Published:Updated:

நீலமல காட்டுக்குள்ள உசுர உறிஞ்சுறாளே செல்லம்மா ! ஜோக்கர் இசை விமர்சனம்

நீலமல காட்டுக்குள்ள உசுர உறிஞ்சுறாளே செல்லம்மா ! ஜோக்கர் இசை விமர்சனம்
நீலமல காட்டுக்குள்ள உசுர உறிஞ்சுறாளே செல்லம்மா ! ஜோக்கர் இசை விமர்சனம்

நீலமல காட்டுக்குள்ள உசுர உறிஞ்சுறாளே செல்லம்மா ! ஜோக்கர் இசை விமர்சனம்

பாடல்  : என்னங்க சார் உங்க சட்டம்?
குரல்கள்: அறந்தை பாவா, பெருமாள்
வரிகள் : யுகபாரதி

பாடல்களைக் கேட்டுக்கொண்டே படியுங்கள்! 

சரியான நேரத்தில் வெளிவந்திருக்கிற, மிகச் சரியான பாடல். ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிப்பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருக்க, இது மக்களுக்கான பாடலாக ஒலிக்கிறது.  ஆப்பிரிக்க கருப்பின அரசியலின் இசை வடிவமான ப்ளூஸ் இசையின் பாதிப்பு நிறைந்ததாக இருக்கிறது. இப்பாடல் பேசும் அரசியலுக்கு அதுதான் சிறந்த வடிவமும்கூட. “சொகுசுகாரு தெருவுல / வெவசாயி தூக்குல / வட்டிமேல வட்டிபோட்டு / அடிக்கிறீங்க வயித்துல, நல்ல தண்ணி கெடைக்கல / நல்ல காத்து கெடைக்கல / அரசாங்க சரக்குலதான் / கொல்லுறீங்க சனங்கள”  என்று வரிக்கு வரி விளாசியிருக்கிறார் யுகபாரதி. பாடும் குரலில் தொனிக்கும் ‘சாமான்யத் தன்மை’ பாடலை மேலும் அழுத்தமுள்ளதாக்குகிறது.  ஆரம்பத்திலும், இறுதியிலும் கோரஸ்குரலான ‘ஏய்ய்.. ஏய்...’ பாடல் முடிந்தபின்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பாடல்  : ஓல ஓல குடிசையில 
குரல்கள்: முருகவேல், கார்த்திகா வைத்யநாதன்
வரிகள் : யுகபாரதி

மென்மையான வருடலாக புல்லாங்குழலிசையுடன் ஆரம்பிக்கிற பாடல். பல்லவிக்கு முன் வரும், அந்தக் குழலிசை ஷான் ரோல்டனின் பெயர் சொல்கிறது. இரண்டு வரிகளுக்குப் பின் வருகிற தபேலா பாடலுக்குள் இழுக்கிறது. மாறிக்கொண்டே இருக்கிற மெட்டு நெருடலாக இருந்தாலும், பின்னணி இசையில் தபேலாவைக் கேட்டு நாளானதால் ரசிக்க வைக்கிறது. ‘மருத்துவச்சி பில்லு மிச்சம்’ என்றெல்லாம் கிராமத்து பேச்சு வழக்கிலேயே இரண்டாம் பல்லவியை எழுதியிருக்கிற யுகபாரதியின் ‘வேர்வையில நூலெடுத்து சேல செஞ்சு தருவேன்’ வரிகளுக்கு இங்கிருந்தே கைகுலுக்கல்கள்!

பாடல்  :  ஜாஸ்மினு
குரல்கள்: சுந்தரய்யர்
வரிகள் : யுகபாரதி

துள்ளலான பாடல். சில ஆல்பங்களில் திடீரென்று ஒரு பாட்டு எதிர்பார்க்காமல் ஹிட்டாகும் அல்லவா? அந்த ஜானர்! காதலியின் கால் பித்த வெடிப்பையும் தேமலையும் ரசிச்சு ஆடும் அப்டேடட் காதல் ஆட்டம்! அந்த எண்டிங்.. வாவ்!


பாடல்  :  செல்லம்மா
குரல்கள்: பெருமாள், ஷான் ரோல்டன், லலிதா சுதா
வரிகள் : ரமேஷ் வைத்யா

நீரோடைபோல சீரான பாடல். ‘செலவாகிப் போகாதே ச்செல்லம்மா..’ என கொஞ்சும் லலிதா சுதாவின் குரலும், வரிகளும் என்னமோ செய்கிறது. ‘நீலமல காட்டுக்குள்ள நீயும் நானும் பாத்துவெச்ச முட்டையெல்லாம் பட்சிகளா பறக்குதே, ‘பஞ்ச நில நெடுவானம் மேகமா நிறையுது... உன் மொகத்த சிதையாம வேகமாக வரையுது!” வரிகளால் ஓவியம் தீட்டுகிறார் கவிஞர் ரமேஷ் வைத்யா.


பாடல்  :  ஹல்லா போல்
குரல்கள்: ஷான் ரோல்டன், கல்யாணி நாயர்
வரிகள் : யுகபாரதி

மொத்த ஆல்பத்திலும், மற்ற பாடல்களிலிருந்து வேறுபட்டு நிற்கிற மெட்டு. கிதாரின் அதிர்வு ஒரு க்ளைமேக்ஸ் காட்சிக்கான அல்லது கதைத் திருப்பத்திற்கான உணர்வையும் காட்சிகளையும் மனதில் உருவாக்குகிறது.  இசை. பீட்-களில் இளமை தெறிக்க, வரிகளில் புரட்சி பேசும் பாடல். ஒருவேளை பற்றிக்கொண்டால், இளைஞர்கள் தலையில் வைத்து.. ஸாரி.. (ஹெட்ஃபோனைக்) காதில் வைத்துக் கொண்டாடுவார்கள்!


இந்த ஆல்பத்தின் மிக முக்கியமான சிறப்பு குரல்கள் அனைத்தும் புத்தம் புதிதாக ஒலிப்பது. இயக்குநர் ராஜு முருகன் திரையில் உருவாக்க விரும்பும் அசல்தன்மையை இந்த ஆல்பத்தின் இசையும் பாடுகின்ற குரல்களும் சாத்தியமக்கியிருக்கின்றன. மன்னர் மன்னன் தீம்: ஜான் ரோல்டன் தனித்துவமாக வெளிப்படும் இடம். குக்கூவில் சந்தோஷ் நாராயணன், இதில் ஷான் ரோல்டனா என்று பேட்டிகளில், பலர் ராஜுமுருகனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பாடல்களில் பதில் சொல்லியிருக்கிறார்.  இசை என்கிற கோட்டில் சந்தோஷ் நாராயணனும், ஷான் ரோல்டனும் கைகோர்த்துக் கொண்டு பயணிக்கிறார்கள் என்பது புரிகிறது.

வெல்கம் ஜோக்கர்!
 

அடுத்த கட்டுரைக்கு