பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

செந்தமிழ்த் தேன்மொழியாள்!

செந்தமிழ்த் தேன்மொழியாள்!
பிரீமியம் ஸ்டோரி
News
செந்தமிழ்த் தேன்மொழியாள்!

ஆர்.வைதேகி

ட்டாம்பூச்சி டாட்டூ, ஸ்டைலான ஹேர்கட், வெஸ்டர்ன் அவுட்ஃபிட் என, பக்கா கெட்டப்பில் ராக் ஸ்டார் ஷாலினி மோகன். பேஸ் கிடாரில் கலக்கும் அபூர்வப் பெண் முகங்களில் ஒருவர். பழம்பெரும் நடிகரும், பாடகரும், இசைக்கலைஞருமான டி.ஆர்.மகாலிங்கத்தின் அக்கா பேத்திதான் ஷாலினி.

``எனக்கு நாலு வயசிருக்கும்போதே தாத்தா இறந்துட்டார். அதனால அவரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கலை. சமீபத்துலதான் அவரோட அருமை பெருமைகளைப் பற்றித் தெரிஞ்சுக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ’’ சிலிர்க்கிறவர், இசைக்  காதலுக்காக பிரபல நிறுவனங்களின் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலையை உதறித்தள்ளியவர்.

செந்தமிழ்த் தேன்மொழியாள்!

``நினைவு தெரிஞ்ச நாள்லேருந்து என் மனசு முழுக்க இசைதான். ஆனா, அம்மா-அப்பா பெருசா என்கரேஜ் பண்ணலை. கிறிஸ்டியன் ஸ்கூல்ல படிச்சேன். இசையோட பயணிக்க அந்தச்சூழல் உதவி செஞ்சுது. சர்ச்ல பாடுவேன். க்ளாஸை கட் பண்ணிட்டு, மியூசிக் ரூம்லயே பழியாக் கிடந்திருக்கேன். பாடவும் பியானோ வாசிக்கவும் கத்துக்கிட்டேன். ஆனா, என்னுடைய இசைக் காதலில் அதையெல்லாம் தாண்டிய தேடல் இருந்தது.’’  என்று பேஸ் கிடாரிஸ்ட் ஆன கதையை சொல்லத் தொடங்குகிறார்.

``இன்ஜினீயரிங் முடிச்சிருந்த நேரம்... எங்க காலேஜ்பேண்டுல ஒரு நிகழ்ச்சி. அதுல வாசிக்கவேண்டிய பேஸ் கிடாரிஸ்ட் வரலை. சட்டுனு என் கையில பேஸ் கிடாரைக் கொடுத்து வாசிக்கச் சொல்லிட்டாங்க. ஏதோ ஒரு தைரியத்துல நானும் வாசிக்க ஆரம்பிச்சேன். ஆனா, அந்த சவுண்டு எனக்குள்ள ஏற்படுத்தின சிலிர்ப்பை வர்ணிக்க முடியாது. அதுக்கு முன்னாடி நான் பாடின, ரசிச்ச எல்லாப் பாடல்களிலும் எனக்குத் தெரியாமலேயே பேஸ் கிடாருக்கான நோட்ஸை நான் முணுமுணுத்திருக்கேன்னு அப்பதான் புரிஞ்சது.’’ சுயம் அறிந்தவராகச் சொல்கிறார்.

வெஸ்டர்ன் மியூசிக் உலகில் ஷாலினியின் பெயர் ரொம்பவே பிரபலம். வசுந்தராதாஸுடன் இணைந்து `ஷா ஹுசைன்’ புராஜெக்ட்டில் பேஸ் கிடார் வாசித்ததை வாழ்நாள் அனுபவமாகக் குறிப்பிடுகிறார். பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் நிறைய படங்களுக்கு பேஸ் கிடார் வாசித்திருக்கிறார் ஷாலினி. தனது `கின்னி அண்ட் தி பாட்டில்’ என்கிற பேண்டுடன் இணைந்து தமிழ்ப் படங்களில் பாடுகிறார், பேஸ் கிடாரும் டிரம்்பெட்டும் வாசிக்கிறார்.

செந்தமிழ்த் தேன்மொழியாள்!

``பேஸ் கிடாரிஸ்ட் பெண்களை விரல் விடாமலேயே எண்ணிவிடலாம். பெண்கள் நுழைய முடியாத அளவுக்கு அதென்ன அவ்வளவு சிரமமான இசைக் கருவியா என்ன?’’

``எல்லா இசைக்கருவிகளையும் போலத்தான் இதுவும். கஷ்டம்னு நினைச்சா கஷ்டம்தான். என்னதான் ஆர்வம் இருந்தாலுமே வெஸ்டர்ன் மியூசிக்கில் நுழையுறதுல இந்தியப் பெண்களுக்கு ஒரு தயக்கம் இருப்பதையும் மறுக்க முடியாது. அதையெல்லாம் சமாளிச்சு வரும் பெண்கள், தம் திறமையை நிரூபிக்கப் பெரியளவுல போராடணும். ஒருமுறை நிரூபிச்சா போதாது. ஒவ்வொரு முறையும் நிரூபிச்சுக்கிட்டே இருக்கணும். பெண்களுக்கும் இங்கே கதவுகள் திறந்தே இருக்கு.

வாழ்க்கையில் மியூசிக் இருக்கும்போது அது எவ்வளவு இனிமையானதா, ரசனைக்குரியதா மாறிடுதுங்கிறதை வாழ்ந்துபார்த்துதான் உணர முடியும்’’ - ஸ்டேட்டஸ் சொல்பவருக்கு, தாத்தாவின் இசையைத் தன் பாணியில் முயல்வதே அல்டிமேட் ஆம்பிஷன்!

கலக்குங்க!