சிங்கப்பூரில் சென்ற மாதம் நடைபெற்ற ‘இன்டர்நேஷனல் கோரல் ஃபெஸ்டிவல்’ நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த 23 சுட்டிகள் பங்கேற்று அசத்தியிருக்கிறார்கள். ‘`பள்ளிப்பாடத்தைத் தாண்டிய அனுபவப் பாடம் தேவை என்பதற்காகவே, எங்கள் குழந்தைகளை சிங்கப்பூர் அழைத்துச்சென்றோம்’’ என்கிறார்கள் பெற்றோர்கள்.

முதல்முறையாக விமானத்தில் சென்று வந்த குதூகலம், மாணவி அவந்திகா குரலில், “நான் 4-ம் வகுப்பு படிக்கிறேன் சின்ன வயசிலிருந்தே பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். அம்மாதான், ‘நாம இன்னும் ரெண்டு மாசத்துல சிங்கப்பூர் போகப்போறோம். அங்கே நீ பெரிய மேடையில் பாடப்போறேன்’னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட்டா இருந்துச்சு. மந்தைவெளியில் இருக்கும் ராஜராஜேஸ்வரி மேடம்தான் எங்களுக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க. நாங்க 23 பேரும் குரூப்பா பாடினோம். எனக்கு இப்ப நிறைய ஃபாரின் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க” எனப் பூரிக்கிறார்.

அவந்திகாவின் அம்மா துர்காதேவி, “போன மார்ச் மாசம்தான் சிங்கப்பூரில் நடக்கப்போகும் கோரல் ஃபெஸ்டிவல் பற்றின தகவல் எங்களுக்குக் கிடைச்சது. ராஜராஜேஸ்வரி மேடம்தான் சொன்னாங்க. சிங்கப்பூர் விழாவுக்காக நாங்க, மார்ச் மாதத்திலிருந்தே தயாரானோம். 12 நாடுகள் கலந்துகொண்ட இந்த விழாவில் நாட்டுப்புறப்பாடல் சுற்று மற்றும் 12 வயதுக்குட் பட்டவர்களுக்கான பாடல் சுற்றிலும் எங்களுக்கு மூன்றாமிடம் கிடைச்சது. சேக்ரா பாடல் சுற்றில் சிறப்பு விருது கிடைச்சது’’ என்கிறார்.

‘`அடுத்த இன்டர்நேஷனல் கோரல் ஃபெஸ்டிவலிலும் கலந்துக்கிட்டு முதல் பரிசை ஜெயிக்கணும்’’ என குஷியாகிறார் அவந்திகா.

- மு.பார்த்தசாரதி