத்தியார்'. கூடுவிட்டு கூடு பாய வைக்கும் ஆராய்ச்சியில் இருக்கும் புரஃபசர் பிரபு, அவரது மாணவரான பிரபு இருவர் தான் பிரதான கதாப்பாத்திங்கள். ஒரு எதிர்பாராத தருணத்தில் புரஃபசர் உடலில் மாணவரும், மாணவர் உடலில் புரஃபசரும் புகுந்து விடுவார்கள். அடுத்து நடக்கும் கலாட்டாக்கல் தான் படம். அதன் பின் இதே கான்செப்டில் பல குறும்படங்கள் யூ-டியூபில் வெளியாகியிருக்கிறது. 

சாம்பிள்:

இதே ஸோல் சேஞ் கான்செப்டில் உருவான குறும்படங்களில் ஒன்று. 

இதில் ஹைலைட் என்ன என்றால், ஹிஸ்ட்ரி ரிப்பீட்ஸாக 'சின்ன வாத்தியார்' படத்தில் நடித்த பிரபுவே  21 வருடங்கள் கழித்து அதே டைப் ஃபேண்டசி படத்தில் நடித்திருக்கிறார்.

மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் இதே கதை உல்டாவாக இப்படி எடுக்கப்பட்டிருக்கிறது. கதைப்படி மனைவியை இழந்து கைகுழந்தையான மகனுடன் மலேசியா வருகிறார் அண்ணாமலை (பிரபு). மலேஷியாவில் மீன்குழம்பும் மண்பானையும் என்கிற உணவகம் வைத்திருக்கிறார் (இதைத் தவிர படத்தின் தலைப்புக்கும் இந்தப் படத்துக்கும் எந்த வித சம்மந்தமும் கிடையாது). தந்தை மகன் இருவருக்கும் ஒருவருக்கொருவர் அவ்வளவு பிடிக்கும். மகன் கார்த்திக் (காளிதாஸ் ஜெயராம்) தன் டீன் ஏஜில் தந்தை பிரபுவிடமிருந்து சின்ன இடைவெளி எடுத்துக் கொள்கிறார். முடிந்த அளவு மகனை நெருங்கப் பார்க்கிறார் பிரபு. ஆனால், காளிதாஸுக்கு இவர் ஏன் இப்பிடி நடிக்கிறாரு என்ற நினைப்பு. 'பேசாம போய் தொலப்பா, எப்பப் பாத்தாலும் நடிச்சிகிட்டு' என சிடுசிடுக்க மனமுடைகிறார் பிரபு. ஏதோ ஒரு தீவிலிருக்கும் ஒய் ஜி மகேந்திரன் பிரபுவையும், காளிதாஸையும் தன் வீட்டுக்கு வாருங்கள் ஒரு மாற்றம் வரும் என அழைக்க அவர்களும் செல்கிறார்கள். அந்த மாற்றம் தான் கமல். மந்திரவாதியோ, சாமியாரோ, எதுவோவான கமல் மகன் ஆன்மாவை அப்பா உடலிலும், அப்பா ஆன்மாவை மகன் உடலிலும் மாற்றிவிடுகிறார். நீங்க ஒருத்தருடைய வாழ்க்கைய இன்னொருத்தர் எப்போ புரிஞ்சுக்கறீங்களோ அப்போ நான் வருவேன் என சொல்லிவிட்டு கமல் காணாமல் போகிறார். இதற்கு இடையில் ஆஸ்னா ஸாவேரிக்கும் காளிதாஸுக்கும் இடையே ஒரு காதல், பிரபுவின் மீது பூஜாகுமாருக்கு காதல். இந்த காதல்கள் என்ன ஆகிறது? இருவரும் புரிந்து கொள்கிறார்களா? பழையபடி எல்லாம் சரியாகிறதா? என்பதே சின்ன வாத்தியார்... ஸாரி மீன்குழம்பும் மண்பானையும் படத்தின் கதை.

மீன்குழம்பு... மண்பானை எது புதுசு? #மீன்குழம்பும் மண்பானையும் விமர்சனம்

காளிதாஸ் ஜெயராம் தமிழுக்கு நல்ல அறிமுகம். செம ஸ்மார்ட் லுக், அலட்டிக் கொள்ளாத நடிப்பு. முதலில் துள்ளல் மிகுந்த டீனேஜ் பையனாக காதலி ஆஸ்னாவிடன் வம்பிழுப்பதும், ஸோல் சேஞ்சுக்குப் பிறகமதே ஆஸ்னாவைப் பார்த்து 'யாரு இதப் பாப்பா, ஏன் இப்பிடி கோபப்படுது' என பணிவாக நடப்பது என கொடுக்கப்பட்ட ரோலை நன்றாக நடிக்க முயற்சியும் செய்திருக்கிறார். மகனின் பாசத்துக்கு ஏங்கும் அப்பாவாக, தன்னைப் பார்த்து வழியும் பூஜா குமாரிடம் நெளிவதுமாக பிரபு இதற்கு முந்தைய படங்களில் பார்த்த அதே நடிப்பு எந்தக் குறையும் இல்லாமல் டெம்ளேட்டாக இதிலும் இருக்கிறது. 

முன்னமே வந்த கான்செப்ட் தான் என்றாலும் திரைக்கதை, காமெடியில் நிறைய புதுமைகள் செய்ய ஸ்பேஸ் உள்ள ஒரு கதையில் மறுபடி மீன்குழம்பு வைப்பத்திருப்பது நியாயமா டைரக்ட்டரே? எம்.எஸ்.பாஸ்கர் கதாப்பாத்திரத்தை காமெடிக்கு என டான் ரோல் கொடுத்திருந்தாலும், தளபதி தினேஷ் கொடுக்கும் கவுண்டர்களுக்கு வரும் சிரிப்பு கூட அவர் காமெடிகளுக்கு வரவில்லை என்பது கண்டிப்பாக இயக்குநரின் தவறு தான். 

கெஸ்ட்ரோலில் கமல் என இருந்த ஒரே சுவாரஸ்யத்தையும் டிரெய்லரிலும், புரமோஷன்களிலும் வெளியிட்டுவிட்டதால் படத்தில் ஆடியன்ஸை ஆச்சர்யப்பட வைக்கும் படியாக எந்த சங்கதிகளும் இல்லை. டி.இமானின் பின்னணி இசை, பாடல்கள் எதுவும் ரசிக்கும் படியாக இல்லை. "என்ன ஆச்சு இமான் உங்களுக்கு? நீங்க சாரி சொல்லனும் இமான் எங்களுக்கு!"

வலுவான கதை, தந்தை மகன் பாசம் தான் பின்னணி என நல்ல களத்தை தேந்தெடுத்தது போல படத்தையும் வித்தியாசமான ட்ரீட்மெண்டில் கொடுத்திருந்தால் ருசியாக இருந்திருக்கும் இந்த மீன்குழம்பு.