Published:Updated:

ஒரசாத, உலவிரவு, மாணவன், பெரியார் குத்து... இது 2018-ன் வைரல் இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள்! #BestOf2018

ஒரசாத, உலவிரவு, மாணவன், பெரியார் குத்து... இது 2018-ன் வைரல் இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள்! #BestOf2018

ஒரசாத, உலவிரவு, மாணவன், பெரியார் குத்து... இது 2018-ன் வைரல் இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள்! #BestOf2018

ஒரசாத, உலவிரவு, மாணவன், பெரியார் குத்து... இது 2018-ன் வைரல் இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள்! #BestOf2018

ஒரசாத, உலவிரவு, மாணவன், பெரியார் குத்து... இது 2018-ன் வைரல் இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள்! #BestOf2018

Published:Updated:
ஒரசாத, உலவிரவு, மாணவன், பெரியார் குத்து... இது 2018-ன் வைரல் இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள்! #BestOf2018

யூ-டியூப் வந்த பிறகு சினிமா பாடல்களுக்கு இணையாக இண்டிபெண்டட் ஆல்பம் பாடல்களும் ஹிட் அடிப்பதுண்டு. பிளே லிஸ்ட் முதல் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வரை தவிர்க்க முடியாத இடங்களைப் பெற்று ரிபீட் மோடில் நம்முடன் பயணமும் செய்கிறது. 2018ல் தமிழில் பல ஆல்பங்கள் வெளிவந்து யூ-டியூப் ஹிட் லிஸ்டிலும் இடம் பிடித்தன. அப்படி ரிபீட் மோடில் ஒலித்த சில பாடல்கள் இங்கே.

ஒரசாத:

இந்த வருடத்தின் பலரின் காலர் டியூன் மற்றும் காதல் டியூனாக ஒலித்த செம ஹிட்டான பாடல் 'ஒரசாத'. 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, வெளியாகி பல மாதங்களாகியும் ரிபீட் மோடில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 'நீயும் என்ன நீங்கிப்போனா... நீல வானம் கண்ணீர் சிந்தும்... பேசாமத்தான் போகாதடீ... பாசாங்குதான் பண்ணாதடி...' என்று வரிகள் ஒரு பக்கம் வெயிட்டு காட்ட, விவேக்-மெர்வினின் பீட் இசை ஒரு பக்கம் மாஸ் காட்ட... பாடல்  முடியும் போது சட்டை கிழிந்து வெளியிலேயே இதயம் பறக்கிறது காதலிக்காக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராட்டி:

ஃபோட்டோ ஸ்டூடியொவில் தொடங்கி ஸ்டூடியோவிலேயே முடியும் ஒரு காதலை அழகாக காட்சிப்படுத்திய பாடல் இது. இந்தப் பாடலில் 'அடி எதுக்கு ஒன்ன பாத்தேன்னு நினைக்க வைக்கிறியே... மனசுக்குள்ள நிக்காம நீ மழையடிக்கிறியே' என்ற வரிகள் பல ஒன்சைட் லவ்வர்ஸ்க்கு 'க்ளோஸ் டூ த ஹார்ட்னு'தான் சொல்லனும். சிம்டாங்காரன், புள்ளினங்கால் ஆகிய பாடல்களுக்கு முன்னாடியே பாம்பே பாக்யா நெட்டிசன்களிடம் 'ராட்டி' மூலம் ஃபேமஸ். பெஞ்ச், சைக்கிள் பெல்னு தினுசா இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் பயன்படுத்தி சந்தோஷ் தயாநிதி மியூசிக்கையும் பின்னிருப்பார். முதல் தடவை கேட்கும்போதே காத்தோடு காத்தாக உங்களைக் கடத்தும் இந்தப் பாடல்.

கூவ:

இண்டிபெண்டட் மியூசிக்கை ப்ரொமோட் செய்ய ஜி.வி.எம்மின் இயக்கத்தில் வெளிவந்து ஹிட்டான பாடல்தான் கூவ. மதன் கார்க்கி வரிகள் எழுத, சிங்கர் கார்த்திக் மியூசிக்கில் சின்ன பொண்ணு பாட, டேன்சர் சதீஷ் டேன்சில் இப்பாடல் வெளியானது. 'ஒக்காந்து அழுதா மக்கித்தான் முடிவ! வா இன்னும் இருக்க கடக்க' என்று பாஸிட்டிவ் வைப்ஸ் வரிகளுடன் கேட்டவுடன் குத்து ஆட்டம்போட வைக்கும் பீட் இசையும், நடன அமைப்பும் இப்பாடலின் வெற்றிக்குக் காரணம். பாடல் பிரியர்களுக்கு மட்டுமல்ல, டான்ஸ் பிரியர்களுக்கும் இப்பாடல் மிகவும் பிடித்த ஒன்று.

