Published:Updated:

`துன்பத்தை அனுபவிக்கிறேன்; நிறைய அழுகிறேன்!'- ரசிகர்களைக் கண்கலங்கவைத்த பாடகியின் பதிவு

கானப்ரியா

அதிகப்படியான மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, நிகழ்ச்சியின் இடையிலேயே திடீரெனப் பாட முடியாமல் திணறிப்போனார், அரியானா பாடகி கிராண்டே. இது, அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

அரியானா கிராண்டே
அரியானா கிராண்டே

பிரபல அமெரிக்கப் பாடலாசிரியர், பாடகி மற்றும் நடிகையுமான அரியானா கிராண்டே, கடந்த வாரம் மிஸ்ஸோரியில் நடைபெற்ற விழாவின்போது, பாடிக்கொண்டிருக்கும்போதே மனமுடைந்து அழுதது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் புதிய ஆல்பத்திற்காக, 'ஸ்வீட்னர் உலக சுற்றுப்பயணத்தில்' இருக்கும் அரியானா, அதிகப்படியான மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, நிகழ்ச்சியின் இடையிலேயே திடீரெனப் பாட முடியாமல் திணறிப்போனார். இது, அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Ariana Grande
Ariana Grande

இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் குறித்து தன் சமூக வலைதளப் பக்கங்களில், "சுற்றுலா மிருகத்தன்மையுடையது. வாழ்க்கையும் மிருகத்தன்மையுடையது. தினமும் என்னைச் சுற்றியுள்ள அன்பின் கடலுக்கு மிகப் பெரிய நன்றி. எங்கள் நிகழ்ச்சிக்கு வந்து எங்களை ஊக்குவிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். உலகின் சிறந்த இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. என் குரல் மற்றும் குழுவிற்கு நன்றி.

இசைக்கு நன்றி. என்னிடம் ஊறுகாய் தீர்ந்துவிட்டதை அறிந்து எனக்கு ஊறுகாய் கொண்டுவந்து கொடுத்த என் சுற்றுலா பேருந்து ஓட்டுநர் கர்ட்டுக்கு நன்றி. ஒவ்வொரு இரவும் ஆயிரக்கணக்கான மக்களுக்காகப் பாடும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என் கனவு நனவானதைப் போன்று உணர்கிறேன். நான் எனக்களித்த எல்லாவற்றையும் மிகத் தீவிரமாக உணர்கிறேன். நான் இன்னும் நிறைய சிறந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறேன். இதனால், சில நேரங்களில் நான் நிறைய அழவும் செய்கிறேன்" என்று பதிவுசெய்திருந்தார்.

ஆனால், நீங்கள் தனியாக இல்லை. நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். லவ் யூ
அரியானா கிராண்டே

மேலும், "இதை உங்களிடம் நான் பகிர்வதற்குக் காரணம், உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதால்தான். நீங்களும் ஏதோ ஒரு துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தால், உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்வது, உங்களைச் சுற்றியுள்ளவர்களைக் கவனித்துக்கொள்வது, அதே நேரத்தில் உங்களை நீங்களே கவனித்துக்கொள்வது போன்ற எல்லாவற்றையும் சமநிலைப்படுத்துவது கடினம் என்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென நினைத்தேன். ஆனால், நீங்கள் தனியாக இல்லை. நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். லவ் யூ" என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு, பொதுமக்களிடமிருந்து ஏராளமான கருத்துகள் குவிந்தன. பதிவிட்ட சிறிது நேரத்திலேயே இன்ஸ்டாகிராமிலிருந்து இந்த நீண்ட பதிவேற்றத்தை நீக்கி விட்டார் அரியானா. ஆனாலும், அரியானாவின் இந்நிலையைக் கண்டு கவலையில் உள்ளனர் ரசிகர்கள்.