Published:Updated:

``உங்கள் அனைவருடனும் இணைய நாங்கள் விரைவில் வருவோம்"-புனே இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

ரஹ்மான்

புனேவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சிக் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோவுடன் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

Published:Updated:

``உங்கள் அனைவருடனும் இணைய நாங்கள் விரைவில் வருவோம்"-புனே இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

புனேவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சிக் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோவுடன் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

ரஹ்மான்

புனேவில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நேரில் காண ரசிகர்கள் குவிந்திருந்தனர். இரவு 10 மணியைத் தாண்டி நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் போலீஸார் ஏ.ஆர்.ரஹ்மானிடம் நிகழ்ச்சியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.

ரஹ்மான்
ரஹ்மான்

இதனைக் கண்ட  ரசிகர்கள் கூச்சலிட்டனர். பின்னர்  ஏ.ஆர்.ரஹ்மான்  போலீசாரின் வலியுறுத்தலுக்கு இணங்கி மேடையிலிருந்து இறங்கிச்சென்றார். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான செய்திகளும், வீடியோக்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தன. 

இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சித் தொடர்பான வீடியோவுடன் பதிவு ஒன்றைத் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் “நேற்றிரவு நீங்கள் எங்களுக்குக் கொடுத்த அன்பிற்கு நன்றி. கிளாசிக்கல் இசையின் தாயகமாக புனே இருப்பதில் ஆச்சரியமில்லை. மேடையில் உங்களுக்கு ‘ராக் ஸ்டார்’ தருணத்தைக் கொடுத்தோம்" என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருடனும் மீண்டும் பாட நாங்கள் விரைவில் வருவோம். மறக்கமுடியாத மாலைப் பொழுதை அளித்த புனேவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத்  தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.