உலவிரவு:

ஜி.வி.எம்மின் மற்றொரு இண்டிபெண்டட் ஆல்பம் இது. அதே சிங்கர் கார்த்திக்கின் இசையில் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியிருக்கிறது இந்த பாடல். ஜி.வி.எம் தன் ஃபார்முலாவை இந்தப் பாடலிலும் தூவி இருப்பார். 'காதலி நீ என்னோடு வா உலவிரவு' - என்று டோவினோ தாமஸீம், டிடியும் கைபேசி வீசி, கைவீசி காதலோடு நடந்த இரவு பொழுதுகள் நிறைந்தது இந்த உலவிரவு. ஜி.வி.எம்மின் இயக்கமும், கார்த்திக்கின் கிட்டாரும் உங்கள் காதலிகளோடு உங்களையும் உலவிரவு செல்ல சொல்லும். தூரத்துக் காதல் என் கோப்பை தேநீர் அல்ல...

போதை கோதை:

இந்த ஆண்டில் அதிகம் டிரெண்டிங்கான ஆல்பம் ஜி.வி.எம் இயக்கியதுதான். கூவ, உலவிரவு வரிசையில் 'போதை கோதை'யும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. மீண்டும் கார்த்திக்கின் இசையில், மதன் கார்க்கி வரிகள் எழுத, சஞ்சித் ஹெட்ஜ் பாடியுள்ளார். அதர்வாவும், ஐஸ்வர்யா ராஜேஸூம் பாடலில் அவ்வளவு அழகு. அந்த கெமிஸ்ட்ரி அழகிலும் அழகு. வரிகளும், ஒளிப்பதிவும் பாடலுக்கு இன்னும் எக்ஸ்ட்ரா அழகு. உன் குழலெழிலில், அக்குழல் மறக்க, உன் காதல் போதும் பெண்ணே கிறுகிறுக்க என்று கிரங்கடித்து, முத்தம் கேட்டு, காதல் போதையேற்றும் போதை கோதைக்கு எல்லாரும் அடிமைதான்.

மாணவன்:

இண்டிபெண்டட் மியூசிக் பிரியர்களுக்கு ஹிப்ஃபாப் தமிழா என்றுமே ஸ்டார்தான். யூ-டியூப் வழியாக சினிமா துறைக்குள் நுழைந்தவர் இவர். பிஸியாக படங்களுக்கு பாடல் போட்டுக்கொண்டிருந்தாலும், இண்டிபெண்டட் ஆல்பங்களையும் தன் ஃபேன்ஸ்க்கு ட்ரீட்டாக கொடுத்துவிடுவார் ஆதி. அப்படி இந்த வருடம் வெளியாகி ஹிட் அடித்த பாடல்தான் 'மாணவன்'. டாக்குமென்டரி மாதிரியான வடிவத்தில் தொடங்குகிறது இந்த ஆல்பம். 'தோற்றாலும் வென்றாலும் நின்றாலே போதும், நம்பிக்கை இருந்தாலே கைகூடும் யாவும்' என்று மாணவர்களை உற்சாகப்படுத்தும் வரிகளோடு இந்தப் பாடல்களை எழுதி, இசையமைத்திருக்கிறார் ஆதி.

பெரியார் குத்து:

ரீசண்ட் டிரெண்டிங்க் மாஸ் ஆல்பம்னா அது பெரியார் குத்துதான். கருப்பு சட்டை, பெரியார் சிலை என்று பாடல் முழுதும் அசத்தல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆட்சியாளர்களை கலங்க வைக்கும் மதன் கார்க்கியின் வரிகளுடன் சிம்பு பட்டையைக் கிளப்பியிருப்பார். என்ன ராசா...?

இணையத்தில் மாஸ்காட்டிய இந்தப் பாடல்களை வைத்து வந்த மீம்ஸ்களுக்கும் கணக்கில்லை. எதாவது பாடலை மிஸ் பண்ணியிருந்தா கமென்ட் பண்ணுங்க மக்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism