Published:Updated:

KATRAAR: டிஜிட்டல் தளம் தொடங்கிய ஏ.ஆர் ரஹ்மான்; உலகத்தரத்தில் இருக்கும் அதற்குத் தமிழில் பெயர்!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதற்குத் தமிழில் 'கற்றார்' என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

KATRAAR: டிஜிட்டல் தளம் தொடங்கிய ஏ.ஆர் ரஹ்மான்; உலகத்தரத்தில் இருக்கும் அதற்குத் தமிழில் பெயர்!

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதற்குத் தமிழில் 'கற்றார்' என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

Published:Updated:
ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் போன்ற அடைமொழிகளைக் கொண்டு அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு  இன்று 56வது பிறந்தநாள். தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

இந்நிலையில் தன்னுடைய பிறந்த நாளான இன்று 'கற்றார்' (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் அது சார்ந்த கலைகளுக்கான ஒரு மேடை எனப்படுகிறது. இது இதன் மூலம் பல்வேறு கலைஞர்கள் தங்கள் படைப்புகளைப் பட்டியலிடவும், புதிய புராஜெக்ட்களில் ஈடுபடவும், தங்கள் திறமையைப் பணமாக்கவும் முடியும். அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு இந்தத் தளம் வழங்கவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானும் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை 'கற்றார்' தளம் மூலம் வெளியிடவுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இடம்பெறும். HBAR அறக்கட்டளையுடன் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இயங்குதளம் ஹெடெரா நெட்வொர்க் மூலம் இயங்குகிறது (Hosted). இந்த ‘கற்றார்’ என்ற  புதிய டிஜிட்டல் தளம் இன்னும் 15 நாள்களில் முழுமையான செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.