Published:Updated:

80-90களில் மாஸ் ஹிட்டடித்த இந்த இந்திப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? #HitHindiSongs

80-90களில் மாஸ் ஹிட்டடித்த இந்த இந்திப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? #HitHindiSongs
80-90களில் மாஸ் ஹிட்டடித்த இந்த இந்திப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? #HitHindiSongs

இந்திப் பாடல்களை தமிழ்ப் பாடல்கள் வென்ற காலத்திலும், இந்தியிலிருந்து வரும் சில பாடல்கள் அவ்வப்போது வந்து தெறிமாஸ் ஹிட்டடித்துக் கொண்டிருந்தது. அப்படியான சில பாடல்களின் தொகுப்பு:

தீதி தேரா தேவரு தீவானா 

ஹம் ஆப்கே ஹெய்ன் கோன். 1994ல் வெளியான பாடல். இசை ராம் லக்‌ஷ்மண். சல்மான் கான் மற்றும் மாதுரி தீக்‌ஷித் நடித்த இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் ஹிட் என்றாலும் இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தது. ‘தீதி தேரா தேவரு தீவானா’ பாடல் வரிகள் இசை என்று மொழி தெரியாதவர்களும் பாடிக் கொண்டிருந்த பாடல்.

பாபா கேஹ்தே ஹேன் படா நாம் கரேகா

கயாமத் சே கயாமத் தக் (1988) அமீர்கானுக்கு பெரிய என்ட்ரி கொடுத்த படம். படத்தின் இசை ஆனந்த் மிலிந்த். ‘பாபா கேஹ்தே ஹேன் படா நாம் கரேகா..’ என்று அமீர்கான் ஆடிப்பாடும் பாடல் தெறி ஹிட்.

இதே படத்தில் வெளிவந்த ‘ஏ மேரி ஹம்சஃபர்’ பாடலும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. அமீர்கான், ஜூஹி சவ்லா நடித்த இந்தப் பாடலின் இசையில், அவ்வப்போது மாறும் தபேலா மிகவும் கவனிக்க வைத்தது.

ஏக் தோ தீன்

தேஸாப் (1988). அனில் கபூர், மாதுரி தீக்‌ஷித் அல்கா யா(க்)னிக் பாடிய இந்தப் பாடல் அடித்த ஹிட்டுக்கு அளவே இல்லை. ஏக் தோ தீன் என்ற இந்தப் பாடல் மாதுரியின் ஆடலுக்கு மட்டுமல்லாமல், ஒன்று, இரண்டு என்ற பாடல் வரிகளும் அப்போது பெரிய ட்ரெண்டடித்த சமாச்சாரம். இரண்டாம் இடையிசையில் நிறுத்தி வேறொரு ஃபீலுக்குக் கொண்டுபோய் மீண்டும் அதே ஸ்பீட் எடுக்கும் பாடல்.  

சோளி கே பீச்சே

1993 மாதுரி தீக்‌ஷித் ஆடிய இந்தப் பாடல், கொலவெறி ஹிட்டுக்கெல்லாம் அப்பனாக இருந்த ஹிட். இடையிசை ஒன்றும் கவராது என்றாலும் பாடலின் மெட்டும், இரட்டை அர்த்தத்தில் இரண்டாவது அர்த்தத்திலேயே ஆரம்பிக்கும் பாடலும் செம ஹிட்டடித்தது.

தக் தக் கர்னே லகா...

பேட்டா (1992). எங்க சின்னராசாவின் இந்தி வெர்ஷன். எங்க சின்னராசா எதன் மூலம் என்று பார்த்தால் அது கன்னடம், தெலுங்கு என்று எங்கெங்கோ போகும். இப்போது அதெல்லாம் விட்டுவிடுவோம். இந்தப் பாடல் செம ஹிட். கேட்டுவிட்டு ‘அடேய் இது தமிழ்பாட்டுடா’ என்கிறீர்களா? எட்டுத்திக்கிலுமிருந்து கலைச்செல்வங்கள் சேர்த்துக் கொண்டிருந்த தேவா இசையில் 1994ல் வெளிவந்த வாட்ச்மேன் வடிவேலு படத்தில் ஆனந்தராஜ், கஸ்தூரி ஆடுவார்களே.. ‘கன்னத்தில் கன்னம் வைக்க...’ ஆங்.. அதான் ராசா.. அதேதான். ஆனால் என்ன.. அவர் போட்ட அதே மெட்டில் 2 வருடம் முன்பே போட்டுவிட்டார்கள்.

