Election bannerElection banner
Published:Updated:

இமான், தாமரை, பாடகி லக்ஸ்மி - ட்ரிபிள் செஞ்சுரி அடித்த செந்தூரா! #MesmerizingMusic

இமான், தாமரை, பாடகி லக்ஸ்மி - ட்ரிபிள் செஞ்சுரி அடித்த செந்தூரா! #MesmerizingMusic
இமான், தாமரை, பாடகி லக்ஸ்மி - ட்ரிபிள் செஞ்சுரி அடித்த செந்தூரா! #MesmerizingMusic

இமான், தாமரை, பாடகி லக்ஸ்மி - ட்ரிபிள் செஞ்சுரி அடித்த செந்தூரா! #MesmerizingMusic

பெண் குரல்களைத் தேர்வு செய்வதற்கென்று, மூளையில் தனியாக ஒரு பகுதிக்குப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார் இமான். அப்படி இவர் தேர்வு செய்து, அவர்களது பாடல் வந்துவிட்டால், கொஞ்சநாளைக்கு விடாமல் நம் மனதுக்குள் அந்தப் பாடல்தான் கேட்டுக்கொண்டே இருக்கும். லேட்டஸ்ட்: போகன் படத்தின் செந்தூரா.. செந்தூரா... 

பேக்பைப்பர் இசையில் ‘செந்தூரா’ என்ற வரிகளின் மெட்டிலேயே ஆரம்பிக்கிறது பாடல். வழக்கம் போல் முழு வார்த்தையில் ஆரம்பிக்காமல், வித்தியாசமாக எழுதியிருக்கிறார் தாமரை. ​​​​​ அனுபல்லவியில் ‘நிதா நிதா  நிதானமாக ’- ‘நில்லா நில்லா நில்லாமல் ஓடி’  என்று  வார்த்தைகளை உடைத்துப், போட்டிருக்கிறார். கொஞ்சம் வித்தியாசமாகவும், பாடலின் மூடுக்கு ஏற்றமாதிரியும் இருக்கிறது அந்தத் துவக்கம். அனுபல்லவி முடியும்போது ‘தோன்றுதேஏஏஏ’ வில் வரும் சங்கதி ‘யார் இந்தப் பாடகி என்று கேட்க வைக்கிறது. பிறகு சடாரென்று... செந்தூரா.. என்று கணீர்குரல் துவங்குகிறது.

பல்லவியைத் தொடர்ந்து இடையிசை ஏதுமில்லாமல் உடனே வருகிறது சரணம். இமான் இதற்கு முன் இப்படி முயன்றிருக்கிறாரா என்று நினைவில் இல்லை. சரணம் முடிந்து வரும் 2.07 நிமிடத்தில் துவங்கும் இடையிசை ஒரு அலைபோல வந்து முடிகிறது. இடையிசையின் நொடிகள் குறைவே.. அதுவும் சட்டென்று பாடலுக்குத் தாவுவது கவர்கிறது. ‘நீயின்றி இனிஎன்னால் இருந்திடமுடிந்திடுமா’ என்ற வரிகள் மெட்டுக் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறதென்றால்... எப்படி தாமரை அப்படிச் சிந்தித்திருப்பார் என்று வியப்பாய் இருக்கிறது. சபாஷ்.

3.09ல் பாடல் முடிந்துவிட்ட உணர்வு. சட்டென்று ஒரு மேஜர் அதிகமாக, இசை துவங்குவது ஒட்டாமல் போய்விட்டது. முழுப்பாடலையும் ஒரே ரிதத்தில் கொண்டு போயிருக்கலாம் என்று தோன்றுகிறது. 

முன்னரே சொன்னதுபோல தாமரை... வரிக்கு வரி வாவ் சொல்ல வைக்கிறார். ‘நடக்கையில் அணைத்த வாறுபோக வேண்டும். விரல்களைப் பிணைத்த வாறுபேச வேண்டும்’ என்று செய்யுள் பாணியில் ஒரு வார்த்தையை மெட்டுக்கேற்ற மாதிரி பிரித்தெழுதியிருப்பது.. சிறப்பு! வசீகரா தொடங்கி எத்தனை பாடல்கள், இதே ஜானரில் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் புதிய வார்த்தைகளோடு புதிய அனுபவம் தருகிறார் தாமரை. இதில் மாண்பாளன், செங்காந்தள் என்ற தமிழ் பேசும் வார்த்தைகள் தரும் மகிழ்வும் சரி.. ‘மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா? / மரத்தின் அடியில் மணிக் கணக்கினில் கதைப்போமா? / பாடல் கேட்போமா ஆடிப் பார்ப்போமா.. மூழ்கத்தான் வேண்டாமா? / யாரும் காணாத இன்பம் எல்லாமே கையில் வந்தே விழுமா? / நீ இன்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா?” என்ற வரிகள் தரும் காதல் உணர்வும் சரி.. தாமரையின் ஸ்பெஷாலிட்டி!

  ரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பேட்டர்னில் இருந்தாலும் சளைக்காமல் எழுதி சாதித்திருக்கிறது தாமரையின் பேனா. குரல் யாரென்று பார்த்தால்.. லக்ஸ்மி சிவநேஸ்வரலிங்கம் (Luksimi Sivaneswaralingam) என்றிருந்தது. முதல் பாடலாம்! நம்பமுடியவில்லை. முதல் பத்தியில் சொன்னது போல, இமானின் இசையில் பெண்குரல்கள் என்று ஆய்வே நடத்தலாம் போல! ‘ஜிங்குனமணி’க்கு சுனிதி சௌகான், ‘கண்ணக்காட்டு போதும்’ பாடலுக்கு ஷ்ரேயா கோஷல், ‘கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை’க்கு நந்தினி ஸ்ரீகர் என்று இந்தப் பாடலுக்கு இவர்தான் என்பதில், இமான் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் நான் அசந்தது.. ‘என்னமோ ஏதோ' படத்தில் புதிய உலகை புதிய உலகைத் தேடிப்போகிறேன்’ வைக்கம் விஜயலக்‌ஷ்மியின் குரல். அப்படி ஓர் உருக்கமான பாடலைப் பாடிய குரலை வைத்து, ‘சொப்பனசுந்தரி நான்தானே’ என்று அதிரிபுதிரியாகப் பாடவேண்டிய பாடலைக் கொடுத்து ஹிட்டாக்கினார். லக்ஸ்மி சிவநேஸ்வரலிங்கம் குரலும் அப்படி ஒரு யூனிக்கான குரல்.

லக்ஸ்மி சிவநேஸ்வரலிங்கம் பாட, இசை கோர்த்திருக்கிறார் இமான். இதே படத்தில், ‘வாராய் வாராய்’  என்றொலித்த ஷ்ரேயா கோஷலின் தேவதைக்குரலையும் தாண்டி, ‘செந்தூரா’வைத் தன் குரலால் கொண்டு சேர்த்திருக்கும் லக்ஸ்மிக்கும் வாழ்த்துகள்!

ஒரு மேட்சில், மூன்று பேரும் செஞ்சுரி போட்டதுபோல,  இமான், தாமரை, லக்ஸ்மி மூவரும் தங்கள் பங்குக்கு செஞ்சுரி அடித்த பாடல் இது.  இன்னும் இப்படி எங்களை அசத்துங்கள் இமான்!

பாடலுக்கு:-

[பாடல் வரிகள்]

இசை: இமான்
வரிகள்: தாமரை
குரல்: லக்ஸ்மி சிவநேஸ்வரலிங்கம்

நிதான நிதான நிதானமாக யோசித்தாலும் 
நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும் 
நீ தான் மனம் தேடும் மாண்பாளன் 
பூவாய் எனை ஏந்தும் பூபாலன் 
என் மடியின் மணவாளன் எனத் தோன்றுதே 

செந்தூரா... ஆ... ஆ,.. சேர்ந்தே செல்வோம் 
செந்தூரா... ஆ... ஆ.. 
செங்காந்தள் பூ உன் தேரா... ஆ... ஆ.. 
மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா 
செந்தூரா... ஆ... ஆ.. சேர்ந்தே செல்வோம் 
செந்தூரா... ஆ...ஆ... 
செங்காந்தள் பூ உன் தேரா... ஆ...ஆ.. 
மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா 

நடக்கையில் அணைத்த வாறு போக வேண்டும் 
விரல்களை பிணைத்த வாறு பேச வேண்டும் 
காலை எழும் போது நீ வேண்டும் 
தூக்கம் வரும் போது தோள் வேண்டும் 
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

செந்தூரா... ஆ... ஆ,.. சேர்ந்தே செல்வோம் 
செந்தூரா... ஆ... ஆ.. 
செங்காந்தள் பூ உன் தேரா... ஆ... ஆ.. 
மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா 
செந்தூரா... ஆ... ஆ..

மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா? 
மரத்தின் அடியில் மணிக் கணக்கினில் கதைப்போமா? 
பாடல் கேட்போமா பாடிப் பார்ப்போமா.. மூழ்கத்தான் வேண்டாமா? 
யாரும் காணாத இன்பம் எல்லாமே கையில் வந்தே விழுமா? 
நீ இன்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா? 

செந்தூரா... ஆ... ஆ,.. சேர்ந்தே செல்வோம் 
செந்தூரா... ஆ... ஆ.. 
செங்காந்தள் பூ உன் தேரா... ஆ... ஆ.. 
மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா 
செந்தூரா... ஆ... ஆ..


அலைந்து நான் களைத்துப் போகும் போது அள்ளி 
மெலிந்து நான் இளைத்துப் போவதாக சொல்லி 
வீட்டில் நளபாகம் செய்வாயா? 
பொய்யாய் சில நேரம் வைவாயா? 
நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா? 

செந்தூரா... ஆ... ஆ,.. சேர்ந்தே செல்வோம் 
செந்தூரா... ஆ... ஆ.. 
செங்காந்தள் பூ உன் தேரா... ஆ... ஆ.. 
மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா 
எய்தாயா..
கண்கள் சொக்க செய்தாயா... ஆ... கையில் சாய சொல்வாயா... யா... 
ஏதோ ஆச்சு வெப்பம் மூச்சு வெட்கங்கள் போயே போச்சு!

 -பரிசல் கிருஷ்ணா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு