அறிவிப்புகள்
கார்ட்டூன்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்

இயக்கவிருக்கும் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலா பால் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் படத்திலிருந்து அமலா பால் விலக, அவருக்குப் பதிலாக இப்போது மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமன்னா
தமன்னா

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்படத்துக்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார், தனுஷ். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா, தற்போது மும்பையில் புது வீடு ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். சதுர அடி 80,778 ரூபாய் மதிப்பு கொண்ட வீடு அது.

சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில், முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்காவுக்குப் படப்பிடிப்புத் தளத்தில் எதிர்பாராத விதமாகக் காலில் அடி

மிஸ்டர் மியாவ்

பட்டிருக்கிறது. இதனால், இரண்டு நாள்கள் கட்டாய ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள், மருத்துவர்கள்.

மிஸ்டர் மியாவ்

ஜோதிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘ராட்சசி’ படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இவர் ஏற்கெனவே கெளதம் கார்த்தியின் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்திலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணி தெலுங்கு, கன்னட, மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார். படத்தில் அவருக்கு முக்கியமான கேரக்டராம்.

பாலிவுட்டில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்குப் படமொன்றில் நடிக்கிறார். நிதின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ரங்தே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மிஸ்டர் மியாவ்

நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் ம்பர் நடிகை, ஓட்டுப் போடவில்லை. இதனால், நடிகைமீது அதிருப்தியில் இருக்கிறது நடிகர் சங்கம்.

முருகன் பெயர் கொண்ட நடிகரின் படங்கள் ‘டல்’ அடிக்கும் நிலையில், இவரும் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார் என மீம்ஸ் உருவாக்கிப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வருத்தத்தில் இருக்கிறாராம், நடிகர்.

எங்கே தேர்தல் நடந்தாலும் அங்கே வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் உயர்ந்த நடிகர்மீது மோசடி வழக்குகள் இருப்பதால், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவர் தலைகாட்ட மாட்டார் என்கிறார்கள்.