Published:Updated:

சூப்பர் சிங்கர் அனு இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா..?

சூப்பர் சிங்கர் அனு இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா..?
சூப்பர் சிங்கர் அனு இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா..?

விஜய் டிவியின் `சூப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சியில் பங்கேற்று, பல ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர் அனு. `பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் `உனக்காகப் பொறந்தேனே எனதழகா..!' பாடலைப் பாடியவர். தற்போது, பள்ளிப் படிப்பை நிறைவுசெய்து கல்லூரிச் சாலைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அவருடன் ஒரு கோப்பைத் தேநீர் உரையாடல்..!

``இப்போ என்ன பண்றீங்க அனு?''

``அம்மா, அப்பா கேரளாவாக இருந்தாலும் நான் பிறந்தது மன்னார்குடி. அதனால், என் சொந்த ஊர் மன்னார்குடிதான். ப்ளஸ் டூ முடிச்சுட்டு, எலக்ட்ரானிக் மீடியா பாடப் பிரிவை செலக்ட் பண்ணிருக்கேன். எனக்கு அக்கா இருக்காங்க. அவங்க ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாங்க.''

``எப்படி ஆரம்பிச்சது உங்களுடைய இசைப் பயணம்?''

``அம்மா நல்லா பாடுவாங்க. என் அக்காவும் பாடுவாங்க. அப்படித்தான் எனக்கும் ஆர்வம் வந்து வீட்டுக்குள்ளே பிடிச்ச பாடல்களை பாடிட்டிருப்பேன். என் குரல் ரொம்ப நல்லா இருக்குன்னு என் அப்பாவுக்குத் தோணியிருக்கு. அங்கே ஆரம்பிச்சதுதாங்க என் இசைப் பயணம். சூப்பர் சிங்கர்ல கலந்துகிட்டதும் எனக்கே என்னுடைய ப்ளஸ் தெரிஞ்சது. ஃபைனல் வரைக்கும் போகலைன்னாலும், அங்கே நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.''

``உங்களுடைய பலம் யார்?''

``என் அப்பாதான் என் ப்ளஸ். பிராக்டீஸ் முடியுற வரைக்கும் எவ்வளவு நேரமானாலும் வெயிட் பண்ணுவார். இப்போகூட நான் எந்த ஊருக்குப் பாடப் போனாலும் கூடவே வருவார். அவர்தான் என் பலம். அம்மா ஸ்டிரிக்ட் ஆபீஸர். நான் பாட ஆரம்பிச்சாலே, தப்புகளை உன்னிப்பா கவனிச்சு சுட்டிக்காட்டுவாங்க.''

``சூப்பர் சிங்கரில் உங்களுடைய குளோஸ் ஃப்ரெண்ட் யார்?''

``அங்கே எல்லோரும் என் ஃப்ரெண்ட்ஸ்தான். அதிலும், யாழினி மற்றும் ஆஜித் ரொம்ப குளோஸ். இப்போ வரை டச்ல இருக்கோம். நாங்க மூணு பேரும் சேர்ந்தால், அந்த இடம் பயங்கர ரகளையா இருக்கும்.''

``நீங்க மிமிக்ரி ராணியாமே...''

``ஓ... அதுவும் தெரிஞ்சுப்போச்சா? நான் கொஞ்சம் மத்தவங்களை அவங்க ஹர்ட் ஆகாத அளவுக்குக் கலாய்ப்பேன். ஒருநாள் சூப்பர் சிங்கர் பிராக்டீஸ்ல எல்லோரையும் கலாய்ச்சி அவங்களை மாதிரி மிமிக்ரி பண்ணிட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு அந்த செட்லேயே ஒவ்வொருத்தரின் பெற்றோர் மாதிரி பேசச் சொன்னாங்க. அப்போதிலிருந்து மிமிக்ரி ராணி பட்டப் பெயரை வெச்சுட்டாங்க.''

``இளையராஜாவின் கான்சர்ட் குரூப்ல சேர்ந்திருக்கீங்களாமே...''

``அதுக்கு ரெண்டு தடவை முயற்சி பண்ணியும் செலக்ட் ஆகலை. மூணாவது முறை நான் பாடின பாட்டு இளையராஜா சாருக்குப் பிடிச்சது. உடனே செலக்ட் பண்ணிட்டார். இளையராஜா சார் என் குரு. அவருடைய குரூப்ல சேர்ந்து பாடறதை பாக்கியமா நினைக்கிறேன்.''

``நடிக்கவும் ஆரம்பிச்சிருக்கீங்களாமே...''

``ம.கா.பா.ஆனந்த் அண்ணா மூலம் நடிப்பு வாய்ப்பு கிடைச்சது. அவர் நடிக்கும் `மாணிக்' படத்தில் ஸ்கூல் பொண்ணு மாதிரி நடிச்சிருக்கேன். உடனே நடிகை அனு எனச் சொல்லிடாதீங்க.. நான் எப்பவும் சிங்கர்தாங்க.''

``மறக்கமுடியாத பாராட்டு..?''

``நிறைய செலிபிரிட்டிகளிடம் பாராட்டு வாங்கியிருக்கேன். ஒருத்தரை மட்டும் குறிப்பிட்டு சொல்லமுடியலை. இளையராஜா சார், ரஹ்மான் சார் என எல்லோர் முன்னாடியும் பாடும் வாய்ப்பு சூப்பர் சிங்கர் மூலமா கிடைச்சது. எல்லோரிடமிருந்தும் பிளஸிங் கிடைச்சிருக்கு.''

``உங்களுடைய ஃபேவரைட் சிங்கர் யார்?''

``ஸ்ரேயா கோஷல் என் லைஃப் டைம் ஃபேவரைட். அவங்களுடைய குரல் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஐ திங்க்... அவங்களை மாதிரி யாராலும் பாட முடியாது. லவ் யூ ஸ்ரேயா கோஷல் மேம்!''

அனுவின் நேர்காணல் வீடியோ இங்கே...