Published:Updated:

இசை கல்லூரி, 'திருக்குறள்' திறமை, எஸ்.ஜானகி ஆசீர்வாதம்... 'கண்ணம்மா கண்ணம்மா' ஜோதி இப்போ ரொம்ப பிஸி!

`கண்ணம்மா கண்ணம்மா' பாடல் மூலம் புகழ்பெற்றார் பாடகி ஜோதி. நம்பிக்கை எனும் ஒற்றை வெளிச்சம் மூலம் பிரகாசமாக மின்னிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி இவர். இசை என்றால் ஜோதிக்கு அத்தனை பிரியம். எந்தப் பாடல் பாடச் சொன்னாலும் உடனே பாடுகிறார். நடிகர் ஜிவி பிரகாஷ் `அடங்காதே' படத்திற்கு ஜோதி பாட்டு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். ஜோதியைச் சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றோம்.

இசை கல்லூரி, 'திருக்குறள்' திறமை, எஸ்.ஜானகி ஆசீர்வாதம்... 'கண்ணம்மா கண்ணம்மா' ஜோதி இப்போ ரொம்ப பிஸி!

வீடு முழுக்க ஜோதியின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. ஜோதியின் வெளிச்சமாய் இருக்கிறார் அவருடைய அம்மா கலை. அம்மாவை அணைத்துக் கொண்டு செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

ஜோதியிடம் நம்முடைய பிறந்தநாளைக் கூறினால் இந்த ஆண்டில் நம் பிறந்ததினம் எந்த நாளில் வரப் போகின்றது என்பதைத் துல்லியமாகச் சொல்லி வியக்க வைக்கிறார். எப்படி இது சாத்தியம் என ஜோதியின் அம்மா கலையிடம் கேட்டோம்.

``எப்படி அவளுக்கு இது தெரியுதுன்னு எங்களால் கண்டுபிடிக்க முடியலை. லீப் ஆண்டெல்லாம் அவளால் சரியாகக் கணிக்க முடியாது. வருஷத்துக்கு எத்தனை நாள்கள்னு கேட்டா பாப்பாவால் சொல்ல முடியாது. இதுவும் கடவுள் கொடுத்த வரம்னுதான் நினைக்கிறோம். இது மட்டுமல்ல, ஜோதியிடம் இன்னொரு திறமையும் இருக்கு. திருக்குறளில் உள்ள 133 அதிகாரத்தில் நீங்க எந்த அதிகாரம் சொன்னாலும் அதற்கு அடுத்த தலைப்பை மனப்பாடமா சொல்லுவா. அதோடு நீங்களாகவே ஒரு அதிகாரத்தைச் சொன்னீங்கன்னா அதிலுள்ள திருக்குறளை பாட்டாவே பாடிக்காட்டுவாள் என்று சொன்னாங்க. பாடகியாகவே நமக்குத் தெரிந்த ஜோதிக்குள் இருந்து திறமைகளை வியந்து பார்த்துக் கொண்டிருக்க ஜோதி பேசத் தொடங்கினார். 

"இப்போ இசை கல்லூரியில முதலாம் ஆண்டு படிச்சிட்டு இருக்கேன். எனக்கு இசைனா ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்து பாட்டு கத்துக்கிறேன். நான் கீ-போர்டு, வயலின் இரண்டும் வாசிப்பேன். வீட்டுல சும்மா இருக்கிறப்போ ஏதாவது ஒரு பாட்டு கேட்டு அதை வாசிக்க முயன்று கொண்டே இருப்பேன். அம்மா சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸ் சொல்லிக் கொடுப்பாங்க. பொதுவா என் மியூசிக் டீச்சர்ஸ் சொல்லிக் கொடுக்கிறதை கவனமா கேட்பேன். அதை அப்படியே வாசிக்க முயல்வேன்'' என்றவரிடம் டைப்பிங் எப்படித் தெரியும்னு கேட்டோம்.

இசை கல்லூரி, 'திருக்குறள்' திறமை, எஸ்.ஜானகி ஆசீர்வாதம்... 'கண்ணம்மா கண்ணம்மா' ஜோதி இப்போ ரொம்ப பிஸி!

"எங்க வீட்டுல கம்ப்யூட்டர் இருக்கு. நான் என்ன சொல்லிக் கொடுத்தாலும் அதைக் கத்துப்பேன். அதே மாதிரிதான் டைப்பிங்கும் கத்துக்கிட்டேன். ABCD தலைகீழாகவும் என்னால அடிக்க முடியும்!" என வெள்ளந்தி சிரிப்பு சிரிக்கிறார். ஜோதியிடம் பிரபல பாடகி எஸ்.ஜானகியை உனக்கு ரொம்பப் பிடிக்குமான்னு கேட்டோம்.

``எனக்கு ஜானுன்னா உயிர். ஜானு மேல ரொம்பப் பிரியம் வைச்சிருக்கேன். எனக்கு ஜானு மாதிரி பெரிய பாடகியாகணும்னு ஆசை. ஜானுவை நெல்லூருக்குப் போய் பார்த்துட்டு வந்தேன். அவங்ககிட்ட உங்க பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு சொன்னேன். அவங்க என்னை ஆசீர்வாதம் பண்ணாங்க. ஜானு குரல் ரொம்பப் பிடிச்சிருக்கு என்றவர் அடிக்கடி ஜானகி பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.

`அடங்காதே' படத்தில் ஜிவி பிரகாஷ் அண்ணா பாட்டுப் பாட வாய்ப்பு கொடுத்தாங்க. சைந்தவி அக்கா எப்படிப் பாடணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க சொல்லிக் கொடுத்ததை கேட்டுட்டு நானே பாடினேன். பாடி முடிச்சதும் எல்லோரும் கைதட்டினாங்க. ஜிவி அண்ணா சூப்பரா பாடினீங்கன்னு சொன்னாங்க என்றவரிடம் எதிர்கால ஆசை குறித்துக் கேட்டோம். ஜானு மாதிரி எல்லா கேட்டகரியிலும் பாடணும்னு ஆசை. வெளிநாட்டுக்கு டிராவல் பண்ணி பாடணும். ஸ்காட்லாண்டில் கல்சுரல் ஈவன்ட்ல பாடுறதுக்காக ஜூன் 14-ம் தேதிக்குப் போறேன்.. நீங்களும் வர்றீங்களா?" எனச் சிரிக்கிறார், சிங்கர் ஜோதி.