தூ ச்சீஸ் படி ஹே மஸ்த் மஸ்த்

மோஹ்ரா (1994) ரவீனா டாண்டனின் கலக்கலான நடனத்தில் ‘டிப் டிப் பர்ஸா பானி’ என்றோரு பாடலும் இதில் ஹிட். ஆனால் அதைவிட ஹிட்டான பாடல் இது. ‘தூ ச்சீஸ் படி ஹே மஸ்த் மஸ்த்..’ ஆரம்பம் முதல் ஒரு மென்மையான இசைதான் இருக்கும். ஆனாலும் ஸ்பீடான மெட்டுக்கள் உடனே பற்றிக் கொள்வது போல பற்றிக் கொண்டது இந்தப் பாடல். விஜூ ஷா இசை. ஆரம்பத்திலும் இடையிலும் வரும் ‘பா.. நீ.. சா..’ ஆலாப் அருமையாக இருக்கும்.

 தேக்கா ஹே பெஹ்லி பார்..

(1991) சாஜன் எஸ்.பி.பி, அல்கா யா(க்)னிக் பாடிய இந்தப் பாடலுக்கு இசை - நதீம் ஷ்ராவன். பல்லவியின் ஒவ்வொரு வரிக்குப் பின்னும் வரும் அந்த இசை ஸ்பெஷல். அதற்கு மாதுரியின் நடனம் ஸ்பெஷலோ ஸ்பெஷல். 

பாஸிகர் (1993) - ஷாருக்கான், கஜோல்  நடித்த இந்தப் படத்தின் பாடல்களும் ஹிட். இந்தப் பாடல் அவற்றில் முதன்மை ஹிட். அனு மாலிக் இசை. குமார் சானுவும், அல்கா யானிக்கும் பாடியிருப்பார்கள்.

துஜே தேகா தோ ஏ ஜானா சனம்

தில்வாலே துல்ஹனியே  லே ஜாயேங்கே (1995) படத்தின் பாடல்களைச் சொல்லாவிட்டால் எப்படி? ஷாருக்கான், காஜல் நடித்த இந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே ஹிட் ரகம்தான் என்றாலும் குமார் சானு, லதா மங்கேஷ்கர் குரல்களில் வந்த இந்தப் பாடல் ஒரு படி மேல். இப்போது கேட்டாலும் செம ஃபீல் கொடுக்கும் பாடல்.

தும் பாஸு ஆயே..

1998ல் வெளியான இந்தப் படத்தின் பெயரை தமிழ் காமெடி காட்சிகளில் கேட்டிருப்பீர்கள்... குச் குச் ஹோத்தா ஹை. ஷாருக், கஜோல், ராணி முகர்ஜி, சல்மான் என்று நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்த படம்.

ஏ லடுகி கோ தேகாதோ ஏஸா லகா

1942 எ லவ் ஸ்டோரி (1994) அனில் கபூர் மனீஷா கொய்ராலா நடித்த இந்தப் படத்தின் ‘ஏ லடுகி கோ தேகாதோ ஏஸா லகா’ பாடல் பலரின் ஆல் டைம் ஃபேவரைட். ஸ்பீடான மெட்டு, அதிரடி இசை என்று எதுவும் இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை. ஏற்ற இறக்கங்கள் இன்றி ஒரே மாதிரியான இசைதான். ஆனாலும்... அட்டகாசமான உணர்வைத் தரும். இதுவரை கேட்டதில்லையென்றால்.. நிச்சயம் கேளுங்கள்.

 உங்களைக் கவர்ந்த ஹிந்திப்பாடல்களை கமென்ட்டில் பட்டியலிடுங்களேன்..

-பரிசல் கிருஷ்ணா

அடுத்த கட்டுரைக்கு